Friday, July 26, 2024
Homeகோவில் ரகசியங்கள்சூரியனார் கோவில்

சூரியனார் கோவில்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சூரியனார் கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும், ஆடுதுறையிலிருந்து வடக்கே 2 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்பனந்தாளில் இருந்து தெற்கே 10 கிலோமீட்டர் தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து மேற்கு 21 கிலோமீட்டர் தொலைவில் சூரியனார் கோவில் என்னும் இத்தலம் விளங்குகிறது. திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது.

திருமங்கலங்குடி எனும்  பாடல் பெற்ற தலத்திற்கு  வட கிழக்கே இக்கோயில் உள்ளது. திருமங்கலங்குடி அருள்மிகு மங்களநாயகி உடனாய  பிராண நாதஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட்ட பின்னரே இச்சூரியனார் கோயிலுக்கு வழிபட வரும் மரபு முறை பன்னெடுங்காலமாகவே பக்தர்களிடம் இருந்து வருகிறது. சூரியனார் கோயில் என்ற இக்கோயிலின் பெயரே இவ்வூரின் பெயராகவும் அமைந்துள்ளது.

சூரியனார் கோவில் என்னும் இத்தலம் தொன்மை நலத்தாலும், புராண வரலாற்றுச் சிறப்பாலும், நவகிரகங்களுக்கென தனித்தமைந்த கோயில் அமைப்பாலும், தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் முறையாலும் புகழ்வாய்ந்த தலமாகும்.

சூரியனார் கோவில்

 சூரியனார் கோவிலின் தனிச்சிறப்புகள் 

  • பிற கோயில்களில் இல்லாத ஒன்பது தனிச்சிறப்புகள் என்று இச்சூரியனார் கோயிலுக்கு உண்டு
  • தென்னகத்தின் சூரியனுக்கு என்று தனி கோயில் அமைந்துள்ள ஒரே தலம் 
  • ஒரே கோயிலுக்குள் நவகிரகங்களுக்கென தனித்தனி கோயில்கள் அமைந்த உலகப் புகழ் பெற்ற ஒரே தலம்
  • சூரிய பகவானை அவர் சன்னதியில் நின்று தரிசிக்கும் போது குரு பகவானின் அருட்பார்வையும் ஒருசேர கிடைக்கும் ஒரே தலம்
  • நவக்கிரகங்கள் ஒருவருக்கொருவர் தனித்தனி கோயில்களில் மூலவராக இருந்து சுதந்திரமாக அருள் வழங்கும் தலம்
  • வாகனங்களும், ஆயுதங்களும் இல்லாமல் அமைதி தவழும் இன்முகங்களுடன் நவகிரகங்களும் அருள் வழங்கும் தலம்
  • நவநாயகர்களையும் முதலில் இடப்புறமாக சுற்றி வந்து பின் 9 முறை வலம் வரும் அமைப்புள்ள தலம்.
  • ஒரே கோயிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரங்கள் செய்யும் படியுள்ள தலம்.
  • இரண்டு அசுப கிரகங்களுக்கு இடையில் ஒரு சுப கிரகம் என்ற வரிசையில் அமைந்து அருள் பாலிக்கும் தலம்
  • நவகிரகர்களும் ஒன்று சேர்ந்து விநாயகர் பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்

இத்தலத்தின் திருக்கோயில் திருக்கயிலாய  பரம்பரை மெய்கண்ட  சந்தானம் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாய், அவ்வாதீனத்தின் 24-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் அவர்களின் சிறந்த பரிபாலனத்தின் கீழ் இருந்து விளங்கி வருகிறது.( 20-11-1988)-ல் திருக்குட  புனித நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. தற்போது பெரும் பொருட்செலவில் சீறிய முறையில் திருக்குட  நன்னீராட்டு பெருவிழா நிகழ்த்துவதற்கான திருப்பணி ஏற்பாடுகள்  ஸ்ரீலஸ்ரீ குரு மகா சந்நிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் நடைபெற்று வருகிறது. 

சூரியனார் கோவில்

நவகிரகங்கள் அருள் பெற்ற வரலாறு

 முன்னொரு காலத்தில் காலவர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் முக்காலத்தையும் அறியும் மூதறிவு உடையவராக திகழ்ந்தார். இதனால் சில முனிவர்கள் இவரிடம் வந்து தங்கள் தங்களது வருங்காலம் பற்றி கேட்டு அறிந்து கொள்வது வழக்கம்.

 காலதேவனின் கேள்விக்கணை  

ஒரு நாள் இளந்துறவி ஒருவர் காலவ முனிவரிடம் வந்தார். தனது வருங்காலம் பற்றிய அறிவிக்கும்படி கேட்டார். காலவமுனிவர் தமது ஞான திருஷ்டியால் இளம் துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்தார். “உமது வருங்காலம் பற்றி கூற ஒன்றும் இல்லை” என்றார். உடனே அந்த இளம் துறவி காலவ முனிவரை பார்த்து “முனிபுங்கவரே” மற்றவரின் வருங்காலம் பற்றி கூறும் நீர் உம்முடைய வருங்காலம் பற்றிய அறிந்ததுண்டோ? என கேட்டு நகைத்தார். உடனே காலவ முனிவர் இளம் துறவியை பார்த்து இவ்வளவு துணிச்சலாக இதுவரை என்னிடம் யாரும் கேட்டதே இல்லை. உண்மையை கூறு’ என்று வினவினா.ர் என்னை தெரியவில்லையா நான்தான் காலத்தேவன் என்று சொல்லி இளம் துறவியாக வந்தவர் மறைந்தார்.

பெருநோய்  பற்றிய பெருங்கவலை

காலவ முனிவர் சிந்திக்கத் தொடங்கினார். தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார். தன்னுடைய முன்வினைப் பயனால் கூடிய விரைவில் தமக்கு தொழுநோய் வரும் என்பதை உணர்ந்தார். மிகவும் மனம் நொந்து முகம் புலர்ந்து வாட்டமுற்றார்.

காலவ முனிவரின் சோகம் படிந்த முகத்தைப் பார்த்த மற்ற முனிவர்கள் “சோகத்திற்கு காரணம் என்ன”? என்று கேட்டனர். காலவ முனிவர் தமது வருங்கால நிலையை எடுத்துரைத்தார். அதனை கேட்டு மற்ற முனிவர்கள் “காலவரே ! முக்காலம் உணர்ந்த மூதறிஞரே! வருவன வந்தே தீரும். அதனை தீர்க்க வழிநடாமல் வருந்தலாமா? முன்வினைப் பயனை ஊட்டுகிறவர்கள் நவகிரகங்கள். அவர்களை நோக்கி தவம் செய்து வினைபயனில இருந்து விடுதலை பெற முயற்சி செய்யுங்கள் என்று ஆறுதல் கூறினர்.

 கடும் தவம் புரிந்த காலவ முனிவர்

காலவ  முனிவருக்கு இமயமலை சாரலில் இருக்க மனம் கொள்ளவில்லை. அதனால் விந்திய மலைச்சாரலுக்கு வந்தார். ஒரு நல்ல நாள் பார்த்து பஞ்சாக்கினி (நான்கு திசைகளிலும் மூட்டிய நான்கு அக்கினியும் மேலே காய்கின்ற சூரியனும் ஆகிய ஐவகை அக்னியை பஞ்சாகினி) வளர்த்தார். அதன் நடுவே நின்று நவகிரகங்களை தியானித்து கடும் தவம் புரிந்தார். தவம் முதிர  முதிர தவத்தின் அக்னி சுவாலை நவகிரக மண்டலங்களில் தாவியது. சுவாலையின் வெம்மையை நவகிரகங்கள் உணர்ந்தனர். தம்மை நோக்கி தவம் புரியும் காலவ முனிவரின் முன் நவநாயகர்கள் ஒரு சேர வந்து காட்சி கொடுத்தார்கள்.

 காலவ முனிவர் அக்கினியில் இருந்து வெளியே வந்து நவநாயகர்களின் முன்னே விழுந்து வணங்கினார். எழுந்து நின்ற கண்களில் ஆனந்த நீர் வழிய கைகளை தலைமேல் கூப்பி நின்று ஸ்தோத்திரம் சொல்லித்  துதித்தார். காலவ முனிவரின் பரவச நிலையை கண்டு மகிழ்ந்த நவகிரக நாயகர்கள் முனிவரே  உமது தவத்திற்கு மகிழ்ந்தோம் உமக்கு என்ன வரம் வேண்டும் என வினவினர். 

காலவ முனிவர் நவ நாயகர்களை நோக்கி “நவமண்டலாதிபர்களே”!  வினைபயன்களையூட்டும் தேவர்களே! அடியேனை தொழுநோய் பற்றும் நிலை உள்ளது. அந்த தொழுநோய் என்னை அணுகாதபடி வரம் தர வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார். நவநாயகர்களும் “அவ்வண்ணமே ஆகுக” என்று வரம் தந்து மறைந்தனர்.

சூரியனார் கோவில்

 பிரம்மன் கொடுத்த பெருஞ்சாபம் 

இந்தச் செய்தி பிரம்மதேவருக்கு தெரியவந்தது அதனால் பிரம்மதேவர் சினம் கொண்டார். நவகிரகங்களை தன்னிடம் வருமாறு செய்தார். அவர்களை நோக்கி நவகிரகங்களே நீங்கள் தேவர்களாக இருந்தாலும் எம் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்களாவீர்கள். தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை. சிவபெருமானின் ஆணைப்படியும் காலதேவனின் துணைகொண்டும் அனைத்து ஜீவராசிகளும் அவரது வினைப்பயன்களையூட்டுவதற்காகவே உங்களை யாம் படைத்தோம். அவ்வாறு செயல்படவே உங்களுக்கு உத்தரவிட்டோம். ஆனால் நீங்கள் எமது உத்தரவுக்கு கீழ்படியாமல் மீறி நடக்கத் தொடங்கினீர்கள். 

நீங்கள் சுதந்திரமானவர்களாகிக் காலவ முனிவருக்கு தொழுநோய் அணுகாமல் இருக்க வரம் கொடுத்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் ஒன்பது பேரும் பூலோகத்தில் பிறந்து காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்பட வேண்டிய கால அளவு வரை நீங்கள் அந்த தொழுநோயால் துயர் அடைவீராக என்று சாபமிட்டார்.

 பரிகாரம் கேட்டறிந்த சூரியாதியர்

சாபமொழி  கேட்ட நவகிரகங்கள் இடி ஒலி கேட்ட பாம்பு போல உடல் பதைத்து உள்ளம் நைந்து வருந்தி பிரம்மதேவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். முதல்வரே! எங்களை மன்னிக்க வேண்டும். காலவ முனிவரின் தவத்தின் சுவாலை  எம்முடைய மண்டலங்களை அடைந்து சுட்டரிக்கத் தொடங்கியது. ஆதனால் அவர் முன் சென்று அவர் கேட்ட வரத்தை தந்து விட்டோம். அறியாமல் செய்த பிழைகளை பொறுத்து தங்களின் சாபத்திற்கு விமோசனம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 

அது கேட்டு மனமிறங்கிய பிரம்ம தேவர் “நவகிரகநாயகர்களே! நீங்கள் நம்முடைய கட்டளைகளை மீறி நடந்தமையால் இந்த சாபம் பெற்றீர்கள். ஆயினும்  சாப விமோசனம் கேட்டு நிற்பதால் ஒரு வழி கூறுகிறோம். நீங்கள் பூலோகத்திற்கு சென்று புண்ணிய பூமியான பரதகண்டத்தை அடைந்து தென்பாரதமான தமிழ்நாட்டு காவிரி ஆற்றின் வடகரையை அணுகுங்கள். அங்கே அர்க்கவனம்  என்ற வெள்ளெருக்கு காடு ஒன்று உள்ளது. அங்கே தங்கியிருந்து தவம் புரியுங்கள். கார்த்திகை மாதத்து  முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 12 ஞாயிற்றுக்கிழமை முடிய 78 நாட்கள் தவம் புரிய வேண்டும். திங்கட்கிழமை தோறும் உதயத்திற்கு முன்னதாக காவிரியில் நீராடி பிராணநாதரையும் மங்கல நாயகியும் வழிபட வேண்டும். உதயாதி  ஏழு நாழிகைக்குள்  அர்க்க இலை(வெள்ளெருக்கு இலை)யில் ஒரு பிடி அளவு தயிர் அன்னம் வைத்து அதை புசிக்க வேண்டும். மற்ற நாட்களில் உணவின்றி நோம்பு இருக்க வேண்டும். இவ்வரிய நோன்பை சிறிதளவு தவறும் நேராமல் செய்து வந்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று பிரம்மதேவர் சொன்னார்.

சூரியனார் கோவில்

அகத்தியர் காட்டிய அர்க்கவனம் 

 பிரம்ம தேவர் கூறியவண்ணம் நவ நாயகர்கள் பூலோகத்தை அடைந்து பரத கண்டத்தின் தென்பகுதியான தமிழ்நாட்டில் காவிரி நதியின் வடகரை வழியாக அர்க்கவனத்தை தேடி வந்து கொண்டிருந்தனர். தமக்கு முன்னே அவ்வழியில் அகத்தியர் செல்வதை கண்டு விரைந்து நடந்து அவரிடம் அணுகி வணங்கினார்கள். தமக்கு நேர்ந்த சாப வரலாற்றை கூறி அர்க்கவனத்தை தேடுகிறோம் அது உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்றார்கள். அகத்தியர் அவர்களைப் பார்த்து நாமும் அர்க்கவனத்திற்குதான்  செல்கிறோம் அங்கே பிராண நாதரை  வழிபட செல்கிறோம். வனத்திற்கு உங்களையும் அழைத்துப் போகிறோம் வாருங்கள் என்று அழைத்துச் சென்றார்.

அவர்கள் அர்க்கவனத்தை அடைந்ததும் காவிரியில் நீராடி பிராண நாதரையும் மங்களநாயகிகையும்  வழிபட்டனர். பிராணநாதரை அகத்தியர் வழிபடும்போது அவர் தமது குறுங்கையை காவிரி ஆறு வரை நெடுங்கையாக  நீட்டி நீரை முகுந்து மீண்டும் குறுங்கையாக சுருக்கி அந்த நீரால் அபிஷேகம் செய்தார். இந்த அற்புதத்தை நவகிரகங்கள் கண்டு அகத்தியரின் தவச்சிறப்புகளை  நினைத்து நினைத்துவிம்மிதம் உற்றனர. இந்த நேரத்தில் காலவ முனிவரை பற்ற வேண்டிய தொழுநோய் பிரம்மனது சாபத்தால் நவகிரகர்களை பற்றியது. அவர்கள் அங்கமெல்லாம் குறைந்து அழுகி வருந்திய அகத்தியரை நோக்கி தாங்கள் தவம் செய்ய வேண்டிய முறையை அறிவித்தருளுமாறு வேண்டினர்.

அகத்தியர்,நவகிரகர்களின் துயர நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார். அவர்கள் தவம் செய்ய வேண்டிய முறையை விளக்கத் தொடங்கினார். நவகிரகர்களே நீங்கள் தவம் செய்வதற்கு இந்த அர்க்கவனத்தில்  வடகிழக்கு பகுதியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் அங்கு விநாயகரை பிரதிஷ்டை செய்து தவம் விக்கினமில்லாமல்  முடிய பிரார்த்தனை செய்து கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு தொடங்கி 78 நாட்கள் கடுமையான நோன்பு மேற்கொண்டு தவம் செய்யுங்கள். பிரம்மன் கூறியபடி திங்கட்கிழமை அன்று காவிரியில் நீராடி பிராண நாதரை வழிபட்டு எருக்க இலையில் தயிர் அன்னம் வைத்து புசியுங்கள. தவமிருக்கும் போது மனங்களை ஒருநிலைப்படுத்தி ப்ராணநாதரை தியானம் பண்ணுங்கள். இந்த அர்க்கவனத்தில் உள்ள ஒன்பது தீர்த்தங்களையும் ஒவ்வொருவரும் ஒரு தீர்த்தமாக தேர்ந்து கொண்டு நாள்தோறும் அதில் நீராடுவீராக என்று அகத்தியர் விவரம் கூறினார்.

வெளிப்பட்டது தேவரகசியம்

அப்போது நவகிரகர்கள் அகத்தியரை நோக்கி முனிபுங்கவரே! நாங்கள் தவம் இருப்பதும் தீர்த்த நீராடுவதும் தவிர எங்களை எருக்க இலையில் தயிர் அன்னத்தை புசிக்க சொன்னது என்ன காரணம்? என்று கேட்டார்கள். அது கேட்ட அகத்தியர் புன்முறுவல் செய்து அது “தேவ ரகசியம்” இருந்தாலும் நீங்கள் விரும்பி கேட்பதால் சொல்கிறேன். எருக்க இலையில் தயிரன்னத்தை  வைத்தால் எருக்கிலையின்  சாரத்தில் ஒரு அணுபிரமாண அளவுக்கு தொழுநோய் மருந்தாகி தொழு நோயை குணப்படுத்தும். எருக்கின்  சாரத்தில் ஒரு அணுபிரமாணத்தை தனியாக பிரித்தெடுக்க இதுவே மருத்துவ வழி அதனால் தான் பிரம்மதேவன் இதனை தேவ ரகசியமாக மறைத்து உங்களிடம் கூறாமல் நோன்பு முறையை மட்டுமே கூறினார்.

பிராணநாதரிடம்  பிராத்தனை

 அகத்தியரிடம் விடை  பெற்றுக்கொண்டு நவகிரகர்கள் அர்க்கவனத்தின்  வடகிழக்கு பகுதிக்கு சென்று ஒரு இடத்தை தேர்ந்து கொண்டனர். அங்கே விநாயகரை பிரதிஷ்டை செய்து சங்கல்பம் செய்து கொண்டு தவத்தை மேற்கொண்டனர். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நோன்பு தொடங்கி கடுமையாக 78 நாட்கள் வரை கடைபிடித்தனர். இந்த நோன்பு காலத்தில் வரும் திங்கள்கிழமைகளில் விடிவதற்கு முன் காவிரியில் நீராடி பிராணநாதரை வழிபட்டனர். உதயாது ஏழரை நாழிகைக்குள்எருக்க இலையில்  ஒரு பிடி தயிர் அன்னம்  வைத்து புசித்தனர். இவ்வாறு 78 நாட்கள் நோன்பு முடித்து 79 ஆம் நாள் திங்கள்கிழமை விடியலில் காவிரியில் நீராடி எழுந்தனர்.

 நவகிரகம் பெற்ற அனுக்கிரகம்

 தங்கள் உடம்பிலிருந்து தொழுநோய் பாதிக்கு மேல் குணமாகி இருப்பதை கண்டு வியந்தனர். பிராண நாதரை அணுகி வழிபட்டனர்.வழிபாட்டின் முடிவு நேரத்தில் பிராணநாதரும் மங்களநாயகியும் நவ நாயகர்களுக்கு காட்சி கொடுத்தனர். பிராணநாதர் நவ நாயகர்களை நோக்கி நவகிரகர்களே உம்முடைய தவத்துக்கு மகிழ்ந்தோம். உம்முடைய தொழுநோய் இந்நேரத்துடன் முற்றும் நீங்கும். இந்த அர்க்கவனத்தின்  வடகிழக்கில் நீங்கள் தங்கி தவம் செய்த இடத்தில் உங்களுக்கு எனத் தனி  ஆலயம் உண்டாகி அது உங்களுக்கு உரிய தலமாக விளங்கட்டும். அங்கே வந்து உங்களை வழிபடுபவருக்கு நீங்கள் சுதந்திரமாக அனுகிரகம் செய்ய வரம் தந்தோம் என்று கூறி மறைந்தருளினார்.

சூரியனார் கோவில்

 தொழுநோய் நீங்கித்  தொழுதனர்

இங்கனம் தங்களை தங்களது தொழுநோயும்  நீங்கி வரமும் பெற்ற நவநாயகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்த நேரத்தில் காலவ முனிவர் அங்கே வந்து நவ நாயகர்களின் கால்களில் விழுந்து வணங்கி அடியேனுக்கு வரம் கொடுத்துவிட்டு தாங்கள் தொழுநோயால் வருந்தினீர்கள். தங்களை  துன்பத்திற்கு ஆளாகிய அடியேனை மன்னிக்க வேண்டும் என்று சொல்லி கதறி கதறி அழுதார்.

நவநாயகர்கள் காலவ முனிவரை தேற்றி சமாதானப்படுத்தினர். பிறகு நீர் இங்கு எவ்வாறு வந்தீரென வினாவினர். அதை கேட்ட காலவமுனிவர் நவநாயகர்களே நீங்கள் விந்திய மலைக்கு வந்து அடியேனுக்கு வரம் தந்து  மறைந்த பின்பு நான் மீண்டும் இமயமலை சாரலுக்கு சென்று தங்கினேன். அங்கே வந்த அகத்திய முனிவர் தங்களை அர்க்க வனத்தில் கண்டதையும் நீங்கள் தொழுநோயால் வருந்துவதையும் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு மனம் பதைத்து தங்களை காண இங்கே வந்தேன் என்றார்.

 உதயமானது சூரியனார் கோவில்

பிறகு நவ நாயகர்கள் காலம முனிவரை அழைத்துக் கொண்டு தங்கள் தவம் செய்த இடத்தை அடைந்து அங்கே பிரதிஷ்டை செய்த விநாயகரை நன்றி உணர்வோடு வணங்கினர். தங்களின் சாபப் பணியை நீக்கியமையால் விநாயகருக்கு கோள்வினை தீர்த்த விநாயகர் என திருப்பெயர் சூட்டினர். பிறகு காலவ  முனிவரிடம் தங்களுக்கென இவ்விடத்தில் தனி கோயில் அமைக்கும் படி கூறி  மறைந்தனர். காலவ முனிவர் நவ நாயகர்களின் ஆணைப்படி அங்கே கோயில் அமைத்து நவகிரக பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

தலவிருட்சம் 

இத்தலம் முன்னொரு  காலத்தில் வெள்ளருக்கங்காடாக இருந்ததால் இத்தளத்துக்கு உரிய விருட்சம் வெள்ளருக்கன் செடியாக குறிக்கப்படுகிறது. இத்திருக்கோயிலின் தெற்கு பிரகாரத்தில் வெள்ளருக்காகிய தலைவிருச்சம் அமைந்துள்ளது.

 இக்கோயிலில் வழிபடும் வரிசை முறை

 பிற கோயில்களில் நவகிரகங்களை வழிபடுவதற்கும் சூரியனார் கோயிலில் வழிபாடு செய்வதற்கும் வரிசை முறையில் வேறுபாடு உண்டு. இத்திருக்கோயிலில் கோள்வினை தீர்த்த விநாயகர் வணங்கிய பின்னர் முதலில் சூரிய பகவானையும், அடுத்து குரு பகவானையும் வழிபட வேண்டும். மூன்றாவதாக சனி பகவானையும், தொடர்ந்து புதன், அங்க காரகன், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்ற வரிசையில் முறையில் வழிபாடுகளாற்றி நிறைவாக தேஐஸ் சண்டேஸ்வரரை வணங்க வேண்டும். 

கோவில் இருப்பிடம்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular