மகரம்
( உத்திராடம் 2,3 ,4 -ஆம் பாதங்கள்,திருவோணம்,அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள் )
நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே!!!
உங்கள் ராசிக்கு 5 , 11 – ல் சஞ்சரித்த நிழல் கிரகங்கள் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-4- 2022 முதல் 30-10-2023 வரை ராகு ஜென்ம ராசிக்கு 4 – ஆம் வீட்டிலும் , கேது 10 – ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது.
இதே நேரத்தில் சனி ஜென்ம ராசியில் 17-1-2023 முடியவும் அதன் பிறகு 2 – லும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெற இருப்பதும் , குரு உங்கள் ராசிக்கு 3 – ல் 13-4-2022 முதல் 22-4-2023 வரையும் அதன் பின்பு 22-4-2023 முதல் 4 – ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது , சிறு பிரச்சினை என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.தேவையற்ற மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள மருத்துவ காப்பிடு எடுப்பது உத்தமம்.
பொருளாதார் ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும்.பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்போதிய காலத்தில் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் கை இருப்பை கொண்டு செலவு செய்வதும் கடன் வாங்குவதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும்.குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி குறையும்.தேவையற்ற அலைச்சல் , டென்ஷன்கள் , இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகக்கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது.தூரப் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கடினமாக உழைத்தால் தான் நற்பலனை அடைய முடியும்.
பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும்.திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும் புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும்.நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களை உற்றார்- உறவினர்கள் தவறாக எடுத்து கொள்வார்கள்.எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு சுப செலவுகளை சந்திப்பீர்கள்.
எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகமாக இருக்கும் என்பதால் மனநிம்மதியற்ற நிலை ஏற்படும்.உடல் நிலை காரணமாக எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும் , பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும்.கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேன்மைகள் அடைவீர்கள் என்றாலும் அதிக அலைச்சல் இருக்கும்.தொழில் சிறப்பாக இருந்தாலும் மறைமுக பிரச்சினைகளால் அனைத்து விஷயத்திலும் அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும்.உடனிருப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும்.தூரப் பயணங்களை தவிர்க்கவும்.
பரிகாரம்:
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 4 – லும் கேது 10 – லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது , அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது , கருப்பு ஆடைகள் , கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது,விநாயகரை வழிபடுவது , செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது கருப்பு எள் , வண்ண மயமான போர்வை போன்றவற்றை தானம் தருவது நல்லது .
ஏழரைச் சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது , சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது நல்லது.சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி , நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது , ஊனமுற்ற ஏழை , எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.
குரு உங்களுக்கு சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக் கிழமைகளில் விரதமிருந்து குரு , தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து , மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து , நெய் தீபமேற்றி வழிபடவும் . அரசமரக்கன்று , காவி , மஞ்சள் , சர்க்கரை , மஞ்சள் நிற மலர்கள் , ஆடைகள் , புத்தகங்கள் , நெய் , தேன் போன்றவற்றை ஏழை , எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.