Saturday, April 20, 2024
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 மிதுனம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 மிதுனம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குரு பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchi Palangal) :மிதுனம்

சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 மிதுனம்
குரு பெயர்ச்சி கிரக நிலைகள் -2023

புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு குருபகவான் 7-ம் இடத்திற்கும் 10-ம் இடத்திற்கும் உரியவர். அவர் இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். அதே சமயம் அவருடைய விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 3-ம் இடம்(சகோதர ஸ்தானம் ) 5-ம் இடம் (பூர்வ புண்ணிய ஸ்தானம்) மற்றும் 7-ம் இடம் (களத்திர ஸ்தானம் )ஆகியவற்றில் பதியும்.

இந்த அமைப்பின் காரணமாக இது உங்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியமும் அளிக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். அதே சமயத்தில் தலைகனத்தை தவிர்ப்பது, அமைதியாக இருப்பது மிகவும் அவசியம்.

வேலை -அலுவலகம்

வேலை செய்யும் இடத்தில் இதுவரை பட்ட கஷ்டங்கள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும். புதிய பதவி, பொறுப்புகள் வரும். இந்த சமயத்தில் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தையும், ஏனோதானோ செயல்களையும் தவிர்ப்பது முக்கியம். மூன்றாம் நபர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதும், அவர்கள் செய்யும் தவறுகளை பூதக்கண்ணாடி போட்டு பார்க்காமல் இருப்பதும்  முக்கியம். இடம் மாற்றம் வந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். எந்த சமயத்திலும் வீண் ரோஷமும், வேண்டாத கோபத்தையும் தவிருங்கள்.

குடும்பம்-திருமணம் -குழந்தைகள்

குடும்பத்தில் சந்தோஷம் இடம் பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரிவு நிலை மாறும். பணி, கல்வி, வர்த்தகம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரும் சூழல் உருவாகும். திருமணமாகாத ஆண்-பெண்களுக்கு திருமண பாக்கியம் கிட்டும். குழந்தை பேருக்காக தவம் இருப்பவர்களுக்கு நிச்சயம் குழந்தை பேரு கிட்டும். விலை உயர்ந்த பொருள்களை இரவல் தருவது, பெறுவது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 மிதுனம்

தொழில்-வியபாரம்

தொழில் எதுவானாலும் வளர்ச்சி நிச்சயம் ஏற்படும். வங்கிக் கடன் நிலவைகளை முறையாக செலுத்துங்கள். அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரி போன்ற எதையும் குறிப்பிட்ட நாளுக்குள் சரியாக செலுத்தி விடுவது நல்லது. அயல் நாட்டு வர்த்தகத்தில் உரிய சட்ட நடைமுறைகளை கவனமாக கடைப்பிடியுங்கள். உங்கள் செயலுக்கு ஏற்ற உயர்வு நிச்சயம் வரும்.

அரசு -அரசியல்

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். அதே சமயம் மறைமுக எதிரிகள் பலம் அதிகரிக்கலாம் என்பதால் எதிலும் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். யாருக்கும் வாக்குறுதி தருவதற்கு முன்னால் அந்த வாக்குறுதி அவசியம் தானா என்பதை பற்றி நன்கு யோசித்து வாக்கு கொடுக்க வேண்டும்.

சினிமா துறை

கலை, படைப்பு துறையினருக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். அதை உடன் இருக்கும் சிலரோட தவறான வழிகாட்டலால் கைநழுவிட  நேரிடலாம் கவனமாக இருங்கள்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும். வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் வரும்.

பயணங்கள்

பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தை நீங்கள் ஒட்டி செல்லும் போது நிதானத்தை இழக்க செய்யும் வஸ்துகளுக்கு இடம் தர வேண்டாம். 

உடல் நலம்

காது, மூக்கு, தொண்டை உபாதைகள், முதுகுத்தண்டு, உடம்பு ரத்தனால பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 மிதுனம்

பலன் தரும் பரிகாரம்

உங்களுக்கு அருகில் இருக்கும் மகான் கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள் ஒருமுறை மந்திராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர மஹானை தரிசித்து வாருங்கள் மகிழ்ச்சி மலரும் 

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular