Saturday, December 2, 2023
Homeஜோதிட தொடர்சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு சந்திரன் இணைவு பார்வை தரும் பலன்கள்

சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு சந்திரன் இணைவு பார்வை தரும் பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
குரு சந்திரன் இணைவு
சிம்மம்

சிம்ம லக்னத்திற்கு குரு ஐந்தாமதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. சந்திரன் விரயாதிபதி ; அயன , சயன ஸ்தானாதிபதி.

ஐந்தாம் அதிபதி குரு விரயாதிபதியுடன் இணையும்பொழுது பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக அதிக பொருள் விரயத்தை சந்திக்க நேரும். பங்குச்சந்தை வணிகத்தில் அதிக இழப்பை சந்திப்பார்கள். சிலருக்கு வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணம் நடக்கும்.

அஷ்டமாதிபதி குரு விரயாதிபதி சந்திரனுடன் சம்பந்தம் பெறும்போது , பல பெண்கள் கணவருடன் தீராத வம்பு வழக்கு கடன் தொல்லை தாங்கமுடியாமல் தாலியைக் கழற்றி வீசுகிறார்கள் அல்லது தாலியை அடமானம் வைக்கிறார்கள்.

முழுச்சுபரான குருவின் செயல்பாடே இப்படியென்றால் அசுப கிரகங்களின் செயல்பாடு எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறதல்லவா ? குரு , சந்திர தசை புக்திக் காலங்களில் அல்லது கோட்சாரத்தில் அசுப கிரகங்களின் சம்பந்தம் ஏற்படும் காலங்களில் இதுபோன்ற கிரகங்களின் செயல்பாட்டை அவ்வளவு எளிதில் யாரும் நிதானிக்க முடியாது.

பரிகாரம்

ஞாயிறு காலை 9.00-10.00 மணிவரையிலான சந்திர ஓரையில் வயது முதிர்ந்த பெண்களுக்கு தயிர்சாதம் தானம் தர சுபம் உண்டாகும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular