Thursday, December 7, 2023
Homeராசிபலன்மாசி மாத பலன்கள்மாசி மாத பலன்கள்-2023

மாசி மாத பலன்கள்-2023

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

மாசி மாத பலன்கள்-2023

நாட்டில் வெயில் புளுக்கம் அதிகமாகும். கோடை வெயில் முன்கூட்டியே ஆரம்பிக்கும். இம்மாதம் தங்கம், வெள்ளி விலைகள் நன்கு உயரும். பங்கு வர்த்தகம் அதிக அளவு வளர்ச்சி இல்லாமல் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும். ஜவுளித் தொழிலும் ஆடம்பரத் தொழிலும் நல்ல வளர்ச்சியை அடையும். மஞ்சள் விலை ஏற்றமடையும். தெய்வ தொழில் காரியங்கள், சுபகாரியங்கள் அதிகமாக நடக்கும். மக்கள் ஆரோக்யம் மேம்படும். சினிமாத் துறையினர் நல்ல லாபமடைவார்கள்.

முக்கிய நாட்கள்

மாசி மாதம் 6ம் தேதி மஹாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ பூஜை செய்யப் பாபங்கள் தொலைந்து கைலாச பதவி கிடைக்கும்.

மாசி மாதம் 8ம் தேதி ஸோமாவதி-மாக-மௌனி அமாவாசை இன்று அரச மரம் சுற்ற நினைத்த காரியங்கள் நடக்கும். இன்று சூரிய உதயத்திலிருந்து நாள் முழுவதும் மௌன விரதம் இருந்தால் வாய் வார்த்தைகள் மூலம் செய்த பாபங்கள், பெற்ற சாபங்கள் விலகும்.

மாசி மாதம் 9ம் தேதி சிறிய திருவடி அன்று ஸ்ரீராமரையும் ஆஞ்சநேயரையும் வழிபட பிரிந்த நண்பர்கள் கூடுவர்.

மாசி மாத பலன்கள்

மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்)

சூரியன்,சுக்கிரன்,புதன் ஆகிய மூவரும் சுபபலம் பெற்று வலம் வருகின்றனர். சுக, ருண, ரோக, சத்ரு. ஆயுள் ஸ்தானங்களுக்கு, குருவின் சுபப் பார்வைகிடைக்கிறது. தேவையான அளவிற்கு வருமானம் இருப்பதால், இம்மாதம் முழுவதும் பணப் பற்றாக்குறை இருக்காது. விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் நிலை காரணமாக, குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும், தேவையற்ற வாக்குவாதங்களும் ஏற்படக்கூடும்.

திருமணமுயற்சிகளில் வரன் அமைவது சற்றுக் கடினம். ஆரோக்கியம்திருப்திகரமாக இருக்கும். ஜென்ம ராசியில் ராகு நீடித்தாலும், மேஷ ராசியின் பெரும் பகுதியை ராகு கடந்து, மீனத்தை நெருங்குவதால் அவரால் ஏற்பட்ட தோஷத்தின் கடுமை குறைந்துவிட்டது. வீண் அலைச்சல்களும் குறையும். வழக்குகள் இருப்பின் சாதகமான போக்கு காணலாம். வெளியூர்ப் பயணம் ஒன்றைத் தவிர்க்க இயலாது. சூரியனும், ஒளஷதகாரகரான புதனும் இணைந்திருப்பதால்,தோல் மற்றும் நரம்பு சம்பந்தமான உபாதைகளால் அவதியுறும் மேஷ ராசியினருக்கு நல்ல குணம் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம்.

செல்ல வேண்டிய ஆலயம்: சூரியனார் கோவில்

அனுகூல தினங்கள்: 4-7, 11-13, 18-20, 25-27.

சந்திராஷ்டம தினங்கள்: மாசி 1 மாலை முதல் 3 இரவு வரை. மீண்டும் 28 நள்ளிரவு முதல் 30 வரை.

மாசி மாத பலன்கள்

ரிஷபம்

(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம்)

சூரியன்,குரு,கேது மூவரும் தொடர்ந்து உங்களுக்கு அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றனர். மாசி மாதம் 9ம் தேதியிலிருந்து புதனும் சுபபலம் பெறுகிறார். தேவையான அளவிற்கு வருமானம் உள்ளது. சூரியன், குரு மற்றும் சுக்கிரனின் நிலைகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழவிருப்பதையும் அதன் காரணமாக, அதிக செலவுகள் ஏற்படுவதையும் எடுத்துக்காட்டுகின்றன.

திருமண முயற்சிகள், சொந்த வீடு அமைதல் ஆகியவற்றில் வெற்றி கிட்டும். புதிய வஸ்திரங்கள், ஆபரணங்கள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. முக்கிய விஷயங்களில் தீர, ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள் ரிஷப ராசியினர். அந்த அறிவுத் திறனை, நீங்கள் இம்மாதம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு காலகட்டத்தில், தீர்மானிக்க முடியாத பிரச்னை ஒன்று ஏற்படும்.அத்தகைய காலகட்டங்களில், நிலைகள் சமயோகித புத்தியை அளிக்கும் கிரகங்கள் மூன்று. அவை புதன், சுக்கிரன், சந்திரன் ஆகும். இவற்றில் சுக்கிரன், உங்கள் ராசி நாதனாக இருப்பதால், இம்மாதத்தில் அவர் கைகொடுத்து உதவியருள் புரிவார்.

செல்ல வேண்டிய ஆலயம்: ஶ்ரீரங்கம் ரங்கநாதர்

அனுகூலமான தினங்கள்:
மாசி:1,2,6,10,14,17,22,24,28,29

சந்திராஷ்டம நாட்கள் : மாசி 3இரவு முதல 4,5இரவு வரை.

மாசி மாத பலன்கள்

மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: சுக்கிரன், கேது, புதன் ஆகியோர் மட்டுமில்லாமல், வீர்யம் நிறைந்த ராகுவும் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் நிலைகளில் அமர்ந்துள்ளனர். இம்மாதம்!மேலும், வாக்கு, தனம், குடும்பம், சுகம், களத்திரம் ஆகிய ராசிகளுக்கு குரு பகவானின் பார்வையும் உங்களுக்குப் பக்க பலமாக உள்ளதால், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைக்கு ஏற்ற வருமானத்தைத் தந்தருள்வார், சுக்கிரன்.

இந்த மாதமும் எதிர்பாராத செலவுகளினால், சேமிப்பிற்கு சாத்தியமில்லை. விவாக சம்பந்தமான முயற்சிகளில் குழப்பமும், முடிவெடுக்க முடியாத சூழ்நிலையும் உருவாகும். தீர்த்த. தல யாத்திரை, மகான்கள், பெரியோர்களின் தரிசனம் கிட்டும்.

நீதிமன்ற வழக்குகள் இருப்பின், அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளை அல்லது பெண்ணின்எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவு ஒன்றை எடுப்பீர்கள் என சுக்கிரன் மற்றும் புதன் ஆகியோரின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

வெளியூர்ப் பயணம் ஒன்றினால் நன்மை கிட்டும். சிறு,சிறு உடல் உபாதைகள் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும் எளிய சிகிச்சையினால் குணம் ஏற்படும்.

செல்ல வேண்டிய ஆலயம்: வியாழக்கிழமையன்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரவும்

அனுகூலமான தினங்கள்:
மாசி:1-4,8-11,15-17,22-24,28,29

சந்திராஷ்டம நாட்கள் : மாசி 5இரவு முதல் 7 பின் இரவு வரை.

மாசி மாத பலன்கள்

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்: குருவும், சுக்கிரனும் உங்களுக்கு அனுகூலமாக நிலைகொண்டுள்ளனர். மாசி 9ம் தேதி புதனும் சாதகமாக மாறுகிறார். குருபகவானின்சுபப்பார்வைஉங்கள் ராசிக்கும் 3, 5ம் இடங்களுக்கும் கிடைப்பது மேலும் அளவோடு அனுகூலங்களை அளிக்கக்கூடிய நிலையாகும். அடுத்த மாதம் (அதாவது, பங்குனி 15ம் தேதி) சனியும் அஷ்டம ஸ்தானமாகிய கும்பத்திற்கு மாறவுள்ளார். அதன் தாக்கம் இந்த மாதத்திலேயே தெரியும்.

ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியே சனிபகவானாக அமைந்துவிட்டதால், தோஷம் விலகுகிறது. கூடிய வரையில் வெளியில் அலைவதையும் நினைத்தபோது கண்ட இடங்களில் தரக்குறைவான உணவு வகைகளை உண்பதையும் இரவில் நெடுநேரம் கண் விழித்திருப்பதையும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை வேகமாக ஓட்டு தளையும் கண்ட கண்ட நண்பர்களின் சகவாசத்தையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும் திருமணம் முயற்சிகள் கைகூடும். வருமானம் போதுமான அளவிற்கு இருக்கும் மனைவியின் ஆரோக்கியம் நல்லபடியே உள்ளது.

செல்ல வேண்டிய ஆலயம்: திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, ஸ்ரீவாஞ்சியம் இதில் ஏதாவது ஒரு தலத்திற்கு சென்று வரவும்

அனுகூலமான தினங்கள்:
மாசி:4-6,10-13,18-21,25-27,30

சந்திராஷ்டம நாட்கள் : மாசி பின் இரவு 7ம்தேதி முதல் 9ம் தேதிவரை.

மாசி மாத பலன்கள்

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்: கிரக நிலைகளின்படி, இம்மாதம் முழுவதும் வரவும் செலவும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். சேமிப்பிற்கு சாத்தியமில்லை. மூன்றாம். நான்காம் வாரங்களில் பணப் பற்றாக்குறை சற்று கடுமையாகவே இருக்கும் என்பதை கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. 8ம் இடத்தில் குரு அமர்ந்திருப்பதால், பல குடும்பப் பிரச்னைகள் கவலையளிக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி பெறுவது மிகக் கடினம்.மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

சுக்கிரனின் நிலை அவ்வப்போது உதவிகள் கிடைக்க ஆதரவாக உள்ளது. கணவர் மனைவியரிடையே தேவயிைல்லாத வாக்குவாதங்களும், மனக் கசப்பும் உருவாகும். கூடியவரையில், விட்டுக்கொடுத்து, அனுசரித்து நடந்துகொள்வது குடும்ப நலனுக்கு அவசியமாகும். குழந்தைகள் முன்னிலையில், கணவர்-மனைவி கடுமையான வார்த்தைகளினால் பேசிக்கொள்வது, நம் செல்வங்களின் மனத்தைப் பாதிக்கும் என மனோதத்துவ நிபுணர்களும் அறிவுரை கூறியுள்ளனர் நீதிமன்ற வழக்குகளில் எவ்வித முடிவும் இன்றி நீடிக்கும் வெளியூர் பயணம் ஒன்று தவிர்க்க இயலாதது.

செல்ல வேண்டிய ஆலயம்: உங்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு வியாழக்கிழமைகளில் சென்று நெய் தீபமும் சனிக்கிழமைகளில் சென்று எண்ணெய் தீபமும் ஏற்றி வந்தால் அளவற்ற நன்மை கிடைக்கும்

அனுகூலமான தினங்கள்:
மாசி:1,2,6-9,13-17,21-23,27,28

சந்திராஷ்டம நாட்கள் : மாசி 10ம்தேதி முதல் 12ம் தேதி காலை வரை.

மாசி மாத பலன்கள்

கன்னி

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: சனி பகவானுக்கு, கும்ப ராசியின் தாக்கம் (magnetic influence) ஏற்பட்டுவிட்டதால், அவரால் பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். இந்த மாசி மாதத்தில்! குரு, சூரியன் ஆகிய இருவருமே யோக பலன்களை அளிக்கும் விதத்தில் சுப பலன் பெற்றுள்ளனர். ராசிக்கு குரு பகவானின் சுபப் பார்வை ஏற்பட்டிருப்பதும் நன்மையே!! நிதி நிலைமை திருப்திகரமாக உள்ளது. திட்டமிட்டுச் செலவு செய்தால், எதிர்கால அவசர தேவைகளுக்கென்று சிறிது சேமித்து வைத்துக்கொள்ள முடியும். கணவர்

மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பெண்மணிகள் கருத்தரிக்க உகந்த மாதம் இது. வளர்பிறையில் சேர்ந்திருப்பது, ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கு உதவும். ஆயுர்வேத சாஸ்திரமும் இதனை உறுதி செய்கிறது. நமதுபுராதன நூல்கள் அனைத்துமே விஞ்ஞான, மருத்துவ, வானியல், அறிவியல்பூர்வமானவை. உடல்நலன் திருப்திகரமாக இருக்கும். அஷ்டமத்திற்கு ராகு அமர்ந்திருந்தாலும், மேஷத்தின் பாதி தூரத்தை அவர் கடந்துவிட்டதால், அவரது “அஷ்டம ஸ்தான சஞ்சார தோஷம்” குறைந்துள்ளது இப்போது! திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். பலருக்குச் சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது.

செல்ல வேண்டிய ஆலயம்: திருக்கடையூர் அல்லது ஸ்ரீவாஞ்சியூர் சென்று வருவது சிறப்பு

அனுகூலமான தினங்கள்:
மாசி:1-4,8-11,15-17,22-24,28,29

சந்திராஷ்டம நாட்கள் : மாசி 12ம்தேதி காலை முதல் 14ம் தேதி மாலை வரை.

மாசி மாத பலன்கள்

துலாம்

சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

சனி பகவானின் அர்த்தாஷ்டக தோஷத்தினால், ஆரோக்கியக் குறைவு, கவலைகள், வருமானத்திற்குள் செலவுகளைச் சமாளிப்பதில் பிரச்னைகள் என்று பல விதங்களிலும் மன நிம்மதி பாதிக்கப்பட்டு வந்த துலாம் ராசி அன்பர்களுக்கு. அந்தத் தோஷம் தற்போது விலகிவிட்டது. வரும் பங்குனிமாதம் 15ம் தேதிமகரராசியை விட்டு, கும்ப ராசிக்கு மாறுவதால், அதன் சுப பலன் இப்போதே தெரியும்.

உடல் நலனிலும் மன நலனிலும் நல்ல மாற்றத்தையும் அபிவிருத்தியையும் காணலாம். குடும்பக் கவலைகள் குறையும். வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணப் பிரச்னை இராது. உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரனுக்கு முயற்சிக்கலாம். சொந்த வீடுவாங்கும் யோகமும் அமைகிறது. இந்த மாசி மாதத்தின் கடைசி வாரத்தில்.

செய்ய வேண்டிய பரிகாரம்: தினம்தோறும் காகத்திற்கு உணவளிப்பது அளப்பரிய நன்மைகளை பெற்று தரும்.

அனுகூலமான தினங்கள்:
மாசி:1,2,6,7,11-13,17-19,22-24,29,30

சந்திராஷ்டம நாட்கள் : மாசி 14ம்தேதி மாலை முதல் 16ம் தேதி நள்ளிரவு வரை.

மாசி மாத பலன்கள்

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குரு, சுக்கிரன்,ராகு ஆகிய மூவரும் பூரண சுப பலத்தை அளித்தருள்கின்றன. சனி பகவானுக்கு, கும்ப ராசியில் ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதால், அவரால் அர்த்தாஷ்டக தோஷம் ஏற்பட்டுள்ளது.குருபார்வைராசிக்கும், பாக்கிய லாபஸ்தானங்களுக்கும் ஏற்படுவதால், நன்மைகளே கிடைக்கும். விரயஸ்தானத்தில் கேது திருத்தல தரிசனங்கள் கிட்டும். வருமானம் நல்லபடியே நீடிக்கிறது.

வீண் செலவுகள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். குரு, சுக்கிரனின் சாதகமான நிலைகளினால், விவாக முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் நிச்சயதார்த்தம், விவாகம், மழலை பிறத்தல், பெரியோர்களுக்கு கனகாபிஷேகம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நிகழ்வதால், மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். திட்டமிட்டு செலவு செய்தல், சிறிது சேமிப்பிற்குப் பிறகு சாத்தியக்கூறு உள்ளது. ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும் இம்மாதத்தின் மூன்றாவது வாரம் வரையில் நான்காவது வாரத்தில் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் எளிய மருந்தினால் குணமாகும்.

செய்ய வேண்டிய பரிகாரம்: ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரம் தினம் தோறும் சொல்லி வர நன்மை கிடைக்கும்

அனுகூலமான தினங்கள்:
மாசி:3-6,11-15,20-24,28

சந்திராஷ்டம நாட்கள் : மாசி 16ம்தேதி நள்ளிரவு முதல் 19ம் தேதி முற்பகல் வரை.

மாசி மாத பலன்கள்

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

ஏழரை ஆண்டுகளாக சனி பகவானின் பிடியிலிருந்து விடுபடும் தற்போதைய நிலையில், உங்களுக்கு ஐந்து கிரகங்கள் சிறந்த சுபபலம் பெற்று அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றன.சூரியன், சனி, செவ்வாய், புதன் மற்றும் கேது ஆகியவையே அந்தக் கிரகங்கள். குடும்பத்தில் லட்சுமிகரமான சூழ்நிலை மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். வருமானம் போதிய அளவில் இருக்கும். சுபச் செலவுகள் சற்று அதிகமாகவே இருப்பினும், பணத் தட்டுப்பாடு இராது. ஆரோக்கியம் திருப்திகரமாகவே இருக்கும்.

நிரந்தர உடலுபாதைகளுக்காக சிகிச்சை மேற்கொண்டுவரும் நோயுற்றவர்கள், வயோதிகர்கள், பெண்மணிகள் ஆகியோருக்குக்கூட, மிக நல்ல குணம் தெரியும். வலிகள் குறையும். இரவில் உறக்கம் வராது தவிக்கும் நோயாளிகளுக்கு, அருமருந்தாகும் இந்த மாசிமாதமும்,வரவிருக்கும் காலகட்டமும். திருமண முயற்சிகளை மேற்கொள்வதற்கு அனுகூலமான மாதமாகும். குரு பகவான் சாதகமாக இல்லாவிடினும், பெரும்பான்மையான மற்ற கிரகங்கள் உதவிகரமாக இருப்பதால்,வரனுக்குக் காத்துள்ள இளைஞர்களுக்கும், கன்னியருக்கும் அனுகூலமான நேரமிது!

செய்ய வேண்டிய பரிகாரம்: உங்கள் ராசிக்குரிய இஷ்ட தெய்வத்தை வணங்கினால் அளப்பரிய நன்மைகளை பெறலாம்

அனுகூலமான தினங்கள்:
மாசி:2-4,8-11,15-18,22-24,28,29

சந்திராஷ்டம நாட்கள் : மாசி 19ம்தேதி முற்பகல் முதல் 21ம் தேதி இரவு வரை.

மாசி மாத பலன்கள்

மகரம்

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் தோஷம் நீங்கிவிட்டது எனக் கூறலாம். வரும் பங்குனி மாதம் 15ம் தேதிதான் உங்கள் ஜென்ம ராசியை விட்டு, கும்ப ராசிக்கு மாறுகிறார் சனி பகவான்.ஆயினும், அதன் நற்பலன் இம்மாதமே அரம்பித்துவிடுகிறது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக மாறும். மனத்தை அரித்து வந்த பிரச்னைகள் தீரும். வருமானம் பல உயர ஆரம்பிக்கும்.

வீண் செலவுகள் குறையும். திருமண முயற்சிகளில் ஏற்பட்டுவந்த தடங்கல்கள் நீங்கும். நெருங்கிய உறவினர்களிடையே உருவான விரோத மனப்பான்மையும், தவறான எண்ணங்களும் மறையும். குழந்தைகளின் நலன் பற்றிய பிரச்னை ஒன்று நல்லபடி தீரும். பழைய கடன்களை அடைப்பதற்கு வழி பிறக்கும். மழலைப் பேறின்றி வருந்தும், பல பெண்மணிகளுக்கு புத்திர பாக்கியம் ஏற்படுவதைத் தடுத்துவந்த தோஷம் நீங்கிவிடுவதால், கருத்தரிக்க மிகச் சிறந்த வாய்ப்புள்ளது.

செய்ய வேண்டிய பரிகாரம்: திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, ஸ்ரீவாஞ்சியம், காளகஸ்தி இவற்றில் ஏதாவது ஒரு திருத்தலத்திற்கு சென்று தரிசித்து விட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்:
மாசி:1-4,8-10,15-18,25-28

சந்திராஷ்டம நாட்கள் : மாசி 21ம்தேதி இரவு முதல் 24ம் தேதி காலை வரை.

மாசி மாத பலன்கள்

கும்பம்

(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

ஏழரைச் சனியின் தாக்கம் ஆரம்பமாகும் மாதமிது! அதிர்ஷ்டவசமாக, கும்பம், சனி பகவானின் ஆட்சி வீடாக அமைந்திருப்பதால், சிரமங்கள் அளவோடு நிற்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற கவலைகள் அலைச்சல்கள், கடின உழைப்பு, இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுதல், கண்ட இடங்களிலும் தரக்குறைவான உணவு வகைகளை உண்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஜென்மச் சனிக் காலத்தில், முன் கோபத்தைத் தவிர்க்க வேண்டும் என ரகசிய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஒரு விநாடி கோபம் கூட, பெரிய பிரச்னையில் நம்மைக் கொண்டுவிடக்கூடும் என ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன. கைப்பணத்தை செலவிடவேண்டும். மேலும், எண்ணிச் ஜென்மச் சனிக் காலத்தில், தொழில் அபிவிருத்திக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, வாங்கும் கடன் பல்கிப் பெருகும். எத்தகைய தருணங்களில் நாம் எந்தெந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே நமக்குக் கூறி உதவும் ஒரே கலை ஜோதிடம் மட்டுமே !! குடும்பத்தில், நெருங்கிய உறவினர்களுடன் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. திருமண முயற்சிகளில், தீர ஆராய்ந்து விசாரித்த பின்பே வரனை நிர்ணயிக்க வேண்டும்.

செய்ய வேண்டிய பரிகாரம்: சனிக்கிழமைகளில் பசு மாட்டிற்கு உணவு அளித்தல் நல்ல பரிகாரமாகும்

அனுகூலமான தினங்கள்:
மாசி:1,5-11,15-17,21-23,27,28

சந்திராஷ்டம நாட்கள் : மாசி 24ம்தேதி காலை முதல் 26ம் தேதி மாலை வரை.

மாசி மாத பலன்கள்

மீனம்

பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: மின ராசி அன்பர்களுக்கு, ஏழரைச் சனியின் தாக்கம் ஆரம்பிக்கும் மாதம் இது! சிறு விஷயங்களுக்குக்கூட, அதிகமாக அலையவேண்டிவரும். கணவர் – மனைவியரிடையே சிறு, சிறு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் அவசியம். தேவையற்ற அலைச்சல்கள், கற்பனையான கவலைகள் உறவினர்களுடன் கருத்துவேற்றுமை ஆகியவற்றைத் தவிர்த்தல் அவசியம்.

கைப்பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழித்தலும் முக்கியம் வெளியூர்ப் பயணங்களின்போது, விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம். பொருட்கள் களவுபோகக்கூடும். திருமண முயற்சிகளில் தவறான வரனை நிச்சயித்துவிடக்கூடும். தீர விசாரித்து அதன்பின்பே வரனை நிர்ணயிப்பது அவசியம். நீதிமன்ற வழக்குகள் நீடிக்கும்.

செய்ய வேண்டிய பரிகாரம்: பூவரசன்குப்பம், பரிக்கல், அபிஷேகப்பாக்கம், சோளிங்கபுரம் ஆகிய ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் தரிசனம் சிறப்ப

அனுகூலமான தினங்கள்:
மாசி:1-6,11-14,18-20,22-24,29,30

சந்திராஷ்டம நாட்கள் : மாசி 01ம்தேதி மாலை மீண்டும் 26ம் தேதி மாலை 28ம் தேதி நள்ளிரவு வரை.

- Advertisement -
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular