Saturday, December 2, 2023
Homeஆன்மிக தகவல்தமிழர்களின் தை பொங்கல்

தமிழர்களின் தை பொங்கல்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

பொங்கல்Pongal Festival

பொங்கல் விழாவின் சிறப்புகள்

தமிழர்,தம் பண்டிகையான பொங்கல் (pongal) நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். மார்கழி இறுதியில் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது இந்திரனுக்குரிய நாளாகும். இதில் பழையன கழிதலும் புதியன புகுவதும் கொள்ளப்படும்.

தை முதல் நாள் பெரும் பொங்கல் அல்லது சூரிய பொங்கல் என்று அழைக்கப்படுகிறது இது சூரிய வழிபாட்டுக்குரிய நாளாகும்.

பொங்கல் வைக்கும் நேரம் 2023

நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் , தை மாதம் 1 – ஆம் தேதி 15-1-2023 ஞாயிற்றுக்கிழமை ,தேய்பிறை அஷ்டமி திதி, சித்திரை நட்சத்திரம்கூடிய சுப தினத்தில் , காலை 08.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் , புதன் , சந்திர ஓரையில் பொங்கல் வைப்பது உத்தமம்.

மாட்டு பொங்கல் வைக்கும் நேரம் 2023

மறுநாள் 16-1 -2023 திங்கள்கிழமையன்று காலை 8.00 மணிக்குமேல் 9.00 மணிக்குள் குரு ஓரையில் மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து , மாட்டுக் கொட்டைகளை சுத்தம் செய்து , காலை 11.00 மணிக்குமேல் 01.00 மணிக்குள் சுக்கிரன் , புதன் ஓரையில் கோபூஜை செய்து நைவேத்தியம் படைத்து , பிறகு மாடுகளை வணங்கிவிட்டு வாழையிலையில் பொங்கல் வைத்து அவற்றுக்கு உண்ணக் கொடுப்பது நல்லது.அவரவர் சம்பிரதாய முறைப்படி மாடுகளை அலங்கரித்து மாலை 6.00 மணிக்குமேல் 8.00 மணிக்குள் சுக்கிரன் , புதன் ஓரையில் மங்கள வாத்தியத்துடன் மாடுகளை தெருவலம் அழைத்து அல்லது ஆலயத்தில் பூஜை செய்து நண்பர்கள் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று பழம் பட்சணம் மற்றும் காணிக்கைகளைத் தந்து கௌரவிக்க வேண்டும்.

பொங்கல்
Pongal Festival -Astrosiva

மாட்டு பொங்கல் Mattu Pongal

தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் (Mattu Pongal) என்று அழைக்கப்படுகிறது அன்று மாடுகளுக்கு பொங்கல் இட்டு பூஜிக்கின்றனர். மாடுகளுக்கு நோய் நொடி தாக்காதிருக்கவும், அவை விருத்தி ஆகவும் உறுதியுடன் உழைக்கும் வல்லமை பெறவும் தெய்வங்களிடம் பிரார்த்திக்கப்படுகிறது. மாடுகளை ஊர்வலமாக ஓட்டி சென்று வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.வீட்டினுள் நுழையும் போது,ஒரு உலக்கையை தாண்டி வரும்படி செய்கின்றனர். மாடுகளோடு தொற்றிக் கொண்டு வரும் தீய சிறு துர்சக்திகள் உலக்கையை தாண்டி வருவதில்லை என்பதால் இப்படி செய்கின்றனர்.

பொங்கல்
Pongal Festival -Astrosiva

காணும் பொங்கல்

மூன்றாம் நாள் கொண்டாடப்படுவது காணும் பொங்கல் (Pongal) விழாவாகும். இதை பூநோம்பி என்பர். இந்த நாளில் மக்கள் கட்டு சாதங்களை கட்டிக்கொண்டு ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரை, மலைச்சாரல் முதலிய இடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பர்.

மலை கிராம மக்களின் பொங்கல்

நான்காம் நாள் வேட்டைக்கு செல்வர். காட்டில் உள்ள தெய்வங்கள் நமக்கு வழிகாட்டி நல்ல வேட்டையை தர வேண்டும் என்று பிராத்திப்பார். இது மலை கிராமங்களில் சிறப்புடன் கொண்டாடப்படும். காலையில் மேளதாளம் முழங்க கிராம தெய்வங்களை வழிபட்டு பொங்கல் இட்டு வேட்டைக்கு செல்வர். மாலையில் வேட்டையை முடித்துக் கொண்டு திரும்புவர். மாலையில் பெண்கள் ஒன்று கூடி வேட்டைக்கு சென்று வெற்றியுடன் திரும்பியவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்பார்

காலப்போக்கில் வேட்டை திருவிழா ஆலய திருவிழாக்களோடு இணைந்ததையும் காண்கின்றோம். ஆலயங்களில் இது காணும் பொங்கல் என்றே இப்போது நடத்தப்படுகிறது. காட்டில் சென்று பொங்கல் வைத்து வேட்டையாடி விலங்குகளின் மாமிசத்தை சமைத்து காட்டகத்து தெய்வங்களை வழிபடுவதும் சில இடங்களில் உள்ளது.

பொங்கல்
Pongal Festival -Astrosiva

மந்தைவெளி பொங்கல்

மாட்டுப் பொங்கல் அன்று மந்தைவெளி பொங்கல் என்பதும் வைக்கப்படும் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் உச்சி வெயிலில் படுத்து ஓய்வெடுக்க உண்டாக்கப்பட்ட இடமே மந்தைவெளி எனப்படும். மந்தைவெளியில் ஊர் மக்கள் அனைவரின் சார்பாகவும் பொங்கல் வைத்து வழிபடுவர். மாலையில் எல்லா மாட்டு மந்தைகளையும் இங்கே கூடச் செய்து வழிபாடு செய்வர். இங்கு வைக்கப்படும் பொங்கல் மந்தைவெளி பொங்கலாகும். கொங்கு நாட்டில் இப்படி பொங்கல் வைப்பது பல இடங்களில் காணப்படுகிறது.

எப்படி பொங்கல் வைக்க வேண்டும் ?

பொங்கல் (pongal) திருநாளில் வீட்டின் முற்றத்தில் நடுவில் புதிய அடுப்பு வைத்து பெரிய பானைகளில் பொங்கல் வைப்பதே வழக்கம். இதற்கென்று தனியாக அடுப்புகளை வைத்திருக்கின்றனர்.பொங்கல் வைப்பதற்கு சமையலறையை பயன்படுத்துவதில்லை.

வீட்டின் நடுவில் உள்ள முற்றத்தில் கிழக்கு நோக்கியவாறு சிறிய இடத்தில் சாணத்தாலும் ,களிமண்ணாலும் பூஜை மாடம் அமைப்பர். இதில் பசு சாணாத்தால் செய்த இரட்டை உருவங்கள் நிலைப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றை இந்நாளின் சாணி பிள்ளையார் என்பர். இவையே நாம் வழிபட்டு வந்த தொன்மை கடவுளாகும். இவற்றிற்கு அருகு சூட்டி,நெல்லும், மலரும் தூவி வழிபடுவர். பூசணிப்பூக்களை கொண்டும் அலங்கரிக்கின்றனர். காய்கறிகள், கரும்பு ஆகியவற்றை இங்கே வைத்து படைத்த பின்னரே சமைப்பது வழக்கம்.

பொங்கலுடன் பானையில் பொங்கிய குழம்பு,கூட்டு முதலியவற்றை இந்த தெய்வங்களுக்கு படைக்கின்றனர். அப்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்குகின்றனர். முற்றத்தில் அடுப்புக்கு அருகில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் தெய்வங்களை வழிபட்டு, தீபாராதனை செய்து, அச்சுடரை கொண்டே பொங்கல் அடுப்பை மூட்டுவர்.

இதற்கென நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து பூஜை அடுப்பு மூட்டுவது வழக்கம். மேலும் பானைகளுக்கு இரட்சையாக இஞ்சி, மஞ்சள் கிழங்குகளை கட்டி தயாரித்த காப்பை இங்கு வைத்து பூஜைத்த பின் அணிவிக்கின்றனர். பானையை அடுப்பில் ஏற்றியதும் பாலை விட்டு தண்ணீரால் பூரிப்பர். பால் சூடாகி பொங்கும். அது மேற்கு திசையிலும் வடக்கு திசையிலும் பொங்கினால் அந்த ஆண்டு முழுவதும் நற்பலன் விளையும் என்று நம்புகின்றனர். பிறகு மேலும் நீர் விட்டு உலை கொதித்ததும் புது அரிசியை இட்டு பொங்குகின்றனர்.

பொங்கல் தயாரானதும் பானையை இறக்கி வெளிப்புறத்தை துடைத்து, விபூதி அல்லது நாமமிட்டு ,சந்தனம் தெளித்து ஆவாரம் கொத்து, பிரண்டைகளால் தொடுத்த மாலையை கழுத்தில் கட்டி அலங்கரிப்பர். அதற்கு தீபாராதனை செய்கின்றனர். பிறகு அகப்பையில் பொங்கலை எடுத்து பூசணி இலையில் இட்டு அதன் மீது குழம்பை ஊற்றி காய்கறி கூட்டுடன் படையல் இடுவர். அதன் பின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் சூரியனுக்கு பூஜை செய்வர். தொடர்ந்து பொங்கல் வைத்து இந்த தெய்வங்களுக்கு படைப்பர். பொங்கல் முடிந்ததும் இவற்றை ஆற்றில் அல்லது குளத்தில் விட்டுவிடுவர். வீட்டு மாடத்தில் வைத்து மழை வரும் போது கரைந்து போக செய்வதும் உண்டு.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular