Friday, September 29, 2023
Homeஆன்மிக தகவல்வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்

வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்

ASTRO SIVA

google news astrosiva

வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிகவும் முக்கியமானது உருவவழிபாடு மக்களின் மனதை கடவுளிடம் ஒன்று மாறு செய்யக் கூடியதாகவும் உருவ வழிபாட்டால் மக்கள் கடவுளை நேரில் கண்டு பிரார்த்தனை செய்வது போல் மனம் மகிழ்கிறார்கள்.

 பூஜை அறையில் வைக்க வேண்டிய படங்கள்

பொதுவாக வீட்டில் அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம் இது மிகவும் நன்மை பயக்கும்.

அவரவர் இஷ்ட தெய்வங்களின் படத்தினை வைத்து வணங்கி வரலாம் குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே!

எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வீட்டில் வைத்து வணங்கி வரலாம் இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறலாம்.

குழந்தை கடவுள் படம் எதுவாக இருந்தாலும் அதை வைத்து வணங்கி வரலாம் இது குழந்தை பாக்கியத்தை தரும்.

வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்

அன்னபூரணியின் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது இதன் மூலம் வறுமை அகலும் பசிதீரும் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

அர்த்தநாரீஸ்வரர் என் படத்தை வைத்து வணங்கி வரலாம் நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.

குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படத்தை வைத்து வணங்கி வரலாம் இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.

கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத் திறமை எழுத்துத் திறமையும் உண்டாகும்.

லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம் அலமேலுமங்கை தாயார் உடன் கூடிய வெங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம் இதனை செய் தொழிலில் நல்ல வருமானமும் சுகமான வாழ்க்கையும் அமையும்.

ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம் அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும் அரசு வேலைக்கு முயற்சி போர்களும் அரசியலில் முன்னேற துடிப்பவர்கள் வணங்க வேண்டிய கடவுள் இவரே.

மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம் தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை அன்பு காதல் பாசம் உண்டாகும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular