Friday, December 8, 2023
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 துலாம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 துலாம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

சனி பெயர்ச்சி பலன்கள்-துலாம்

துலாம் ராசிக்கு சனி 4 எனும் கேந்திரத்திற்கும், 5 எனும் திரிகோணத்திற்கும் உரிய அதிபதி அதனால் அவர் யோகாதிபதி என அழைக்கப்படுகிறார். அவர் இப்போதைய மாற்றத்தில் 5-ஆமிடம் எனும் கும்பத்திற்கு இடம் மாறியுள்ளார். அதில் அவிட்டம், சதயம், பூரட்டாதி எனும் நட்சத்திரங்களின் வழியே பலன் தருவார். சனி 5-ஆமிடத்தில் அமர்ந்து அங்கிருந்து 7-ஆமிடம், 11-ஆமிடம், 2-ஆமிடங்களைப் பார்வையிடுவார்.

சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date

இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி இருப்பிட பலன்

துலாம் ராசிக்கு 5-ல் அமர்ந்த சனி, உடனே உங்களை குலதெய்வக் கோவிலுக்குபயணப்படச் செய்வார். வெகுநாளாக குழந்தைக்காகக் காத்துகொண்டிருந்த வர்களுக்கு, இப்போது மழலை பாக்கியம் கிட்டும். மார்க் குறைவாக வாங்கிய துலா ராசிக் குழந்தைகள் இப்போது ஓரளவு படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் சிலர் காதல் விஷயங்களில் பிஸியாகி விடுவீர்கள்.

சில அரசியல்வாதிகள் தங்கள் பழைமை யான வாழ்க்கைக்குத் திரும்புவர் உங்கள் வியாபாரத்தில் பழமையைக் கடைப்பிடிப்பீர் கள் நிறைய துலா ராசிக்காரர்கள் சினிமாவில் நுழைந்துவிடுவார்கள். அது நடிப்பு அல்லது கருவிகளைக்கொண்டு பணிபுரியும் டைரக்ஷன், எடிட்டிங் போன்ற பிரிவாக அமையும் நிறைய கலைஞர்கள் வீடு வாங்குவார்கள்.

சனி பெயர்ச்சி பலன்கள்

குழந்தைகள் உணவு, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் ப்ரீ ஸ்கூல், சிறு வயதினரின் திறமையை மேம்பாடு செய்யும் பயிற்சிப் பள்ளி, சிறுவர்களுக்கான விளையாட்டு, நடனம், சங்கீத வகுப்புகள் என குழந்தைகள் கல்வி சம்பந்தமான இனங்களில் ஈடுபடுவீர்கள். சிலர் பங்குவர்த்தக ஆர்வம் கொள்வீர்கள் பங்கு வர்த்தகத்தை முறை யாக செய்வது எப்படியென வகுப்பெடுக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

எது எப்படியோ, 5-ல் உள்ள சனி, உங்களை குழந்தைகள் விஷயம் நோக்கி நகர்த்துவார். சிலர் பூர்வீக அல்லது பழைய வீட்டிற்கு சென்று வாழ ஆரம்பித்து விடுவீர்கள்.

சனி பார்வை பலன்கள்

சனி 3ம் பார்வை பலன்கள்

துலாம் ராசியின் 5-ஆமிடத்தில் அமர்ந்திருக்கும் சனி, தனது 3-ஆம் பார்வையால் துலாம் ராசியின் ஏழாமிடத்தைப் பார்க்கிறார். 7-ஆமிடம் என்பது களஸ்திர ஸ்தானம். இந்த சனிப்பெயர்ச்சியில், துலா ராசியார் திருமண முயற்சிகள் செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான். திருமணம் அவ்வளவு எளிதில் கைகூடி வராது. நிறைய தடை, தாமதம் தருவார். ஆனால் கல்யாண விஷயமா இன்னொன்று நடக்கும். காதல் கல்யாணம் செய்துகொண்டு ஓடிவிடுவார்கள்.

இந்த சனி பார்வை ஒன்று கல்யாணம் நடக்கவிடாது அல்லது திருமணத்தில் அவமானம் கலந்திருக்கும். உங்களுக்கு வியாபாரம், கடை இருப்பின், அதனை குடும்பத்தில் வேறு யார் பெயரிலாவது மாற்றிவிடுங்கள் வணிகம். வளம் கெட்டுப்போகும் நிலையுண்டு. இதேபோல் பிற மனிதர்களின் சந்திப்பின்மூலம் தொழில் நடத்தும் வக்கீல்கள், ஜோதிடர்கள் பங்கு விற்பனையாளர்கள், எல்.ஜசி ஏஜெண்டுகள் போன்றோர் தனியாக இராமல், கூட நல்ல தசாபுக்தி நடக்கும் நபரை கூட்டிச்செல்வது உத்தமம்.

உங்களில் சிலர் வெளியாட்களிடம் யாருக்கும் தெரியாமல் பணம் கொடுத்து வைத்திருந்தால், இந்தக் காலகட்டத்தில், அவர்கள் உங்களை முழுமையாக ஏமாற்றிவிடுவர்.

சனி 7ம் பார்வை பலன்கள்

சனி தனது ஏழாம் பார்வையால் துலாம் ராசியின் 11-ஆம் வீட்டைப் பார்வையிடுகிறார். இவர்களின் 11-ஆம் வீடு சிம்ம ராசி. அதன் அதிபர் சூரியன். சும்மாவே சனிக்கு சூரியனைக் கண்டால் ஆகவே ஆகாது. அதிலும் இப்போது நேர்பார்வை வேறு விடுவாரா சனி? முதலில் பாதிக்கப் போவது துலா ராசி அரசியல்வாதிகள். இந்த சனிப்பெயர்ச்சி இவர்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும். வெளியே தலைகாட்டமுடியாதவு செய்துவிடும் கொஞ்ச நாளில் அட்டி அந்தப் பெயரில் ஒரு அரசியல்வா இருந்தாரே அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கிருத்திறார் என கேள்வி கேட்கச் செய்யும் நிலை எதிபட்டுவிடும்.அடுத்த பாதிப்பு சமையல் கலைஞர்களுக்குத்தான் சமையல் செய்யும்போது, கல்யாணத்திற்கு உணவுப் பண்டம் தயாரிக்கும்போது மிகக் கவனமாக இருந்தல் அவசியம், ஏதேனும் ஏடாகூடம் ஏற்பட்டு ஒன்று நீங்கள் தொழிலைத் தொடரமுடியாத நிலை ஏற்படும் அல்லது சிறையிலிருக்க நேரிடும்.

சனி பெயர்ச்சி பலன்கள்

பதவி உயர்வென்பது கானல் நீர்தான் ஒருவேளை பதவி உயர்வு வந்தால், உங்கள் கண்ணீருக்கு அதுவே காரணமாகிவிடும். அப்புறம் இருக்கவே இருக்கிறார் மூத்த சகோதரர் உங்களுக்கும் உங்கள் மூத்த சகோதரர் மற்றும் தந்தைக்கும் ஏற்படும் சண்டையில் வீடு களேபரமாகும். சிலரின் மருமகன்கள் இம்சை செய்வர் மருமகளைக் கண்டால் வேறு தெரு வழியாக எஸ்கேப் ஆகிவிடுங்கள் லாபத்தின் வழி அடைபட்டுவிடும்.

சனி 10ம் பார்வை பலன்கள்

சனி துலாம் ராசியின் 5-ஆமிடத்தில் அமர்ந்து. இவர்களின் 2-ஆமிடத்தை நோக்குகிறார். 2-ஆமிடம் என்பது வாக்கு, தனம், குடும்பஸ்தானம். முதலில் உங்களின் பணவரவு சுருங்கும். ஏனெனில் உங்களின் வியாபார ஸ்தானத்தைப் பார்த்து அதனைக் கெடுத்து, அதனால் லாபம் கெடுவதால், பணவரவு, காசு புழக்கம் தன்னிச்சையாகக் குறையும்.

பூமிக்கு அடியிலுள்ள விவசாய விளைபொருளை கொஞ்சம் வாபம் கிடைத்தாலும் உடனே விற்றுவிடுங்கள். ஆரம்பக் கல்விக் குழந்தைகளை பள்ளிகூடம். அனுப்புவதற்குள் பெரும்பாடாகிவிடும். பள்ளிகூடத்தை, பூச்சாண்டி மாதிரி பார்த்து பயப்படுவார்கள் இந்த குழந்தைகள் கற்பனை யாக பொய் சொல்வார்கள்.

சனி பெயர்ச்சி பலன்கள்

பலன்தரும் பரிகாரம்

திருபுவனம் ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கவும். சனி பற்றிய ஸ்லோகப் புத்தக விநியோகம் நன்று.அருகிலிருக்கும் கோவிலுள்ள சனி சந்நிதியில் இனிப்புகள் வைத்து வணங்கி, பின் விநியோகம் செய்யுங்கள். முடிந்தால் சனிக்கிழமை, குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் தானம் நல்லது. சுந்தர காண்டம், அனுமன்- சீதை சந்திப்பு பராயாணம் நல்லது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular