Monday, May 29, 2023
Homeதிருமண பொருத்தம்மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

ASTRO SIVA

google news astrosiva

மகேந்திர பொருத்தம் | Mahendra Porutham

இப்பொருத்தம் புத்திர சந்தான விருத்திக்கு உகந்தது. பெண் ஜென்ம நட்சத்திரம் முதல் ஆண் ஜென்மநட்சத்திரம் நான்கின் (4) அடுக்கில் அமைந்தால், சத் புத்திர இலாபம் உண்டு

(எடுத்துக்காட்டு; பெண்: அசுபதி, ஆண்: ஆயில்யம், பெண்: அசுபதி, ஆண்: புனர்பூசம்,)

அதாவது பெண் ஜென்ம நட்சத்திரம் முதல் ஆண் ஜென்ம நட்சத்திரம் 4 (4, 5, 6, 7), 7 (7, 8, 9, 10), 10 என்ற வரிசையில் 4, 7, 10, 13, 16, 19, 22, 25) ஆகிய நட்சத்திரமானால் குழந்தை பாக்கியம் உண்டு.

இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். நட்சத்திரப் பொருத்தத்தில் பார்க்கும் போது 1 மற்றும் 7 ஆம் எண் ஒதுக்கப்பட்டது. இங்கோ 1 இன் அடுக்கம் 10, 19 ஏற்கப்படுகிறது. அதேபோல் ஸ்திரி தீர்க்கமும் 7-ம் நட்சத்திரத்திற்கு மேல் உள்ளதை ஏற்கிறது. இதிலிருந்து நட்சத்திரப் பொருத்தம் 1 அல்லது 7 இன் அடுக்கத்தில் (1, 10, 19, 7, 16, 25) சுமாராய் சேரும்போது ஸ்திரி மாகேந்திரம் தீர்க்கப் பொருத்தங்கள் சேருகிறது என்று தெரிகிறது.

Mahendra Porutham மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

எனவே, சுருக்கமாய் பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் 3 அல்லது 5 என்று இருந்தால் மட்டுமே சேராது என்றும், 3, 5 நட்சத்திரங்களைச் சேர்க்க வேண்டாம் என்றும் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, அசுபதிக்குக் கார்த்திகை, மிருகசீரிடம், பரணிக்கு ரோகிணி. திருவாதிரை என்று கொள்ள வேண்டும். அதேபோல் அசுபதிக்குக் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் சேராது என்றும் பரணிக்கு ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் சேராது என்றும் கொள்ள வேண்டும்.

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 3, 5 ஐத் தவிர எல்லாம் சேரும் என்று உணர்ந்தால் முதல் நான்கு பொருத்தங்களை வெற்றிகரமாகப் பார்க்கலாம்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular