Monday, July 15, 2024
Homeஜோதிட தொடர்சந்திரன்-செவ்வாய்-புதன்-குரு-சுக்கிரன் பரிவர்த்தனை

சந்திரன்-செவ்வாய்-புதன்-குரு-சுக்கிரன் பரிவர்த்தனை

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சந்திரன் - செவ்வாய்

செவ்வாய் இல்லத்தில் சந்திரனும் சந்திரன் இல்லத்தில் செவ்வாயும் உள்ள நிலை பெற்ற கிரக அடைவுள்ள பரிவர்த்தனை ஏற்படும் போது உடலை பாதிக்கிறது.

செயல் திறனை கெடுக்கின்றது.

தாய் வகை தொடர்புகளில் விரோதத்தை காட்டுகிறது.

உடன் பிறப்புகளின் ஒற்றுமையில் கேடு விளைவிக்கின்றது.

தொழில் வகை தொடர்புகளில் அடிக்கடி இடமாற்றம் ஸ்தான மாற்றம் ஏற்படுகிறது.

கடின உழைப்பின் மூலம் உயர்வை உண்டாக்குகிறது.

அரசாங்க விரோத செயல்களில் ஈடுபடுத்தி செல்வம் , செல்வாக்கை தருகிறது.

தாய்க்கு இடர்கள் , நோய் பயங்கள் தாய் வகை சொத்துக்கள் இழப்பு போன்றவைகளை உண்டாக்குகிறது .

மேஷம் , கடகம் , விருச்சிகம் , மீனம் போன்ற லக்கினங்களில் பரிவர்த்தனை ஏற்பட்டால் அவர்கள் சிறப்பு மிகுந்தவர்களே . எவ்வகையில் செல்வாக்கு சிறப்பு ஏற்பட்டது என்று கேட்கக்கூடாது சைலன்ஸ்…

சந்திரன்  - புதன்

சந்திரன் வீட்டில் புதனும் புதன் வீட்டில் சந்திரனும் உள்ள இந்த பரிவர்த்தனையானது ஜாதகனை எவ்வகையிலும் சேர்த்துக் கொள்ள முடியாத நிலையிால் இருப்பதை காட்டுகிறது.

சதா மன உலைச்சல் எதையோ ஒன்றை பறிகொடுத்து விட்டதை போன்ற நிலை கோப தாபங்கள் மற்றவர்களோடு அனுசரித்து போகாத மனோபாவம் சந்தேக கண்ணோட்டம் , ஒன்றை விட்டு இன்னொன்றை பிடித்து தவிக்கும் சூழ்நிலை , குடும்ப சுமை , தாய் வகை விரோதம் , அம்மான் வர்க்கத்தாரால் பாதிப்பு , நரம்பு சம்பந்தப்பட்ட பீடிதங்கள் , மனோ வியாகூல சித்த பிரம்மை ஏதோ ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென்ற எண்ணம் செய்தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை உத்தியோக பங்கம் குழந்தைகள் பற்றிய ஏக்கம் பயம் போன்ற பலன்களை தருகிறது.

ரிஷபம் , மிதுனம் , கன்னி , துலாம் , மீனம் போன்ற லக்கினத்தார்க்கு சிறப்பான பலன்களை தருகிறது.

சந்திரன் - குரு

சந்திரன் வீட்டில் குருவும் குருவின் வீட்டில் சந்திரனும் அமைந்து பரிவர்த்தனை பெற்றுள்ள ஜாதகருக்கு நல்ல பலன்களை தருகிறது.

இவர்கள் எவ்வகை தொழிகளிலும் நூதனமான செயல்படும் ஆற்றல் மிக்கவர்கள் பொருளாதாரத்தில் தட்டுப்பாடு இல்லாத நிலையை காட்டும் இவர்கள் தகாதவர்களின் சேர்க்கையால் தகாத காரியங்களை செய்து தத்தளிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

குழந்தைகள் விஷயத்தில் தவறு ஏற்படுவதில்லை.

இவர்கள் எத்தொழில் செய்தாலும் பணமே குறிக்கோளாய் இருப்பார்கள்.

கஷ்டம் , பயம் , அவமானம் போன்றவைகளைத் தாங்கி கொள்ள முடியாதவர்கள் ஆச்சார அனுஷ்டானங்களை கடை பிடிப்பவர். தெய்வ வழிபாடு கொண்டவர் , பக்தி மிக்கவர் ஆன்மீக துறையில் நடமாட்டம் கொண்டவர்கள்.

இப்பரிவர்த்தனமானது மேஷம் , மிதுனம் , கடகம் , விருச்சிகம் , கும்பம் , போன்ற லக்கினக்காரர்களுக்கு நன்கு செயல்படும்.

இதில் 4 , 9 , 2 , 10 , 4,11 , 2 , 9 , 1 , 5 பரிவர்த்தனைகள் மிகுந்த சிறப்பான பலன்களைத் தருகிறது.

சந்திரன் - சுக்கிரன்

சந்திரன் வீட்டில் சுக்கிரனும் , சுக்கிரன் வீட்டில் சந்திரனும் அமர்ந்து பரிவர்த்தனை அடைந்துள்ள ஜாதகர் எதையும் ஜீரணிக்க முடியாதவர்கள். மனோ நிலையில் அதிக பாதிப்பை அடைந்தவர்கள். பீதி பயம் உடையவர். நம்பிக்கை அற்றவர்கள். தனக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று அநாவசிய கற்பனையில் எப்போதும் இருப்பவர்கள். உடலில் ஏதோ ஒரு உபாதை இருந்து கொண்டே இருக்கும்.

தாய் வழி சுகங்கள் குறைவு , தாய்க்கு அடிக்கடி உடல் நலக்குறைவு காணும் கடின உழைப்பில் உள்ளவர்கள். சிலர் கடினமான கொடூரமான செயல்களிலும் ஈடுபடுவதுண்டு. இவர்களை புரிந்து கொள்வது மற்றவர்களுக்கு இயலாத காரியம்.

மேஷம் , மிதுனம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , மகரம் , மீனம் , போன்ற லக்கினத்தார்க்கு ஏற்படும் பரிவர்த்தனை களில் 4 , 10 , 2 , 9 , 11 , 5 , 5 , 10 , 4 , 9 , 1 , 7 , 11 , 5 பரிவர்த்தனைகள் சிறப்பை தருகிறது.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்530அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்99குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்35நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்17ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular