Friday, December 8, 2023
Homeஅம்மன் ஆலயங்கள்நாகை நெல்லுக்கடை மாரி அம்மன்

நாகை நெல்லுக்கடை மாரி அம்மன்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
நாகை நெல்லுக்கடை மாரி அம்மன்
வரலாறு : -

நாகப்பட்டிணத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் , சைவ வேளாளர் குலத்தில் தோன்றிய பெரிய நாயகத்தம்மாள் என்பவர் ஸ்ரீ சௌந்தர ராஜப்பெருமாள் வீதியில் உள்ள தங்கள் வீட்டில் நெல் வாணிபத்தை விரிவான முறையில் நடத்தி வந்தார். இவர் தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஒரு நாள் நெல் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பொழுது மஞ்சள் உடையுடன் கூடிய ஒரு பெண்மணி வந்து , நெல் வேண்டும் என்று கேட்டார்.

அம்மையார் . நெல்லை அளந்து கூடையில் வைத்து விட்டு , அதற்குரிய காசைவாங்க திரும்பிய பொழுது , அந்த பெண்மணியைக் காணவில்லை. நெல்லும் அப்படியே இருந்தது. அன்று இரவு அம்மையாரின் கனவில் தோன்றிய அப்பெண்மணி உன் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தடியில் புற்றுருக் கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.மறுநாள் அம்மையார் சென்று அவ்விடத்தைப் பார்க்க மரத்தடியில் அப்புற்றுக்கு மஞ்சள் , குங்குமம் இட்டு வழிபட்டு வந்தனர் மக்கள் .

நாகை நெல்லுக்கடை மாரி அம்மன்
நாகை நெல்லுக்கடை மாரி அம்மன்
சிறப்பு :

சில ஆண்டுகளுக்கு பின்னர் அம்மையாரின் வாரிசுகளால். மக்கள் வழிபட்ட மரத்தடியில் , அம்மனுக்கு ஆலயம் அமைத்து வழிபட ஆரம்பித்தார்கள் இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைப்பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

பரிகாரம் :

சித்திரைப் பெருவிழாவில் நடைபெறும் , மாரியம்மன் அபிஷேகம் பூச்சொரிதல் , திருக்கொடியேற்றம். அலங்கார அவதாரக்கோலங்கள் கொண்டு அம்மன் வீதியில் உலா வருதல் போன்றவற்றைக் காண கண்கோடி வேண்டும்.

வழித்தடம் :

நாகை மாவட்டமான நாகப்பட்டினத்தில் ஸ்ரீசௌந்திர ராஜ பெருமாள் வீதியில் இவ்வம்மன் ஆலயம் அமைந்துள்ளது . தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து நாகப்பட்டினத்திற்கு பேருந்து வசதிகளும் , ரயில் வசதியும் உள்ளன . நாகப்பட்டினத்தில் நகரப் பேருந்துகள் கோவிலுக்கு வந்து செல்கின்றன.

- Advertisement -
Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular