ஹோரை பலன்
சூரிய ஹோரை (உத்தியோக ஹோரை)
அரசு தொடர்பான காரியங்களில் ஈடுபடுதல்,அரசியல் தலைவர்களை சந்தித்தல்,அரசு உதவியை தேடல்,தந்தை தொடர்பான அனைத்து விஷயங்களும், பெரியோர்களின் ஆதரவை பெறுதல்,சிவ வழிபாடு,அரசு பதவி ஏற்றல்,பிரபலங்களின் தொடர்பு கிடைத்தல்.பொதுவாக சூரிய ஹோரையில் அரசு, தந்தை வகையிலான செயல்களை செவ்வனே செய்யலாம்.
ஹோரை அட்டவண
சந்திர ஹோரை(அமுத ஹோரை)
சந்திரன் துரித கிரகமாகையால் பயணங்களில் விரைவும் , வெற்றியும் உண்டாக்கும் ஹோரை யாகும்.உணவுப் பொருட்கள் சம்பந்தமான செயல்கள் செய்தல் ,திருமண விஷயம் பேசுதல் ,அம்பாள் வழிபாடு செய்தல் ,மனம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடலாம் .கற்பனையை மூலதனமாகக்கொண்ட எந்த வொரு செயலிலும் ஈடுபடலாம்.எல்லா சுப காரியங்களுக்கும் சந்திர ஹோரையைத் தேர்ந்தெடுக்கலாம்.அமாவசையன்றும் , மறு நாள் பிரதமையன்றும் சந்திர ஹோரையைத் தவிர்க்கவும்.தேய்பிறை சந்திர ஹோரையைத் தவிர்ப்பது நலம்.