Friday, December 8, 2023
Homeஜோதிட தொடர்புதன்-சுக்கிரன் பரிவர்த்தனை

புதன்-சுக்கிரன் பரிவர்த்தனை

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
புதன்-சுக்கிரன் பரிவர்த்தனை 

புதன் இல்லத்தில் சுக்கிரனும் சுக்கிரன் இல்லத்தில் புதனும் இருக்கும் பரிவர்த்தனை நிலையானது கலைத்துறை , சினிமா , நாடகம் , நாட்டியம் , சிற்பம் , சித்திரம் வாய்ப்பாட்டு சங்கீதம் போன்றவைகளில் தேர்ச்சி கிடைக்கிறது.

இப்பரிவர்த்தனைகளில் பிறந்தவர்களை பார்க்கும் போது ஓர் ஈர்ப்பு சக்தி ஏற்படுகிறது. இவர்களுக்கு எந்த வேடங்கள் போட்டாலும் பொருத்தமாக இருக்கும். இவர்களின் முக அழகு நேத்திர அழககை வர்ணிக்காதவர்களே கிடையாது . இவர்களின் உணர்ச்சியை புரிந்து கொண்டு செயல்படும் நபர்களை பார்க்க முடியாது.

இவ்வகை பரிவர்த்தனத்தில் அகப்பட்டவர்கள் மன்மதனின் பானத்திற்கு அடிக்கடி இலக்காவார்கள். அன்பு , பாசம் , உல்லாசம் கேளிக்கை இவர்களுடன் பிறந்ததாக இருக்கும். இவர்கள் எத்தொழில் செய்தாலும் அத்தொழில் மக்களை கவரக்கூடிய பல நுட்பங்கள் இருந்தே தீரும்.

நரம்பு சம்பந்தப்பட்ட சிலேத்துமத்திற்கு உட்பட்ட நோய் ஏற்படும். நிற மாற்றங்கள் போன்றவைகள் இவர்களின் நடைமுறை பழக்க வழக்கங்களால் வரும். இவர்களில் பலர் அலிதன்மைஉள்ளவர்களாகவும் ஆண் என்றால் ஆண் தன்மை குறைந்த வர்களாகவும் , பெண் என்றால் பெண் தன்மை குறைந்தவர்களாகவும் உள்ளனர்.

அழகு , ஆடம்பர பொருட்கள் , விளையாட்டு சாதனங்கள் அனுதினமும் அழியும் உணவுப் பொருட்கள் மது பானங்கள் சம்பந்தப்பட்ட தொழிற் தொடர்புகள் சிறப்பை தருகிறது.

இவர்களின் அநேகர் செல்வம் , செல்வாக்கு , தனி தன்மை மிகுந்தவர்களாகவே உள்ளனர். சொகுசான வாகனங்கள் பெற்றவர்களாகவும் உள்ளனர் . ரிஷப லக்னத்திற்கு 1 , 2 கன்னிக்கு 1 , 2 தனுசிற்கு 11 , 10 மகரத்திற்கு 9 , 10 கும்பத்திற்கு 4 , 5 போன்ற பரிவர்த்தனங்கள் மிகுந்த சிறப் பான பலன்களை தருகிறது . மற்ற லக்னத்திற்கு சிறப்பான பலன்களே தருவதில்லை .

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular