Wednesday, May 22, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்தனுசு லக்னம் பற்றிய விரிவான தகவல்கள்

தனுசு லக்னம் பற்றிய விரிவான தகவல்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

தனுசு லக்னம்

ராசி மண்டலத்தில் ஒன்பதாவது ராசி தனுசு லக்னம் .இது கால புருஷனின் இரு தொடைகளைக் குறிக்கும். இது அக்கினி தத்துவத்தைச் சேர்ந்தது. பிருஷ்டோதய ராசியாகும். உபய ராசி, ஆண் ராசி அல்லது ஒத்தை ராசி கிழக்கு திக்கைக் குறிக்கும். இரவில் பலம் கொண்டது. இதற்கு அதிபதி சுபரான குருபகவான். இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள் மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகும்.

தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களின் பொதுவான குண நலன்கள்

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரம் உள்ளவர்கள், நல்ல பலமுள்ள உடலமைப்பு உள்ளவர்கள், வட்டமான நெந்தி, தீண்ட அழகான மூக்கு நீண்ட அல்லது சற்று உருண்டையான முகம் உள்ளவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்கள் தன்னம்பிக்கையுள்ளவர்கள், தீர்க்கதரிசி எதையும் எளிதில் கிரகிக்கும் சக்தியுள்ளவர்கள், சுய கவுரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்கமாட்டார்கள், தான் சரியென்று எண்ணியதை அடித்துச் சொல்லுவார்கள், உரத்த அதிகாரமும் கட்டளை இடுவதும் போன்ற குரலில் பேசுவார்கள் பண்பும் ஆசாரமும் உள்ளவர்கள் முன் கோபி, ஆனாலும் இரக்ககுணம் உள்ளவர்கள். பேச்சி கெட்டிக்காரர்கள். எல்லோரிடமும் பிரியமாகப் பழகுவார்கள். கொஞ்சம் தற்பெருமை உள்ளவர்கள். ஆன்மீகத்திலும், ஜோதிடத்திலும் ஈடுபட்டுப் புகழ்பெறக் கூடியவர்கள்.

தனுசு லக்னம்

கிரகங்களின் ஆதிபத்திய பலன்கள்

சூரியன்

பாக்கியஸ்தானமான 9ஆம் இடத்திற்கு அதிபதியானதால் பூர்ணயோகாதபதியாகிறார். இவர் வலுக்கவேண்டும். வலுத்த சூரியன் கவுவரமும் அதிகாரமும் உள்ள நல்ல உத்தியோகம், அரசாலும் அதீகாரிகளாலும் ஆதாயங்களும் அரசு அனுகூலங்களும் அளிப்பார்; அரசு அதிகாரியாகவும் ஆட்சியில் அமரக் கூடிய அரசியல் தலைவனாகவும் ஆக்குவார்.

இவர் கெட்டால் உத்தியோகம் கெடும், அரசால் இன்னல்கள் ஏற்படும். பிதுர் பாக்கியமும் பிதாவின் ஆயுளும் பாதிக்கப்படும், சூரியன் லக்னத்தில் இருந்தால் அதிர்ஷ்டத்தை அளிப்பார்,5-ல் உச்சம் ஆனால் கல்வி, அறிவு, ஆசாரம், தீர்க்கதரிசனம், யோகம் ஆகியவை கிட்டும். இவர் குருவுடனோ, செவ்வாயுடனோ சேருவது யோகமாகும்.

சந்திரன்

8க்கு உடையவரானாலும் அஷ்டமாதிபத்திய தோஷம் கிடையாது. ஆனாலும் சுபருமல்ல. சமமானவர். இவர் வலுத்தால் நீண்ட ஆயுள், தனம், மன அமைதி ஆகியவற்றை அளிப்பார். 6ல் உச்சம் பெறுவது நல்லது.

செவ்வாய்

பூர்வ புண்ணிய ஸ்தானமான 6ஆம் இடத்திற்கும் விரயஸ்தானமான 12ஆம் இடத்திற்கும் அதிபதியாகிறார். இவர் 5ஆம் ஆதிபத்தியத்தால் சுபராகிரார். இவர் குருவிற்கு நண்பரானதால் இவர் யோக பலன்களை அளிப்பார். இவர் வலுத்தால் மக்கள் சுபபலன்களைப் பெற்று உயர்நிலையை அடைவார்கள் புத்திரர்களால் நற்பலனை அடைவர். பொருளாதார முன்னேற்றத்தையும் தந்தைக்கு அதிர்ஷ்டத்தையும் அளிப்பார். ஸ்பெகுலேஷன் மூலம் லாபம் கிடைக்கும்.

இவர் 11ல் இருந்தால் விரயாதிபத்தியத்தின் பலன்கள் நீங்கி யோக பலன்களை அளிப்பார்; இவர் குருவுடன் சம்பந்தப்பட்டால் ராஜயோக பலன்களாக நடக்கும் இவர் சுக்ரனுடன் சேருவது அவ்வளவாக நல்லதல்ல. இந்த லக்னத்தாருக்கு ஆண் பிள்ளைகளே அதிகம் பிறப்பார்கள்.

புதன்

களத்திர ஸ்தானமான 7ம் இடத்திற்கும் ஜீவன ஸ்தானமான 10ஆம் இடத்திற்கும் அதிபதி. கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுகிறது. அடுத்து 7 ஆம் இடம் பாதக ஸ்தானமாகவும் மாரகஸ்தானமாகவும் அமைவதால் பாதகாதிபதியாகிறார். ஆக இவர் தோஷமுள்ளவரானார்.பொதுவாக இவர்கேந்திரங்களில் இருப்பது கெடுதலாகும். 6, 8, 12-ல் மறைந்தாலும் தோஷம் நீங்கி, ஓரளவு தன்மை செய்வார். நான்காம் இடத்தில் நீசம் பெற்றால் ஜீவன பாவம் வலுக்கும். இவர் 2,6,7 அல்லது 8-ல் இருந்தால் தனது தசாபுத்களில் ஆரோக்கியத்தைக் கெடுப்பார். இவர் லக்னத்திலோ 7-லோ இருந்தால், வியாதி, கஷ்ட நஷ்டங்கள், பதவி இறக்கம் போன்ற கெடுபலன்களை அளிப்பார்.

தனுசு லக்னம்

இவர் சுப பலம் பெற்றால் உத்தியோகம், அரசால் ஆதாயங்கள் ஆகியவைகளை அனிப்பார். இவர் கோணத்தில் அமர்வது ஓரளவு நன்மை தரும். பத்திரிகை, வர்த்தகம், வங்கி, கல்வி, சட்டம், தணிக்கை, அரசு அலுவலகம், ஆகிய துறைகளில் தொழில் அமையலாம். இன்ஜினீயர், ஆடிட்டர்,ஆசிரியர், பேராசிரியர், தூதுவர், கணித மேதை, வக்கீல், நீதிபதி போன்ற தொழில் மேதைகளாக வரலாம்.சுவைப்பொருள். காகிதம், மருந்து, துத்து நாகம், கடலை, ஆகியவற்றின் வியபாரம் விருத்தி அவிக்கும்.

குரு

லக்னத்திற்கும் நான்காம் இடத்திற்கும் அதிபதியாவதால் கேந்திராதிபத்திய தோஷம் பெறுகிறார். ஆகையால் இவர் கேந்திரங்களில் இருப்பது நல்லதல்ல. லக்னத்தில் இருந்தால் உடல் நலமும் தோற்றமும் கெடும். 4-ல் தாய் சுகம் தெடுதலும் 7-ல் இருந்தால் களத்திர தோஷமும் 10-5 இருந்தால் தொழில் பாதிப்பையும் ஏற்படுத்துவார். இவர் கோணத்தில் அமர்வது நல்லது. சொல்லப்போனால் கேந்திரங்களைத் தவிர மற்ற இடங்களில் இருப்பது மேல். இவர் சுபபலம் பெற்றால், பொருளாதாரம், வாழ்க்கை வசதி கள், மன அமைதி, சமூகத்தில் கவுரவம் சிறந்த அறிவு ஆகியவற்றை அளிப்பார்.

சுக்ரன்

ரண, ருண, ரோக சத்துருஸ்தானமான 6 ஆம் வீட்டிற்கும் உபய லக்னத்திற்கும் மாரஸ்தானமான 11ஆம் இடத்திற்கும் ஆதிபத்தியம் பெறும் சுக்கிரன் குருவுக்கு சத்துகுவானதால் வலுத்த பாபி ஆகிறார். இவர் வலுத்தால் லாபம் அதாவது. பொருளாதாரம் நன்றாக இருக்கும். ஆனால் கடன் தொல்லை வியாதி,சத்துருக்களால் கவலைதொல்லை, பெண்களால் அவ மானம், ஆகியவைகளையும் கொடுப்பார்.

இவர் சுபபலம் பெற்றால் அதாவது 4-ல் உச்சம், சனியுடன் சேர்த்து 11-ல் ஆட்சி, சனியுடன் பரிவர்த்தனை ஆனால், சூரியனுடன்9-ல் இருந்தால், தனம், புகழ், வாகனம், சொத்து ஆகியவைகளை அளிப்பரர். இவர் 8 அல்லது 12-ல் இருப்பது நலம் என்ற கருத்தும் உண்டு.

சனி

2ஆம் இடமான தனஸ்தானத்திற்கும் ஆதி பத்தியம் பெறும் சனி பாபி என்றே கருதப்படுகிறார். ஆனால் இவர் 5 அல்லது 11ஆம் இடத்தில் இருந்தால் யோக பலன்களை அளிப்பார். சிம்மத்திலோ விருச்சிகத்திலோ இருந்தால் கெடுபலன்களையே அளிப்பார். இந்த லக்னக்காரர்களுக்கு சகோதரர்கள் பிரயோஜன மில்லை.

சுபர், அசுபர் விளக்கம்

சுபர்

பெரும்பாலான நூலாசிரியர்கள் சூரியனும் ,புதனும் சுபர் என்று ஒத்துப் போகின்றனர். பஞ்சமாதிபதி செவ்வாயும் சுபன் என்பதும் பெரும்பான்மையான கருத்து. ஆக சூரியன், செவ்வாய், புதன் மூவரும் சுபர்கள். சந்திர காவிய நூலாசியர் மட்டும் சனி, சூரியன், செவ்வாய் மூவரும் சுபர் என்கிறார்.

யோகதிபதி

9-க்குடைய சூரியனும் 10க்குடைய புதனும் 5-க்குடைய செவ்வாயும் யோகாதிபதிகள். சூரியன் செவ்வாயுடன் சேர்ந்தாலும் புதனுடன் சேர்ந்தாலும் யோகமாகும். இந்த மூவரும் ஒன்று சேர்ந்தால் வலுத்த தர்மகர்மாதிபதி யோகமாகும். ஆக சூரியன், புதன் யோதிபதிகள். செவ்வாய் அரையோகாதிபதி.

தனுசு லக்னம்

பாபி

6, 11 ஆகிய இரண்டு கெட்ட ஸ்தானங்களுக்கு அதிபதியாவதால் சுக்கிரன் ஒருவரே இந்த லக்னத்திற்கு பாபி என்பது ஒருமித்த கருத்து. சந்திர காவிய நாலாசிரியரோ “தனுசிற் பிறந்தவர்க்குத் தண் புகர் பொன் பாபி” என்று குரு, சுக்கிரன் இருவரும் பாபி என்கிறார். காரணம் குருவுக்குக் கேந்திராதி பத்திய தோஷம் ஏற்பட்டதாக இருக்கலாம்.

மாரகாதிபதி

பொதுவாக 2, 7-க்குடையவர்கள் மாரகாதிபதிகள். உபய லக்னத்திற்கு 7,11-க்கு உடையவர் விசேஷ மாரகாதிபதிகள். இதன்படி 2-க்குடைய சனியும் 7-க்குடைய புதனும் 11-க்குடைய சுக்கிரனும் மாரகாதிபதிகள். இதனை அநேகமாக எல்லாநூலாசிரியர்களும் சம்மதித்துள்ளனர்.

சனி குருவுக்கு நட்பானதால் 11-ல் இடத்தில் உச்சமானால் ஒழியக் கொல்ல மாட்டார். புதனும் சுக்கிரனுமே கொல்லுவார்கள் என்பது பலரும் ஒப்புக் கொண்ட கருத்து. ஜாதக அலங்கார நூலாசிரியர் சனியே கொல்லுவான் என்கிறார். இதனை மற்றையோர் சம்மதிக்கவில்லை. ஆக புதனும் சுக்கிரனுமே வலுத்த மாரகாதி பதிகள்.

முக்கிய நிகழ்ச்சிகள் நேரும் காலம்

மாதுதேஷம்(தாய்க்கு கண்டம்)

சந்திர தசை-செவ்வாய், சனி, புதன். சுக்கிரன் புத்திகள்.

ராகு தசை-ராகு, சனி, சுக்கிரன், செவ்வாய் புத்திகள்.

குரு தசை-சனி, சுக்கிரன், சந்திரன், செவ்வாய்,ராகு புத்திகள்

புத தசை-சந்திரன்,செவ்வாய், ராகு, குரு புத்திகள்

சுக்ர தரை- சந்திரன்,செவ்வாய் ,ராகு,குரு புத்திகள்.

மேற்படி தசா புத்தி காலங்களில் தாயாருடன் விரோதமோ பிரிவினையோ அல்லது அவருக்கு கஷ்டமோ கண்டாதி பிணிகளோ அல்லது மரணமோ நிகழலாம்.

பிதுர்தோஷம்(தந்தைக்கு கண்டம்)

சூரிய தசை-சனி, சுக்கிர புக்திகள்.

ராகு தசை- குரு,சனி, சந்திர புக்திகள்.

செவ்வாய் தசை- குரு, சனி, சந்திர புத்திகள்.

சனி தசை – சனி,சுக்ரன், ராகு, குரு புக்திகள்.

குரு தசை- குரு, சனி, சுக்ரன், ராகு புக்திகள்.

சுக்கிர தசை -சுக்ரன், ராகு, சனி, புதன், கேது புக்திகள்.

மேற்படி தசாபுக்தி காலங்களில் தகப்பனாருடன் விரோதமோ, பிரிவினையோ அல்லது தகப்பனாருக்குக் கஷ்ட நஷ்டங்களோ. கண்டாதிபிணிகளோ, மரணமோநேரலாம்.

தனுசு லக்னம்

திருமணம் நடைபெறும் காலகட்டம்

சூரிய தசை – சூரியன், ராகு, குரு, சுக்கிர புக்திகள்.

புத தசை- சுக்ரன், சூரியன், ராகு, குரு புக்திகள்.

செவ்வாய் தசை – ராகு, குரு சுக்ரன், சூரியன் புக்திகள்.

குரு தசை – குரு, சுக்ரன், சூரியன், ராகு புக்திகள்.

சுக்கிர தசை – சுக்ரன், சூரியன், ராகு, குரு புக்திகள்.

மேற்படி தசாபுக்தி காலங்களில் திருமணம் நடக்கும். மனைவிக்கும் மனைவியாலும், ஆதாயங்களும் அனு கூலங்களும் கிட்டும்.

களத்திர தோஷம் (மனைவிக்கு கண்டம்)

குரு தசை – குரு, சுக்ரன், சந்திரன் ராகு புக்திகள்.

ராகு தசை -ராகு, சனி, சுக்கிர புக்திகள்.

சனி தசை- சனி, சுக்ரன், ராகு புக்திகள்.

கேது தசை – சுக்ரன், சனி, ராகு புக்திகள்.

சுக்ர தசை – செவ்வாய், சனி, ராகு புக்திகள்.

மேற்படி தசா புக்தி காலங்களில் மனைவியுடன்’ விரோதமோ பிரிவினையோ அல்லது அவருக்குக் கண்டாதிபிணிகளோ கஷ்டங்களோ அல்லது மரணமோசம்பவிக்கலாம்.

புத்திர பாக்கியம்

செவ்வாய் தசை- குரு புதன், சுக்ரன், சந்திர புத்திகள்.

ராகு தசை குரு, புதன், சுக்ரன், சந்திர புக்திகள்.

குரு தசை குரு, புதன், சுக்ரன், சந்திர புக்திகள்.

சனி – தசை புதன், சுக்ரன், சந்திரன்,புக்திகள்.

சூரிய தசை -குரு,சந்திரன்,புதன்,சுக்கிர புக்திகள்.

மேற்படி தசாபுக்தி காலங்களில் புத்திரப் பேறு அமையும். புத்திரர்களுக்கும் அவர்களால் உங்களுக்கும் சுப பலன்கள் நிகழக்கூடும்.

புத்திர தோஷம் (பிள்ளைகளுக்கு கண்டம்)

செவ்வாய் தசை – ராகு,சனி,சுக்ரன்,சந்திர புத்திகள்.

ராகு தசை – ராகு,சனி,சுக்ர சந்திர புத்திகள்.

குரு தசை – சனி, சுக்ரன்,ராகு,கேது புத்திகள்

சனி தசை – சனி ,சுக்ரன்,ராகு, கேது புத்திகள்.

சூரிய தசை – ராகு,சனி,கேது,சுக்ர புத்திகள்.

மேற்கண்ட தசா புத்தி காலங்களில் புத்திரர்களுக்கு கஷ்ட நஷ்டங்களோ,காண்டாதி பிணிகளோ அல்லது ஆயுள் தோஷமோ அவர்களுடன் விரோதமோ பிரிவினையோ ஏற்படலாம்.

சகோதர தோஷம்(உடன் பிறப்புகளுக்கு கண்டம்)

சனி தசை – புதன், சுக்ரன்,ராகு புத்திகள்

சுக்ர தசை – சுக்ரன்,செவ்வாய், சனி,ராகு புத்திகள்.

சூரிய தசை – செவ்வாய்,ராகு ,சனி,ராகு,சுக்ரன் புத்திகள்.

செவ்வாய் தசை – செவ்வாய்,ராகு,சனி,சுக்ர புத்திகள்.

ராகு தசை – ராகு,புதன்,சுக்ர புத்திகள்.

இந்த காலங்களில் சகோதரருடன் விரோதம் பிரிவினை அல்லது அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் கண்டாதி பிணிகள் அல்லது மரணம் சம்பவிக்கலாம்.

மாராகம் (மரணம்)

சனி திசை-சனி, சுக்கிரன்,சந்திரன், செவ்வாய் புத்திகள்

சுக்கிர தசை- சுக்கிரன், சந்திரன், செவ்வாய், ராகு, சனி புத்திகள்.

புதன் தசை – சுக்கிரன், சந்திரன், செவ்வாய், ராகு ,சனி புத்திகள்.

ராகு தசை – ராகு, சனி, சுக்கிரன், சந்திரன், செவ்வாய் புத்திகள்.

மேற்கண்ட காலங்களில் கஷ்ட நஷ்டங்களும் கண்டாதி பிணிகளோ, மரணமோ நேரலாம்.

யோக காலங்கள்.

சூரிய தசை- சூரியன், ராகு, குரு, சுக்கிர புத்திகள்.

செவ்வாய் தசை- ராகு, குரு, சுக்கிரன், சூரியன் புத்திகள்.

புதன் தசை – சுக்கிரன், சூரியன், ராகு, குரு புத்திகள்.

ராகு தசை- சுக்கிர புத்தி முதல் தசை முடியும் வரை ஆகிய காலங்களில் சுப பலன்களை எதிர்பார்க்கலாம்.

யோகம் தரும் அமைப்புகள்

 • சனி உச்சமானாலும் நீசமானாலும் யோக பலன்களை அளிப்பார்.
 • சனி 5ல் இருந்தால் சனி திசை யோகம். சனி 3ல் ஆட்சி, சூரியனும் சுக்கிரனும் 9ல் இருக்க சனி திசை யோகம்.
 • சூரியன் லக்னத்திலும் குரு 9லுமாக பரிவர்த்தனையானால் ராஜயோகம்.
 • சூரியன்,செவ்வாய், குரு மூவரும் மேஷத்தில் இருக்க கௌரவம் அந்தஸ்து ராஜயோகம்.
 • சூரியன் புதன் செவ்வாய் மூவரும் சேர வலுத்த தர்மகர்மாதிபதி யோகம்.
 • லக்னத்திற்கு இருபுறமும் சுபர்கள் இருந்தால் தீர்க்கதரிசி.
 • சூரியன் புதன் குரு மூவரும் சேர்ந்து 1,5,9,10 ஆகிய இடங்களில் இருக்க ராஜயோகம்.
 • சனியும் செவ்வாயும் உச்சம் பெற குரு 4ல் ஆட்சியானால் வெகு வித்தை சிறந்த பேச்சாளர்.
 • சந்திரனுக்கு 4,7,10ல் சனி இருக்க யோகம்
 • 4,10, 11 ஆம் அதிபதிகள் ஆட்சியானால் மனைவி மற்றும் பெண்கள் மூலம் யோகம்.
 • குருவும் செவ்வாயும் சேர்ந்து லக்னம் 4, அல்லது 5ல் இருந்தால் பூமி, வாகன யோகம்.
 • சனி சுக்கிரன் பரிவர்த்தனையானால் தனயோகம்.
 • குரு வலுக்க செவ்வாயும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தால் நல்ல மனைவி, மக்கள், படிப்பு, அந்தஸ்து,தீர்க்காயுள்.
dhanusu lagnam தனுசு லக்னம் பற்றிய விரிவான தகவல்கள்
 • நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள்.5, 10க்குடையவர்கள் லக்னத்தில், 9ல் குரு 11 இல் சுக்கிரன் ஆட்சி.3க்குடையவர் 10க்குடையவரை பார்க்கிறார். 6ல் சந்திரன் உச்சம். சந்திரனுக்கு 4ல் குரு கஜகேசரி யோகம். 10க்கு உடையவரையும் செவ்வாயையும் குரு பார்க்கிறார். ஜனாதிபதி பதவி வகித்தார்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular