Friday, December 8, 2023
Homeஇன்றைய ராசி பலன்Today Rasi Palan |இன்றைய ராசி பலன்

Today Rasi Palan |இன்றைய ராசி பலன் [11.04.2023]

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Today Rasi Palan |இன்றைய ராசி பலன்

மேஷம்

Today Rasi Palan

எதிர்பாராத வகையில் வீண் பிரச்சினைகள் தேடி வரும். உங்கள் ராசிக்கு பகல் 12.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் உணர்ச்சிவசப் படாமல் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும் புதிய முயற்சிகளையும் மதியத்திற்கு மேல் மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்

Today Rasi Palan

பகல் 12.58 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மிதுனம்

Today Rasi Palan

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

கடகம்

Today Rasi Palan

குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழிலில் சற்று மந்த நிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும். மன நிம்மதி ஏற்படும்.

சிம்மம்

Today Rasi Palan

உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். உறவினர்கள் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி

Today Rasi Palan

குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நற்பலன்கள் உண்டா-கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

துலாம்

Today Rasi Palan

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

Today Rasi Palan

ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு

Today Rasi Palan

எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மகரம்

Today Rasi Palan

பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்

Today Rasi Palan

செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

Today Rasi Palan

வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular