Tuesday, May 21, 2024
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-2023ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2022-2023-துலாம்-பலன்கள்-பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2022-2023-துலாம்-பலன்கள்-பரிகாரங்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

துலாம்

( சித்திரை 3,4 – ஆம் பாதங்கள் , சுவாதி , விசாகம் 1 , 2 , 3 – ஆம் பாதங்கள் )

முன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே!!!

உங்கள் ராசிக்கு 2 , 8 – ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்களான ராகு கேது வரும் 12-4-2022 முதல் 30-10-2023 வரை கேது ஜென்ம ராசியிலும் , ராகு 7 – ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி விட்டு கொடுத்துச்செல்வது , கூட்டுதொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்படும் சிறுசிறு சிக்கல்களை எதிர்கொள்ளமுடியும்.கடந்த கால உடல் நிலை பாதிப்பு விலகும் என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.குடும்ப ஒற்றுமை சற்று சாதகமாக இருக்கும் நிலை , பெற்றோர்களின் ஆதரவு மூலம் குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2022-2023
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2022-2023

உடல் நிலையில் கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உங்களின் விடாமுயற்சியால் எதையும் எதிர் கொள்வீர்கள்.எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும் . தூரப் பயணங்கள் உங்களுக்கு அலைச்சலை தந்தாலும் அதனால் பொருளாதார அனுகூலங்கள் உண்டாகும்

பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின்பு நற்பலன் உண்டாகும் . அசையும் , அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2022-2023
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2022-2023-துலாம்

உத்தியோகஸ்தர்கள் எதிலும் திறமையுடன் செயல்படமுடியும் என்றாலும் அதற்கான சன்மானம் குறைவாக கிடைக்கும் . வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் அசதி ஏற்படும்.எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகள் தாமதம் ஆகும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானமாக இருந்தால் நல்ல நிலையை அடையமுடியும்.புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் 2023-ல் உயர்வான நிலையை அடைய முடியும்.

தொழில் , வியாபாரம் செய்பவர்கள் இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வது நல்லது . போட்டிகள் அதிகமாக இருப்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவது நல்லது.வெளியூர் பயணங்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வளமான பலனை அடைய முடியும்.கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் அவர்களை கலந்தாலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பதும் நல்லது.

பரிகாரம்:

ஒருமுறை திருநாகேஸ்வரம் சென்று சுவாமி , அம்பாளை வணங்கிட்டு , சர்ப்ப கிரகத்தையும் வணங்குங்கள்.

மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமைல பக்கத்து பிள்ளையார் கோயிலுக்குச் சென்று அருகம்புல் சாத்தி ஆராதியுங்கள்.

ஏழை முதியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular