Friday, December 1, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கடகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கடகம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

குரு பெயர்ச்சி பலன்கள்(Guru Peyarchi Palangal) : கடகம்

சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கடகம்
குரு பெயர்ச்சி கிரக நிலைகள் -2023

சந்திர பகவானின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!!! குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான தனுசுவிற்கும், 9-ம் இடமான மீனத்திற்கும் உரியவர் ஆவார். பத்தாமிடமும் ஜீவன ஸ்தானமான மேஷத்திற்கு வருவதும், அவரது விசேஷ பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 2மிடம் (வாக்கு ஸ்தானம்),4மிடம் (மாத்ரு ஸ்தானம்),6மிடம்( சத்ரு ரோக ஸ்தானம்) ஆகிய இடங்களில் பதிவதும் கணக்கில் கொல்லப்பட்டு இந்த பலன்கள் சொல்லப்படுகின்றது. இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு குரு உச்ச வீடு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

10ல் குரு பதவி கவனம்

10மிட குரு பதி குலையச் செய்யும் 
அந்தணன் 10ல் நின்றால் அவதிகள் பல உண்டு 
ஈசனாரொரு  பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டும் 

இப்படி குரு 10-ல் வரும் போது சிறப்பில்லாத ,கஷ்டங்களைத் தரும். பத்தில் குரு பதவி பறிபோகும் எனவே தொழில்வகையில் போட்டி, பொறாமை ஏற்படும், வேலை இழப்பீடு, மாறுதல் என்று தொழில்துறை சங்கடங்கள் இருக்கவே செய்யும்.

செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். உழைக்கத் தயங்காமல் இருந்தால் உயர்வுகளும் உன்னதமும் வரத் தொடங்கும். அயல்நாட்டு வர்த்தகத்தில் அதிக முதலீடு வேண்டாம். சிலரோட தவறான வழிகாட்டல் உங்களை தடுமாற வைக்கலாம்.

பணியிடத்தில் மறைமுக எதிரிகளால் ஏற்பட்டிருந்த அவதிகள் நீங்கி விடிவுகாலம் பிறக்கும். உங்கள் திறமைகள் பிரகாசிக்க தொடங்கும். இந்த சமயத்தில் தளராத முயற்சியும் தன்னம்பிக்கையுடனான செயல்களும் ரொம்பவே முக்கியம். பணி தேடும் சிலருக்கு நல்ல பணி வாய்ப்பு அமையும். எந்த சமயத்திலும் நேரடி கவனமும் நேர்மையும் மிக முக்கியம்.

குடும்பம்

குடும்பத்தில் நிம்மதி நிலவும். தாய் வழி உறவுகளுடன் வீண் தர்க்கம் வேண்டாம். சுபகாரியங்கள் மனம் போல் கை கூடி வரும். இந்த சமயத்தில் பெற்றோரிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. குழந்தை பேருக்காக காத்திருப்பவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகளை தவறாமல் செய்து கொள்வது நல்லது. பொது இடங்களில் குடும்ப ரகசியம் எதையும் பேச வேண்டாம். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.பூர்வீக சொத்து ஆதாயம் தரும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

அரசு -அரசியல்

அரசு, அரசியல் துறையினருக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். சீக்கிரமே சிக்கல்கள் மறைந்து சீரான வளர்ச்சி ஏற்படும். அதுக்கு இப்போதைய அடக்கமான செயல்களும் அதிக கவனமான திட்டங்களும் அவசியம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கடகம்

மாணவர்கள் -கலை துறையினர்

மாணவர்கள் எண்ணம்போல் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். இரவு நேரத்தில் கும்பல் சேரக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. மறதிக்கு மறந்தும் இடம் தர வேண்டாம்.

கலை, படைப்பு துறையினருக்கு வளர்ச்சி பாதையில் வெளிச்சம் பரவ ஆரம்பிக்கும். கிடைக்கும் வாய்ப்பு சிறியதாக இருந்தாலும் அலட்சியம் இல்லாமல் செய்தால் சிறப்பான எதிர்காலத்துக்கு அதுவே அஸ்திவாரமாக அமையும்.

உடல் நலம்

அஜீரணம், உணவுக் குழாய் உபாதை, தூக்கமின்மை, தலைவலி பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. கர்ப்பிணி பெண்கள் உரிய சிகிச்சைகளில் கவனமாக இருக்கவும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கடகம்

பலன் தரும் பரிகாரம்

சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். நேரம் கிடைக்கும்போது திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். மாற்றமும் முன்னேற்றமும் நிச்சயம் இருக்கும்.குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 மிதுனம்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular