இன்றைய ராசி பலன்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
ஜாதக பலன் /திருமணபெருத்தம் /ஜோதிட ஆலோசனைகளை பெற கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்

பிள்ளைகளை புதியபாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரிசெய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.

பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் விட்டு கொடுத்து போவது நல்லது. தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள்.

எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது பொருள் வந்து சேரும்.வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

யதார்த்தமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கெளரவம் கூடும் நாள்.

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்து விடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெரும்பாலும் இறுதியில் நல்லதே நடக்கும்.

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும்.

எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. மொத்தத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். கோபத்தை குறைத்து நிதானத்தை மேற்கொள்ளுங்கள்.