Friday, December 1, 2023
Homeபரிகாரங்கள்தாந்த்ரீக பரிகாரங்கள்-பகுதி-2

தாந்த்ரீக பரிகாரங்கள்-பகுதி-2

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

தாந்த்ரீக பரிகாரங்கள்

✡ஆரஞ்சு மரத்தின் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்

✡படிக்கும் பிள்ளைகள் இடதுகையை டேபிள் மீது வைத்து படிக்க எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும் தேர்வு எழுதும் போதும் இதை செய்யலாம்

✡வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல வீட்டின் முன் பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவை, வசீகர சக்தியை பாதிக்கும். வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய், பிசாசு போன்ற துர் சக்திகளை ஈர்க்கும். இது பூமி தோஷத்தை உண்டாக்கும். எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரோடு மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டுவிட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

✡உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகை பூ, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பண வரவு ஏற்படும்.

✡உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடாது மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும். அல்லது குழந்தை வாய் பேச முடியாமல் போகவும் வாய்ப்புண்டு. அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்துவிடுங்கள்.

✡சிறிது கல் உப்பை ஒரு கிண்ணத்தில் போட்டு கழிவறையில் வைத்தால் கெட்ட சக்திகளை இழுத்துக்கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும்.

✡வீட்டின் வாசற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்போதும் நீர் தேங்க விடக்கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களை தொடர்ந்து ஏற்படுத்தும். தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம். இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

✡கோவில் கொடிமரம், கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின்மேல் படக்கூடாது தாந்திரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காமல் கஷ்டப்படுவார்கள் இது பிரித்திவி தோஷங்களில் ஒன்று என்று கூறுகிறது.

இதற்கு பரிகாரம்:

வீட்டில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியபடி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம், கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும். மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று.

தாந்த்ரீக பரிகாரங்கள்

✡சுடுகாட்டுக்குப் பக்கத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்க்கக்கூடாது. இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள தெய்வங்கள் வெளியேறும். முகத்தில் தேஜஸ், கவர்ச்சி குறைந்து நம்மை பார்ப்பவர்களிடம் வெறுப்பு உண்டு பண்ணும். வறுமை ,அவமானம் உண்டாகும். பேய், பிசாசுகள் நம்மை பிடிக்க நாமே வழி அமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:

ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசி செடிக்கு மூன்று கை ஜல தர்ப்பணம் செய்ய வேண்டும். மேலும் சூரியனையும் அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக்கொண்டு வலது உள்ளங்கையில் நீர் வைத்துக் கொண்டு ஓம் ரம் அக்னி தேவாய! சர்வ தோஷ நிவாரய நிவாரய என மூன்று தடவை ஜெபித்து அந்த நீரை தலையில் தெளித்துக் கொள்ளவும்.

✡கோதுமை மாவினால் சிறுசிறு உருண்டைகளாக ஏழு அல்லது 14 அல்லது ஏழின் மடங்குகளில் உருண்டை செய்து கொள்ளவும். குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளி குச்சி அல்லது மாதுளை மர குச்சியால் தொட்டு கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதை குளம், ஆறு அல்லது கோவில் தெப்ப குளத்தில் உள்ள மீன்களுக்கு போடவும். எழுதிய பின்னர் ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லட்சுமியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular