Thursday, March 23, 2023
Homeபெருமாள் ஆலயங்கள்108 திவ்ய தேசம்திவ்ய தேசம்-25-நாண்மதிய பெருமாள் கோயில்

திவ்ய தேசம்-25-நாண்மதிய பெருமாள் கோயில்

ASTRO SIVA

google news astrosiva

திருத்தலைச்சங்க நாண்மதியம்

மாயவரம் என்று சொல்லப்பட்டு வந்த மயிலாடுதுறையிலிருந்து வடகிழக்கே இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் , சங்குவனம் , சங்காரண்யம் , தலைச் செங்கானம் என்னும் பல்வேறு பெயர்களைக் கொண்ட புண்ணிய பெருமாள் தலம் ஒன்று உண்டு. தற்சமயம் தலச்சங்காடு என்று ஒரு பெயரும் உண்டு. இங்கேயும் ‘ திருமால் தன் கருணை வெள்ளத்தால் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பது மனதிற்கு உற்சாகத்தைத் தரும் செய்தி.

சிறிய கோவில் ஒரே ஒரு பிராகாரம் கொண்டது.
கருவறையில் மூலவர்-நாண்மதியப் பெருமாள்.
திருமகள் பூமி தேவியுடன் நின்ற திருக்கோலம்.
தாயார் தலைச்சங்க நாச்சியார்.
உற்சவர் வெண்சுடர்ப் பெருமாள்.
விமானம் சந்திர விமானம்.
தீர்த்தம்-சந்திரபுஷ்கரணி.

சந்திரன் , தேவப் பருந்தங்கர் . தேவர்கள் . நித்ய சூரிகளுக்கு பெருமாள் நேரடியாகத் தரிசனம் கொடுத்ததாக வரலாறு.

திவ்ய தேசம்

சந்திரனுக்குரிய சாபம் நீங்க சந்திரனே இங்கு வந்து பெருமாளை வந்து தரிசித்து நீங்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. திருமால் தவம் செய்யப்போன பொழுது தனது துணைவியான திருமகளை திருவலம்புரத்திலுள்ள வடுவகிர்கண்ணியம்மையின் தோழியாக விட்டு விட்டுச் சென்றார்.இந்த திருத்தலைச் சாங்காட்டுத் தலத்தில் சிவபெருமானை நினைத்து கடுந்தவம் புரிந்தபோது சிவபெருமான் பாஞ்சசன்யம் என்னும் சங்கினைப் பெருமாளுக்குக் கொடுத்தார். திருமாலுக்கு சங்கினை வழங்கியதால் , சிவபெருமானுக்கு சங்க கருணாதேஸ்வரர் , சங்காரண்யேஸ்வரர் , சங்கவனநாதர் என்ற சிறப்புப் பெயர் உண்டு. சங்கினைப் பெற்றதோடு இல்லாமல் திருமால் , மறுபடியும் திருவலம்புரத்திலுள்ள அம்மையை நோக்கித் தவம் புரிந்து பத்மமும் அவற்றைத் தாங்கக்கூடிய இரு கைகளையும் பெற்றார் என்பது இன்னொரு வரலாறு.

சங்கினைப் பெற்ற ஸ்தலம் என்பதால் இந்த ஸ்தலத்திற்கு திருத்தலைச்சங்க நாண்மதியம் என்ற பெயர் வந்தது. இதையெல்லாம் கூர்ந்து கவனித்த பொழுது இங்கு பெருமாளைவிட சிவபெருமானுக்கே அதிக முக்கியத்துவம் இருப்பதாக தெரிகிறது. திருமங்கையாழ்வார் இந்த கோயிலுக்கு பாசுரம் பாடியிருக்கிறார்.

பரிகாரம் :

நினைத்ததை அடைய வேண்டும் என்பவர்களும் வெளிநாட்டில் சில எதிர்பார்ப்புகளை எதிர்பார்க்கிறவர்களும் வியாபாரரீதியாக புதிய முயற்சியில் இறங்கத் துடிப்பவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பவர்களுக்கும் இந்த ஸ்தலம் ஒரு வரப்பிரசாதமாகும். இங்குள்ள சந்திர புஷ்கரணியில் ஸ்நானம் செய்து.சிவனை மனதில் தியானம் செய்து விட்டு – விஷ்ணுவை பிரார்த்தனை செய்தால் நினைத்ததை விட அதிகமானவற்றை அடைய முடியும்.பெருமாளுடைய கிருபையும் சிவபெருமானுடைய வாழ்த்தும் கிடைப்பதால் ஆயுள் பலமும் சௌபாக்கிய பலமும் பரம்பரை பரம்பரையாக கிடைக்கும் என்பது நீண்டநாள் நம்பிக்கை.

Temple Location :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular