Sunday, October 1, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள்-சனிக்கிழமை,ஜூன் 18,2022

இன்றைய ராசி பலன்கள்-சனிக்கிழமை,ஜூன் 18,2022

ASTRO SIVA

google news astrosiva

இன்றைய ராசி பலன்கள்
மேஷம்

குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம் 

எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம் 

அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கடகம் 

மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்துவிடும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.

சிம்மம் 

வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.

கன்னி 

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்ட பேசாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம் 

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம் 

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டு கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கை மாத்தாக வாங்கி இருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆடை , ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

தனுசு

புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம் 

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம் 

மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.

மீனம் 

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். அதிர்ஷ்டமான நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular