ராகு-கேது பெயர்ச்சி-2022-2023-ரிஷபம்-பலன்கள்-பரிகாரங்கள்
ரிஷபம்
(கிருத்திகை2 ,3 ,4 – ஆம் பாதங்கள்,ரோகிணி,மிருகசீரிஷம்1 ,2 -ஆம் பாதங்கள்)
சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே!!!
சர்ப கிரகமான ராகு ஜென்ம ராசியில் , கேது 7 – ல் இது நாள் வரை சஞ்சரித்ததால் பல நிம்மதி குறைவுகளை குடும்பத்தில் சந்தித்து வந்த உங்களுக்கு தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் திருகணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12 -4-2022 முதல் 30-10-2023 வரை ராகு ஜென்ம ராசிக்கு 12 – ஆம் வீட்டிலும் , கேது 6 – ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளனர்.

இதனால் உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றங்கள் உறுதியாக ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும் .
குடும்பத்தை விட்டுபிரிந்து இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் இணையும் நிலை உண்டாகும்.உற்றார் உறவினர்களிடம் இருந்த மனகசப்புகள் விலகி சுமுகநிலை நிலவும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும் .
உங்கள் பலம் அதிகரித்து இது வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக மறையும்.
உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும்.அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆற்றல் உண்டாகும்.
கடந்தகால அலைச்சல் டென்ஷன்கள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இருந்து வந்த மருத்துவ செலவுகள் மறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மன நிம்மதி உண்டாகும்.
பணவரவுகள் மிகச்சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும் . திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும்.மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் . கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும் பேச்சில் நிதானத்துடன் இருப்பது உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.சிலருக்கு அசையும்- அசையா சொத்துகள் வாங்கக் கூடிய யோகம் அமையும் புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும் , மகிழ்ச்சியும் ஏற்படும் . எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும்,பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும் . வெளியூர் , வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும் புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் . உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதிலும் திறம்பட செயல்படமுடியும்.
தொழில் , வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருப்பதால் லாபங்கள் பெருகும்.புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும் அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் , வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் புதிய ஆடர்கள் கிடைத்து லாபத்தை அடையமுடியும் தொழில்ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்:
ஒருமுறை பரிக்கல் , சிங்கர்குடி , பூவரசன்குப்பம் நரசிம்மர்களை ஒரே நாள்ல தரிசிச்சுட்டு வாருங்கள்.பிறகு ஸ்ரீரங்கம் சென்று பெருமாள் , தாயார் , கொடிமர கருடனை ஆராதியுங்கள் . வெள்ளிக் கிழமைகள்ல மகாலக்ஷ்மியை வணங்குங்கள் ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு உதவுங்கள்.