Monday, May 29, 2023
Homeசோபகிருது வருட பலன்கள்சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-மிதுனம்

சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-மிதுனம்

ASTRO SIVA

google news astrosiva

சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-மிதுனம்

ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.

சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள்

புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!!! வரும் சித்திரை 8-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். சனிபகவான் இந்த வருடம் முழுவதும் 9-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராகு மற்றும் கேது ஐப்பசி 13-ம் தேதி வரை 11 மற்றும் 5-ம் இடங்களிலும், அதன் பிறகு 10 மற்றும் 4-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

இந்த வருடம் திருமணம் ஆகாத அவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டு. தாய் தந்தையரின் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டு பிறகு சரியாகும். இந்த வருடம் வீடு, மனை, வாகனம், தங்க நகைகள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் துறையில் நல்ல லாபம் உண்டு. தந்தைக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. தாயின் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடு ஏற்பட்டு பிறகு சரியாகும்.

இளைய மற்றும் மூத்த சகோதரர்களுக்கும் முன்னேற்றம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க பெறுவார்கள். படித்து வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இந்த வருடம் வேலை வாய்ப்புகள் நிச்சயம் ஏற்படும்.

சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள்

ஐப்பசி 13-ம் தேதி முதல் வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு வெளிநாடு உத்தியோகம் கிடைக்கும். தொழில் துறையில் அலைச்சல் இருந்தாலும் வளர்ச்சியும் கூடவே இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஐப்பசிக்குப் பிறகு குழந்தை பாக்கியம் உருவாகும். குடும்பத்தில் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும்.

பலன் தரும் பரிகாரம்

வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கும், செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கும் நல்லெண்ண தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வர சகல நன்மைகளும் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular