Thursday, December 7, 2023
Homeஆன்மிக தகவல்சூரியனார் கோவில்-பூஜை கட்டணம்,அபிஷேக நேரம்,பேருந்து வழித்தடம்

சூரியனார் கோவில்-பூஜை கட்டணம்,அபிஷேக நேரம்,பேருந்து வழித்தடம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

சூரியனார் கோவில்

ஸ்ரீ கோள்வினை தீர்த்த விநாயகர் துதி

நாளாய போகமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அறன்நாமம்
கேளாய்நம் கிளைகிளைக்கும்
கேடுபடாத் திறமருளி
கோளாய நீக்குமவன் கோளிலி யெம்பெருமானே..

சூரியனார் கோவில்

திருமங்கலக்குடியிலிருந்து கிழக்கே சிறுது தூரத்தில் ஸ்ரீசிவசூரியப் பெருமானுக்குத் தனிக்கோயில் உள்ளது. இங்கு ஸ்ரீ சிவசூரியப்பெருமானை மூலவராகக் கொண்டு மற்ற எட்டுக் கிரகங்களின் கோயில்கள் சூரியனைச் சுற்றி தனிதத்தனித் திருக்கோயில்களாகவும் உள்ளன.

இங்கு உள்ள நவக்கிரகங்கள் எல்லாம் ஆயுதங்கள். வாகனங்கள் எதுவும் இல்லாமற் அனுக்கிரஹ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டுவன எல்லாம் அளித்து அருள்பாலித்து வருகிறார்கள். இச்சிறப்பு வேறு திருக்கோயில்களில் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும்.

சூரியனார் கோவில்

வழித்தடம்:

கும்பகோணம் – மயிலாடுதுறை பேருந்து வழித்தடத்தில் உள்ள ஆடுதுறையில் இருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

வழிபஸ் தடம் எண்
கும்பகோணம் – அணைக்கரை27
கும்பகோணம் – குத்தாலம்2
கும்பகோணம் – பந்தநல்லூர்64
கும்பகோணம் – திருலோகி38
ஜெயங்கொண்டம் – ஆடுதுறை9

ஆகிய நகரப் பேருந்துகளும், கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் இராமலிங்கம். கிரீன், தாஜுதீன் ஆகிய தனியார் பேருந்துகளும் மயிலாடுதுறையில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் செல்வம். ஷண்முகம் ஆகிய பேருந்துகளும் சூரியனார்கோயில் வழியாகச் செல்லுகின்றன.

திருக்கோயிலில் தங்குவதற்கு விடுதி வசதி உள்ளது.

பூஜை கட்டணங்கள்

பூஜை கட்டணம்
அர்ச்சனை 1-க்கு (தேங்காய், பழம் சீட்டு உடபட)20.00
நவக்கிரக அர்ச்சனை (தேங்காய், பழம் சீட்டு உட்பட)180.00
சகஸ்ரநாம அர்ச்சனை 1-க்கு150.00
சூரிய அபிஷேகம் (வஸ்திரம் மாலை தனி)500.00
ஏனைய கிரக அபிஷேகம் (வஸ்திரம் மாலை தனி)400.00
நவக்கிரக அபிஷேகம் (வஸ்திரம் மாலை தனி )3000.00
சூரிய ஹோமம்2250.00
நவக்கிரக ஹோமம்6000.00
மஹாபிஷேகம் (தமிழ் மாத முதல் ஞாயிறு)20000.00
சிறப்பு அபிஷேகம் மூலவர் (நீங்கள் முதல் வியாழன் வரை)20000.00
கட்டளை அர்ச்சனை உள்நாடு (ஒரு வருடம்)300.00
கட்டளை அர்ச்சனை வெளிநாடு (ஒரு வருடம்)600.00
கட்டளை அர்ச்சனை (ஆயுட்காலம்)3000.00
திருவிளக்கு அறக்கட்டளை2001.00
நித்திய ஆராதனை கட்டளை முதலீடு15000.00
நித்திய அன்னதானக் கட்டளை முதலீடு30000.00

அபிஷேக நேரம்

தினசரி காலை 8.00, 10.30 மற்றும் மாலை 5.00 மணிக்கு,ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 7.00 மணி, மாலை 5.30 மணி

திருக்கோயில் நடைதிறப்பு நேரம்

தினசரி காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை,மாலை 4.00 முதல் இரவு 8.30 மணி வரை,ஞாயிறு மட்டும் காலை 5.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை,மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 

விநாயகர், சுவாமி, அம்பாள், நவக்கிரகங்கள்சூரியனார்கோயிலில் 13 அர்ச்சனைகள் செய்ய வேண்டும். 13 நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். பக்தர்கள் வயது தீபம் ஏற்றி வழிபடுவது மிகச்சிறப்பாகும்.

ஆலய முகவரி

கண்காணிப்பாளர், ஸ்ரீ சிவசூரியப்பெருமான் திருக்கோயில் சூரியனார்கோயில், திருமங்கலக்குடி – 612 102. போன் : (0435) 2472349

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular