Saturday, December 2, 2023
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-2023ராகு கேது பெயர்ச்சி-2022-2023-விருச்சிகம்-பலன்கள்-பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி-2022-2023-விருச்சிகம்-பலன்கள்-பரிகாரங்கள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

விருச்சிகம்
( விசாகம் 4 – ஆம் பாதம் , அனுஷம் , கேட்டை )

அதிக புத்திக்கூர்மையும் , சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!!!

உங்கள் ராசிக்கு 1 , 7 – ல் சஞ்சரித்த சர்ப கிரகங்கள் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 12-4-2022 முதல் 30-10-2023 வரை ராகு 6 – ஆம் வீட்டிலும் , கேது 12 – ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பது சிறப்பான அமைப்பாகும்.

உடல் நிலை சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிலும் நிதானத்துடன் செயல்பட்டு இருக்கும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். சமுதாயத்தில் கெளரவ பதவிகள் தேடிவரும்.குடும்பத்தில் நிலவிய கடந்தகால கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

நெருங்கியவர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்திகரமாக அமைந்து ஏற்றங்களை அடைவீர்கள்.உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படும்.

ராகு கேது பெயர்ச்சி-2022-2023
ராகு கேது பெயர்ச்சி-2022-2023

உடல் ஆரோக்கியத்தில் இருந்த சொல்ல முடியாத பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாகவும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும் மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறை வேறும். கணவன் – மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவதால் அன்யோன்யம் அதிகரிக்கும்.உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும் பூமி , மனை வாங்கும் யோகம் வரும் நாட்களில் உண்டு.

ராகு கேது பெயர்ச்சி-2022-2023-விருச்சிகம்
ராகு கேது பெயர்ச்சி-2022-2023-விருச்சிகம்

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை தரும்.திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும்.எதிர்பார்த்த இடமாற்றங்களை அடைய முடியும்.எடுக்கும் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.வரும் நாட்களில் உயர்வான நிலையை எட்ட முடியும். சக நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த கால நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வம்பு , வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்து மன நிம்மதி அடைவீர்கள் கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள் வெளியூர் தொடர்புகளால் மேன்மைகளை அடைவீர்கள்.பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம்:

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12 – ல் சஞ்சரிப்பதால் தின மும் விநாயகரை வழிபடுவது , செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது , சதுர்த்தி விரதங்கள் இருப்பது , கருப்பு எள் , வண்ண மயமான போர்வை , போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது , சர்ப சாந்தி செய்வதும் , விநாயகரை வழிபடுவது நல்லது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular