Thursday, March 28, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்உடல் நலத்தில் ஜோதிடத்தின் பங்கு

உடல் நலத்தில் ஜோதிடத்தின் பங்கு

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

உடல் நலத்தில் ஜோதிடத்தின் பங்கு

ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னம் , ஆயுள் ஸ்தானம் எனப்படும் 8 – ஆம் வீடு , ஆயுள்காரகன் சனி ஆகியவை பலம்பெறுவது முக்கியம். கிரகங்கள் ஆட்சி , உச்சம் பெற்றிருந்தால் சிறப்பான உடலமைப்பு , நல்ல ஆரோக்கியத்தை ஒருவர் அடையமுடியும். கிரகங்கள் நீசம் பெற்றிருந்தாலும் , பலமிழந்திருந்தாலும் , வக்ரம் பெற்றிருந்தாலும் எந்த கிரகம் பலமிழந்திருக்கிறதோ அந்த கிரகத் தொடர்புடைய உடல் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

ஜாதகத்தில் நீச கிரகத்தைக்கூட நம்பிவிடலாம். ஆனால் வக்ர கிரகங்களை நம்பமுடியாது. வக்ர கிரகங்கள் எந்த நேரத்தில் எப்படிப்பட்ட பலனை ஏற்படுத்தும் என்பதனைத் தீர்மானிப்பது கடினம். உடல்நலம் சிறப்பாக இருப்பதுபோல் தெரியும் ; ஆனால் வக்ர கிரக தசாபுக்தி நடைபெறும்பொழுது எதிர்பாராத திடீர் உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஒருவர் நீண்ட ஆயுளோடு இருப்பதற்கு லக்னாதிபதி பலம்பெறுவதும் , சனி வலுவாக இருப்பதும் , லக்னத்திற்கு 6 , 8 – ஆம் வீடுகள் பலமாக இருப்பதும் சிறப்பு. ஜோதிடத்தில் ஆறாம் வீட்டைக்கொண்டு ருணம் ரோகத்தைப் பற்றி அறியமுடியும். ஆறாம் வீடு பாதிக்கப்பட்டால் ஆரோக்கியக் குறை பாடுகள் ஏற்படும். எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானம் பாதிக்கப்பட்டால் அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

லக்னாதிபதி, 6, 8-க்கு அதிபதி, சனி ஆகிய கிரகங்கள் சுப கிரக பார்வையுடன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தால், சிறப்பான ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் திடகாத்திரமான உடல் அமைப்பு ஏற்படும்.

எப்பொழுது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என பார்க்கும் பொழுது, ஒருவர் ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகங்களின் தசா புத்தி, வக்ர கிரகங்களின் தசா புத்தி நடைபெறும் பொழுது ஆரோக்கிய குறைபாடுகள்,உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக 6,8-ம் அதிபதிகள் பலவீனமாக இருந்து, அதாவது நீசம் பெற்றோ, பகை நட்சத்திரங்களில் அமையப்பெற்றோ, வக்கிரம் பெற்றோ இருந்து அதன் தசாபுத்தி நடைபெறும் பொழுது திடீரென உடல் பாதைகள் ஏற்படுகின்றன.

உடல் நலத்தில் ஜோதிடத்தின் பங்கு

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு எந்த கிரகம் பலவீனமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவ ரீதியாக உடல் பாதைகள் ஏற்படும்.

சூரியன் பலவீனமாக இருந்தாலும் சர்பகிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், அதன் தசா புத்தி காலங்களில் இதய பாதிப்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட உபாதைகள், கண்களில் கோளாறு ஏற்படுகிறது.

சந்திரன் பலவீனமாக இருந்தாலும் சர்ப்ப கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும் அதன் தசா புத்தி காலங்களில் நீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், உண்ணும் உணவே விஷமாகும் நிலை மனநிலை பாதிப்பு ஏற்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் புதன் வக்கிரம் பெற்றிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு புதன் தசை அல்லது புத்தி நடைபெறும் பொழுது நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், குறிப்பாக மூட்டு வலி, கை-கால் வலி ஏற்படுகிறது.

குரு வக்கிரம் பெற்றிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அதன் தசா புத்தி காலங்களில் வயிறு பாதிப்பு, குடல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் வக்கிரம் பெற்றிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் செவ்வாயின் தசை அல்லது புத்தி நடைபெறும் பொழுது ஹார்மோன் பிரச்சனை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, குறிப்பாக ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், மாதவிடாய் கோளாறுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஆண்களுக்கு ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வெட்டுக்காயம், விபத்து ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

சுக்கிரன் வக்கிரம் பெற்றிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அதன் தசா புத்தி காலங்களில் கண் பாதிப்பு, சர்க்கரை வியாதி, ரகசிய உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

சனி வக்கிரம் பெற்றிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அதன் தசா புத்தி காலங்களில் உடலில் எதிர்ப்பு சக்திகள் குறையும், உடல் ஊனம் ,எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை பற்களில் பிரச்சனை, கால் பாதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

சர்ப்ப கிரகங்களான ராகு கேது சாதகமற்ற நிலையில் இருந்து அதன் தசா புத்தி நடைபெற்றால் அலர்ஜி பிரச்சனை ஒருவருக்கு ஏற்படும். உடல் உபாதைகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாத நிலை உண்டாகிறது.

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு எந்த நேரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கும் பொழுது சில கிரக தசாபுத்தி நடைபெறும் பொழுது உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.

12 லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என பிரித்து உள்ளார்கள்.

சர லக்னம் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகர லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 2,7-ம் வீடுகள் மாரக ஸ்தானம் என வைத்துள்ளார்கள்.

ஸ்திர லக்னங்களான ரிஷபம், சிம்மம், விருச்சகம், கும்பம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு 3, 8 ஆம் வீடுகள் மாரகஸ்தானங்கள் ஆகும்.

பய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு 7, 11 ஆம் வீடுகள் மாரகஸ்தானங்கள் ஆகும்.

ஆக மேற்கூறிய விதிப்படி சர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7-ம் வீட்டு அதிபதிகளும் 2,7-ம் வீடுகளில் அமையப்பெற்ற கிரகங்களின் தசை, புத்தி நடைபெறும் பொழுதும், ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8-ல் அமையப்பெற்ற கிரகங்களும், 3,8-ம் அதிபதியின் தசை, புத்தி காலங்களிலும், உபய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7, 11-ல் அமையப்பெற்ற கிரகங்களும், 7 11-ம் அதிபதியின் தசை புத்தி காலங்களிலும் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய கிரகங்களின் தசை புத்தி நடைபெறும் பொழுது ஏழரைச் சனி, அஸ்டம சனி, ஜென்ம ராசிக்கு ஒன்று ஏழு இரண்டு எட்டு சர்ப்ப கிரகங்களான ராகு கேது சஞ்சரித்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது எந்த கிரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய தெய்வங்களை மனதார வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular