Saturday, July 27, 2024
Homeஆன்மிக தகவல்சிவராத்திரி வழிபாடு மற்றும் விரதமுறைகள்

சிவராத்திரி வழிபாடு மற்றும் விரதமுறைகள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சிவராத்திரி

சிவராத்திரிக்கான வரலாறு 

ஒரு முறை பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்தினால் உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய,சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டதால் எங்கும் இருள் சூழ்ந்தது. உடனே சிவன் நெற்றிக்கண்ணை திறக்க வெப்பம் தாளாமல் தேவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். பார்வதி அன்று இரவு விழித்திருந்து அபிஷேகம் செய்து அவரை குளிரச் செய்தால் அதுவே சிவராத்திரி ஆகும்

சாகா வரம் தரும் அமிர்தத்தை வேண்டி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தனர். வாசுகி பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்த போது பாம்பு வலி தாங்காமல் விஷத்தைக் கக்கியது. அதை திரட்டி விழுங்கிய சிவன் மயக்கம் வந்தது போல கிடந்து திருவிளையாடல் புரிந்தார். அன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் தேவர்கள் அவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர் அந்த நாளே சிவராத்திரி

சிவராத்திரி

விரத முறை

சிவராத்திரி அன்று நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. முடியாதவர்கள் காலை இரவில் பால், பழம் சாப்பிட்டு மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம்.

“ஓம் நமசிவாய”

“ஓம் சிவாய நம”

மந்திரங்களை முடிந்த அளவு ஜபிக்க வேண்டும்.

சிவன் கோயிலில் மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். பசி தூக்கத்தை அடக்குவதன் மூலம் காமம், கோபம் போன்ற தீய குணங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சிவனுக்கு அபிஷேகம் செய்து புற வழிபாடு அக வழிபாடாக சிவபெருமானே தண்ணீர் பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது அதனை ஞான பாலாக்கி தந்தருள்வாயாக அறியாமல் செய்த பாவங்களைப் போக்கி நலம் சேர்ப்பாயாக என்று பிராத்திக்க வேண்டும்

சிவராத்திரி என்று நடந்தவை

  • படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.
  • சிவ பூஜை செய்த மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகன் வளம் பெற்றனர்.
  • தேவலோகத்தின் அதிபதியானார் இந்திரன்.
  • செல்வத்தின் அதிபதியானார் குபேரன்.
  • சிவனின் இடப்பாகத்தை பெற்றால் பார்வதி.
  • தவமிருந்து அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்தை பெற்றார்.
  • சிவனுக்கு தன் கண்களை கண்ணப்பர் அளித்தார்.
  • தவ சக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.
  • மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்தார் சிவபெருமான்.
  • பிரம்மாவும் மகாவிஷ்ணு சிவபெருமானின் திருமுடி திருவடியை தேடினர்.

 மோட்சம் தரும் வில்வம்

வில்வ மரத்தில் மகாலட்சுமி குடி கொண்டிருக்கிறாள். வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்ய மோட்சம் கிடைக்கும். ஒருமுறை பயன்படுத்திய வில்வத்தை நீரில் கழுவி விட்டு மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை வில்வ தளம் என்பர். இதனால் பூஜிப்பது சிறப்பானது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வில்வ இலைகளை பறிக்கக் கூடாது காய்ச்சல் இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. 

சிவராத்திரி சிவராத்திரி அன்று ஏன் உபவாசம் இருக்க வேண்டும்

உபவாசம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். உபவாசம் என்பது உப+வாசம் என்று பிரியும். இறைவனுக்கு அருகில் செல்வது உண்ணாநோன்பு அனேகமாக அனைத்து சமய நூல்களும் உண்ணாநோன்பை வலியுறுத்துகின்றன.

சிவராத்திரி

உண்ணா நோன்பு என்பது உயிருக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் நன்மை செய்கின்றது. உடலில் உள்ள நச்சுப் பொருள்களை எல்லாம் உண்ணாநம்பும் வெளியேறுகின்றது. விரத நாளில் உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல கெட்ட எண்ணங்களை எண்ணாமல் இருப்பதே உபவாசம் என்று “பவிஷய புராணம் சொல்கிறது.

 சிவராத்திரியின் நோக்கம்

ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவனுக்கு வேண்டிய குணங்கள் பொறுமை, மவுனம், அகிம்சை, சத்தியம், தயை, தானம், தூய்மை புலனடக்கம். அக விழிப்புணர்வை தூண்டும் இந்த குணங்களை அடையச் செய்வதை சிவராத்திரியின் நோக்கமாகும்.

சிவராத்திரி பூஜை செய்வது

இறைவனின் பெயர்களை 16 முறை சொல்லி பூஜிப்பது ஷோடச பூஜை, 108 முறை சொல்லி பூஜை செய்வது அஸ்டோத்திரம், 300 முறை இறைவனின் நாமங்களை சொல்லி பூசிப்பது திரிசதி,1000 முறை சொல்லி பூஜிப்பது சகஸ்ர நாமா அர்ச்சனை. ஒரு லட்சம் முறை சொல்லி பூஜிப்பது லட்சர்ச்சனை ஒரு கோடி முறை சொல்லி பூஜையை செய்வது கோடி அர்ச்சனை.

சிவ நாமத்தை ஒரு கோடி முறை சொல்வதன் மூலமாக பிறவிப் பிணி அகன்று பிறவா பேரின்ப நிலை பிறக்கும். பஞ்சபூதங்கள் என்பது மண், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று இது வெளியிலும் இருக்கிறது உள்ளிலும் இருக்கிறது. ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. ஒன்று இல்லாமல் ஒன்று இருப்பதில்லை. ஒன்று குறைந்தாலும் உயிருக்கு பயனில்லை.

இந்த தத்துவங்களை பஞ்சபூத தத்துவங்களாக பஞ்சபூத தலங்களாக விளங்குகின்றன. இந்த பஞ்சபூதங்களும் ஈஸ்வர தத்துவமாக ஒடுங்கி சிவராத்திரியில் லயமாகி விழிப்புணர்வு பெறுகிறது. இறப்பு என்னும் மாய வலையிலிருந்து விடுபட்டு மெய்ப்பொருளாகிய செம்பொருள் எனும் இறைநிலையை அடையச் செய்வது சிவராத்திரி.

 சிவராத்திரி வழிபாடு

ஒவ்வொரு நாளும் சராசரியாக உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். 4 லட்சம் புதிய உயிர்கள் பிறக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வு 74 வருடங்கள் என்று சொல்கிறார்கள். தினசரி பிறப்பையும் இறப்பையும் கண்ணால் காண்கின்றான். பிறப்பை காண முடியாத நிலையில் பிறந்த மனிதன் தன்னுடைய இறப்பையும் காணமுடிவதில்லை. நிச்சயமற்ற தன்மையில் வாழுகின்ற இந்த மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு இறப்பின் நுட்பங்களை உணரச் செய்து பேரின்ப நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்ற வழிபாடு தான் சிவராத்திரி வழிபாடு.

சிவராத்திரி

இருட்டில் தொடங்கிய வழிபாடு விடியலில் முடிகிறது. நான்கு சாம வழிபாட்டினால் நம்மைச் சுற்றி இருக்கின்ற பொய்மை ஆகிய இருள் விலகி உண்மையான வெளிச்சம் சிவந்த சுடராக அண்ணாமலையின் உச்சியில் தெரிகின்ற தீபமாக ஒளி பிழம்பாக நான்காவது ஜாமத்தின் முடிவில் நமக்கு காட்சி தருகின்ற “பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா” என்று இந்த காட்சியை சந்திரசேகர சொரூபத்தை காட்டுவது தான் சிவராத்திரியுடைய நிறைவு பகுதி.

நாளைய விடியல் நமக்கென்று இருக்கும் என்ற நம்பிக்கைதான் சிவராத்திரி. நாம் இதுவரை செய்த பாவங்களையும் பொறாமைகளையும் தொலைத்து தலைமுழுகி விட்டு சிவராத்திரி அன்று இன்று புதிதாய் பிறந்தோம் இது ஈசன் அளித்த வாழ்வு நம் கையில் இருப்பதும் நம் உடம்பால் சுகிப்பதும் அவன் தந்தது என்ற உணர்ந்து பிறருக்கு கொடுத்து மகிழ்ந்த பேரின்ப நிலையை அடைவது சிவராத்திரியின் நோக்கம்.

சிவராத்திரியில் என்ன செய்ய வேண்டும்

 சிவ சிந்தனை என்பது அன்பு சிந்தனை தான். மங்கல சிந்தனை தான. சிவராத்திரி என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால்

அப்பாநான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்

செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் ‘வேண்டும்

தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.

-என்றுதான் வேண்ட வேண்டும்.

சிவராத்திரி

சிவராத்திரியின்போது ஸ்ரீருத்ரம் போன்ற வேத மந்திரத்தைச் சொல்லி

வழிபட வேண்டும்.

நமஸ்தே (அ)ஸ்து பகவான் விஸ்வேஸ்வ ராய

மஹாதேவாய த்ரியம்பகாய, திரிபுராந்த காய

திரிகாக்னி காலாய காலாக்கினி ருத்ராய

நீலகண்டாய், மிருத்யுஞ்சனாய,

ஸர்வேஸ்வராய, மஹாதேவாய நமஹ

பகவானே! விஸ்வேஸ்வரன் என்று சொல்லப்படுகின்ற உலக நாயகனே! தேவர்களின் தலைவனே! மகாதேவனே! முப்புரங்களை எரித்தவளே முக்கண்ணனே குதானே விஷததை அரும் திய நீலகண்டனானவனே, காலனை வென்றவனே, அனைத்து உயிருக்கும் ஈசனே. மகாதேவனே உனக்கு நமஸ்காரம் என்று சொல்கின்ற இந்தப் பகுதியை சொல்ல வேண்டும்.

அடுத்து, குரு நமசிவாயர் அருளிய

ஓம் எனும் எழுத்தில் உள்ளே ஒளியதாய் விளங்குகின்ற வாமனே கருணை நல்கும்

அன்னலே நமசிவாய

-என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular