கும்பம்
(அவிட்டம் 3,4 – ஆம் பாதங்கள் சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 – ஆம் பாதங்கள் )
உயர்ந்த பண்பும்,நிறைந்த பொறுமையும் , எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே!!!
உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 4 – லும் , கேது 10 – லும் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது.
தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-4-2022 முதல் 30-10-2023 வரை ராகு ஜென்ம ராசிக்கு 3 – ஆம் வீட்டிலும் , கேது 9 – ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத் திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். கடந்த கால அலைச்சல் டென்ஷன் எல்லாம் விலகி நிம்மதியான நிலை ஏற்படும்.

சிலருக்கு வெளியூர் பயணங்களால் மேன்மைகள் ஏற்படும்.அன்றாட செயல்களில் திறம்பட ஈடுபடுவீர்கள். கடந்தகால வீண் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள்.
கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும்.உற்றார்- உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் ஏற்படும்.பிரிந்த சொந்தங்களும் தேடி வந்து நட்பு பாராட்டும். சொந்த பூமி மனை , வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். மருத்துவச் செலவுகள் சற்று குறையும். வீண் செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பிடு எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும்.வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும்.கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களிடம் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் , பொருள் சேரும்.நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
கடந்தகால தடைகள் விலகி பணியில் பதவி உயர்வுகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும்.இருக்கும் இடத்தில் கௌரவமும் பெயர் புகழும் உயரும்.வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும்.அலைச்சல்கள் குறைந்து எதிலும் நிம்மதியாக இருக்க முடியும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.
தொழில் , வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் குறையும்.நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நவீன கருவிகளை வாங்க அரசுவழியில் உதவிகள் கிடைக்கும்.புதிய கூட்டாளிகளும் சேருவார்கள்.வெளியூர்- வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும்.தொழிலாளர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும் என்பதால் வேலைப்பளு சற்று அதிகரிக்கும்.உங்களுக்குள்ள வங்கி கடன்கள் சற்று குறையும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனம் தேவை.
பரிகாரம்:
ஒருமுறை திருக்கொள்ளிகாடு சென்று பொங்கு சனி பகவானை வணங்குங்கள்.
மாதம் ஒரு புதன்கிழமையில் பக்கத்துக் கோயில் பெருமாள் , தாயாரை துளசி சாத்தி ஆராதியுங்கள்.