Friday, December 8, 2023
Homeதோஷங்களும்-பரிகாரமும்சூரிய தோஷம் நீங்க பரிகாரம்

சூரிய தோஷம் நீங்க பரிகாரம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

சூரிய தோஷம் நீங்க பரிகாரம்

சூரிய தோஷம் ஜோதிட சாஸ்திரங்கள் சூரியனை பித்ரு காரகன் என்று சொல்கின்றன . அதாவது ஒருவரது வாழ்க்கையில் தந்தைவழி உறவுகளுடன் சுமுகமான சூழல் நிலவிட சூரியனின் அமைப்பே காரணம். அதோடு , சூரியனை ஆரோக்யகாரகன் என்றும் சொல்வர். ஒருவரது தலைப்பகுதியில் பிரச்னைகள் வருவது , ஆரோக்யம் அடிக்கடி பாதிக்கப்படுவது போன்றவையெல்லாம் சூரிய தோஷத்தினால் ஏற்படக் கூடியவை.

தலைமைப் பொறுப்பில் பிரச்னைகள் , பணியில் அடிக்கடி இடமாற்றம் , அரசாங்க விஷயங்களில் சங்கடங்கள் என்று தலைமைப் பொறுப்பு சார்ந்த விஷயங்களில் பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. முயற்சிகளில் வெற்றியின்மை , சோம்பல் அதிகரிப்பு , ஏதேனும் ஒரு வகையில் உடல்நல பாதிப்பு இப்படிப் பிரச்னைகள் ஏற்படவும் சூரியனின் அமைப்பே காரணம் என்கின்றன ஜோதிட நூல்கள்.


உங்கள் ஜாதகத்தில் சூரியனின் அமைப்பினால் தோஷம் இருந்தாலும் சரி , அல்லது கோசாரரீதியாக சூரியனின் அமைப்பு சீர் கெட்டிருந்தாலும் சரி , பின்வரும் பரிகாரங்களைச் செய்வதன் மூலம் , சூரியனின் அமைப்பினால் ஏற்பட்டுள்ள தோஷங்களின் வீரியம் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும்.

சூரிய தோஷம்

ஒருவேளை உங்களுக்கு ராசி , நட்சத்திர , ஜாதகம் போன்றவையெல்லாம் தெரியாது . அதேசமயம் மேலே கூறியதைப் போன்ற பிரச்னைகள் உங்களுக்கும் ஏற்படுகிறது என்றால் , நீங்களும் இந்த பரிகாரங்களைச் செய்யலாம்.

சூரிய தோஷம் உங்களுக்கு இல்லை என்றாலும் நல்லதே நடக்கும்.( மற்ற கிரஹ தோஷ பரிகாரங்களும் இதுபோலவே செய்யலாம்)

💚சூரியனுக்கு சோம்பல் என்பதே கிடையாது . அதனால் , நீங்கள் தினமும் அதிகாலையிலேயே விழித்தெழுவதும் , உதிக்கும் சூரியனைக் கண்டு உளமாரக் கும்பிடுவதும் , சூரிய தோஷத்தை வெகுவாகக் குறைத்து நல்லவை நடக்கச் செய்யும் , ஞாபகம் இருக்கட்டும் , அதிகாலையில் எழுந்து ஆதவனைக் கண்டு அகம் ஒன்றி ஆராதிப்பதோடு , அதன் பிறகு சுறுசுறுப்பாகச் செயல்படுவது முக்கியம். ஏனென்றால் சூரியன் , சோம்பேறிகளுக்கு அனுகிரஹம் செய்வதில்லை.

💚மந்திரங்கள் அனைத்துக்கும் மாதாவாகப் போற்றப்படும் காயத்ரி மந்திரம் , சூரியனைப் போற்றியே அமைந்திருக்கிறது. தினமும் காலையில் நீராடிவிட்டு

ஓம் பூர் : புவ : ஸுவ : தத் ஸவிதுர் வரேண்யம் | பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந : ப்ரசோதயாத் || என்கிற காயத்ரி மந்திரத்தை குறைந்தது பதினொரு முறை சொல்வது , சூரியனால் ஏற்பட்டிருக்கும் தோஷத்தின் வீரியத்தைக் குறைத்து விசேஷ நற்பலன்கள் கிட்டச் செய்யும். குறிப்பாக ஆரோக்யத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விரைவில் நீங்கி , உடல்நலம் சீராகும் , சிறக்கும்.

💚அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதும் சூரியனால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் நீங்கவும் , ஆரோக்யம் சிறக்கவும் செய்யும் . சூரிய நமஸ்கார யோகா முறை தெரிந்தால் செய்யலாம். இல்லாவிட்டாலும் , மனதுக்குள் சூரியனை நினைத்தபடியே சூரியனை நோக்கி கண்களை மூடிக்கொண்டு , சில நிமிடம் நில்லுங்கள். அதன் பிறகு சிறிது நீரும் பூவும் சூரியனை நோக்கிக் கீழே விட்டுவிட்டு , நமஸ்காரம் செய்யுங்கள். இதுவும் மேலான நற்பலன் தரும்.

சூரிய தோஷம்

💚சகல சாஸ்திரத்திலும் பாண்டித்யம் பெற்ற சூரியனின் பிரதான சீடர் , அனுமன் . சூரியனுக்கு தன் சீடனான மாருதிமேல் ப்ரியம் அதிகம். எனவே அனுமனைக் கும்பிட்டாலும் ஆதவனின் அருள் கிட்டும். அதன் விளைவாக தோஷங்கள் நீங்கும்.

💚ஆதித்யனை இதயத்தில் இருத்திப் போற்றிடும் ஆதித்ய ஹ்ருதயம் , மாருதியைப் போற்றும் அனுமன் சாலீஸா ஆகிய துதிகளை இயன்றபோதெல்லாம் சொல்வது , கேட்பது நல்லது.

💚உயிர்களின் ப்ராணனாக விளங்கக்கூடிய சூரியனுக்கு ஒரு சமயம் தோஷம் பெற்றியபோது , அதனை நீக்கி அவனை ஆட்கொண்டவர் இடபவாகனரான ஈஸ்வரன் . மேலும் ஜோதிடரீதியாக சூரியனுக்கு ஆதிக்க தெய்வம் , சிவபெருமான் . எனவே சர்வேஸ்வரனை ஆராதித்தாலும் சூரிய தோஷத்தின் கடுமை குறையும்.

💚சூரியனுக்கு சூடு பிடிக்காமல் இருக்குமா ? எனவே சூடான அன்னத்தினை தானம் செய்வது சிறப்பு , அதிலும் குறிப்பாக வெல்லம் கலந்த சர்க்கரைப் பொங்கலை தானம் செய்தால் , சூரியன் ரொம்பவே சந்தோஷப்படுவார்.( சூரியனை வணங்கும் தினத்துக்கே பொங்கல் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள் !)

💚நவதானியங்களில் கோதுமை சூரியனுக்கு உரியது கோதுமை , கோதுமையால் செய்த உணவுப் பண்டங்களை தானம் செய்தாலும் விசேஷ நன்மை கிடைக்கும்.

💚சூரிய தோஷ நிவர்த்திக்கு திருமங்கலக்குடி சென்று பிராணநாதேஸ்வரரை வணங்குவதும் , அதன் பிறகு அருகிலேயே உள்ள சூரியனார் கோயில் சென்று கும்பிடுவதும் தனிச்சிறப்பான நற்பலனைத் தரும்.

💚ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு பொழுது விரதம் இருப்பதும் , அன்றைய தினம் அசைவம் தவிர்ப்பதும் நல்லது .

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular