Thursday, March 30, 2023
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-2023ராகு கேது பெயர்ச்சி-2022-2023-சிம்மம்-பலன்கள்-பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி-2022-2023-சிம்மம்-பலன்கள்-பரிகாரங்கள்

ASTRO SIVA

google news astrosiva

சிம்மம்
( மகம் , பூரம் . உத்திரம் 1 + -ஆம் பாதம் )

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும் , எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும்.விளங்கும் சிம்ம ராசி நேயர்களே!!!

சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு 4 , 10 – ல் சஞ்சரிக்கும் ராகு கேது தற்போது ஏற்படும் இடபெயர்ச்சி மூலம் திருக்கணிதப்படி வரும் 12-4-2022 முதல் 30-10-2023 வரை ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3 – ஆம் வீட்டில் கேதுவும் , 9 – ஆம் வீட்டில் ராகுவும் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பாகும்.

ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி வரும் 17-1-2023 முடிய உங்கள் ராசிக்கு ருண , ரோக ஸ்தான மான 6 – ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள்.

ராகு கேது பெயர்ச்சி-2022-2023-சிம்மம்

உங்களுக்கு இதுநாள் வரை இருந்த அலைச்சல்கள் குறைந்து மன நிம்மதி ஏற்படும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் உற்றார் – உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றா லும் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. கடந்தகால கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடைவதால் பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.

உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக இருக்கும்.கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் கைகூடுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுபகாரியங்கள் தற்போது தடைப்பட்டாலும் 2023 ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கைகூடும்.கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொன் , பொருள் சேரும் . சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டு . புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் யாவும் குறையும்.

ராகு கேது பெயர்ச்சி-2022-2023-சிம்மம்
ராகு கேது பெயர்ச்சி-2022-2023-சிம்மம்

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும்.திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை அடையமுடியும் . எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும்.எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறை வேறும்.பயணங்களால் அனுகூலம் ஏற்படும் . புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும்.

தொழில் வியாபாரத்தில் சிறப்பான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும்.அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும்.வெளியூர்- வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும்.போட்டி பொறாமைகள் மறையும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

பரிகாரம்:

மந்திராலயம் சென்று ராகவேந்திர மகானை வணங்குங்கள்

பஞ்சவடி சென்று அஞ்சுமுக அனுமனை ஆராதியுங்கள்.

வியாழக்கிழமைகள்ல சிவாலயத்துல உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள் .

ஏழை முதியவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular