Saturday, December 2, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள்-சனி ...

இன்றைய ராசி பலன்கள்-சனி -ஜூலை-16-2022

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்தினருடன் பேசி ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

ரிஷபம்

தெய்வ அனுகிரகம் நிறைந்த நாள். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

மிதுனம்

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

கடகம்

மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்துவிடும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.

சிம்மம்

கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கன்னி

கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

துலாம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

image 17 இன்றைய ராசி பலன்கள்-சனி -ஜூலை-16-2022

விருச்சிகம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதுவேலை கிடைக்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்களுக்கு உதவுவீர்கள். பரிசு பாராட்டு கிடைக்கும் நாள்.

மீனம்

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular