Thursday, September 28, 2023

Rasi Palan today-23.02.2022

ASTRO SIVA

google news astrosiva

மேஷம்-Mesham 

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வாகன வசதி பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்-Rishabam 

குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் எதிர்ப்புகள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மிதுனம்-Mithunam 

குடும்பத்தினருடன் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்-Kadagam 

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும் .பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்-Simmam 

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கன்னி -Kanni

குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Rasi Palan today-23.02.2022
Rasi Palan today-23.02.2022

துலாம்-Thulam 

முன் கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் .

விருச்சிகம்-Viruchigam 

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் சிந்தித்து ஈடுபடவும்.

தனுசு-Thanusu 

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மறுப்பின்றி வாங் கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார் கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மகரம்-Magaram 

சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதகமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றி பெறும் நாள்.

கும்பம்-Kumabm 

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்-Meenam 

உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular