ராகு-கேது பெயர்ச்சி-2022-மேஷம்
(அசுவினி , பரணி , கிருத்திகை 1 – ஆம் பாதம்)
தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்தில் இருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்ட மேஷ ராசி நேயர்களே , உங்கள் ராசிக்கு இது நாள் வரை 2 , 8 – ல் சஞ்சரித்த ராகு , கேது தற்போது ஏற்படும் ராகு- கேது பெயர்ச்சியால் திருக்கணிப்படி வரும் 12-4-2022 முதல் 30-10-2023 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியிலும் , கேது 7 – ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளனர் .
செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் சில நேரங்களில் உங்கள் நிதானத்தை இழக்க நேரிடும் என்பதால் எதை செய்வது என்றாலும் யோசித்து செய்வது நல்லது .

முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் தான் வீண் பிரச்சினைகளை தவிர்க்கமுடியும்.
குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது சிறப்பு .அதிலும் குறிப்பாக புதுமணத் தம்பதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது .
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும்.
உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி பிரச்சினை , மனைவிக்கு உடம்பு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.
பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும் . கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கையாலும் போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் வீண் இழப்பை தவிர்க்க முடியும் . பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது , முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் கவனமாக செயல்படுவது நல்லது கடந்த கால வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும் விரைவில் நல்ல மாற்றங்களை பெறமுடியும்.
தொழில் , வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்துச் சென்றால் நற்பலனை பெறுவீர்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே உங்கள் இலக்கை அடைய முடியும் . தொழில் வளர்ச்சிக்காக அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும் . நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் . பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தற்போது தவிர்த்து விட்டு இருக்கும் ஆடர்களை கை நழவாமல் பார்த்து கொள்வது நல்லது சனி 2023 முதல் 11 – ல் சஞ்சரிக்கும் காலத்தில் நல்லதொரு வளர்ச்சியை தொழிலில் அடைய முடியும்.
பணியில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் . உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருப்பதால் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து விட முடியும் . தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது . சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு மனைவி , பிள்ளைகளை விட்டு வெளியிடங்களில் தங்க நேரிடும் . உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை . புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் 2023 ஜனவரிக்கு பிறகு உங்களுக்கு ஒரு உயர்வான நிலை காத்திருக்கிறது.
பரிகாரம்:
ஒருமுறை பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை குங்கும அர்ச்சனை செய்து ஆராதியுங்ள்.முடிந்தால் , அரக்கு நிற புடைவை வாங்கி சாத்துங்கள் . பிறகு பிள்ளையார் பட்டி சென்று கற்பக கணபதியைக் கும்பிடுங்கள் . ஏழை முதியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள் . செவ்வாய்க் கிழமைகள்ல துர்க்கையைக் கும்பிடுங்கள் . வாழ்க்கை செழிக்கும்..