Monday, June 5, 2023
Homeஜோதிட குறிப்புகள்ஜோதிட ரகசியங்கள்-பகுதி -1

ஜோதிட ரகசியங்கள்-பகுதி -1

ASTRO SIVA

google news astrosiva

ஜோதிட ரகசியங்கள்

கேது மகாதிசை, கேது புத்தி நடப்பவர்கள் விநாயகர் படத்தையோ (உதாரணமாய்;பிள்ளையார் பட்டி விநாயகர் படம்) மகான்கள் படத்தையோ (உதாரணமாய்; ஓம்ஸ்ரீ அரவிந்த அன்னை படம்) பையில் வைத்துக்கொண்டால் கேது திசையில் அல்லது கேது புத்தியில் எந்தக் கெடுதலும் நேராது! இதனுடன் இவர்களுக்குரிய மந்திரத்தைத் தினமும் ஜெபிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும்!

காதலுக்கு உரிய கிரகம் சுக்கிரன். வெள்ளிக்கிழமையன்று மாலையில் பளபளப்பான வெள்ளைத்துணி, வெள்ளைமொச்சை, வாசனையுள்ள வெள்ளைப்பூ ஆகியவற்றைக் கொண்டு நவகிரகத்தில் உள்ள சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்து ஒன்பது தடவை சுற்றி வரவேண்டும். “ஓம் சுக்ராய நமஹ” என 108 தடவை சொல்லி, ஆறு வெள்ளிக்கிழமை இவ்வாறு தொடர்ந்து செய்தால் நினைப்பவரை மணக்க அருள் கிட்டும். முதல் வாரத்தில் மட்டும் துணி சாத்தினால் போதும். மற்ற வாரங்களில் வாசனையுள்ள வெள்ளைப்பூவும், வெள்ளைமொச்சையுமே போதுமானவை!

‘மகத்துப்பெண் ஜெகத்தை ஆள்வாள்’ என்பது பழமொழி. ஆனால், அவர்களுக்குக் குடும்ப வாழ்க்கை சரிவர அமைவதில்லை! ஏனென்றால், ராசியாதிபதி (சிம்மம்) சூரியனுக்கு 7-ஆம் இடமான கும்பத்தின் அதிபதியாகிய சனி மிக்க பகை என்பதால்தான்!

ஜோதிட ரகசியங்கள்

குருதிசை நடப்பவர்கள் மஞ்சள் ஆடை அல்லது காவி உடையை வீட்டில் உள்ளபோது அணிந்து கொண்டால் குருதிசை நீச்ச திசையாய் இருந்தாலும் செல்வத்தையும், வளத்தையும் கொடுக்கும். எப்போதும் மஞ்சள் துண்டோ அல்லது மஞ்சள் கைக்குட்டையோ இருப்பது அவசியம்!

ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுடன் கேதுவும், சூரியனுடன் இராகுவும் இணைந்து காணப்பட்டால் அவருக்கு சர்ப்பதோஷம் உண்டு. இப்படி அமைந்திருப்பவர்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் வாழ்வில் முன்னேறுவது மிகவும் சிரமம் ஆகும். இவர்கள் ‘காளஹஸ்தி’ சென்று சர்ப்ப சாந்தி செய்து கொண்டால் கெடு பலன்கள் குறையும்!

சந்திரனும் சூரியனும் சேர்ந்திருக்கப் பிறந்தவர்கள். என்ன தவறு அதாவது, அமாவாசை அன்று பிறந்தவர்கள் எந்த ஒரு காரியம் செய்தாலும் இரகசியமாகவே இருக்கும். செய்தாலும் வெளியில் தெரியாது. ஆனால், அதே சூரியனும் சந்திரனும் 7க்கு 7இல் சப்தமாய் இருக்க அதாவது, பௌர்ணமி அன்று பிறந்தவர்கள் எந்த ஒரு சிறு குற்றம் செய்தாலும் அது வெளியில் தெரிந்துவிடும். அல்லது அவரே உளறி மாட்டிக்கொள்வார்!

ஜாதகர் சித்திரை மாதத்தில் பிறந்தால் அவர் அப்பாவுக்கு ஆகாது எனச் சொல்லப்படுவது உண்டு. சித்திரை மாதத்தில் சூரியன் உச்சத்தில் இருப்பார். சூரியள், தகப்பளாரைக் குறிக்கும் கிரகம். எனவே, ஜாதகத்தில் சூரியன் பலம் பெறுவதால் சதாதமகளைக் குறை சொல்லியும் மிரட்டியும் விரோதம் காட்டுவார். மகனும் தந்தையை விரோதி போலப் பாவிப்பார். அதே போல், ஐப்பசி மாதம் பிறந்த ஜாதகரின் ஜாதகத்தில் சூரியன் நீசத்தில் இருப்பார் எனவே அந்த ஜாதகருக்கு தகப்பனார் பயப்படுவார் அல்லது இருவருமே நண்பர்கள் போல பழகுவார்கள்.

ஜோதிட ரகசியங்கள்

குருபகவானே பண நடமாட்டத்திற்கு அதிபதி. செல்வம் அவரது இயக்கந்தான். அவர் ஓர் இராசியில் ஒரு வருடம் சஞ்சரிப்பார். ஆடி மாதத்தில் ‘வக்ரகதி’ அடைவார். அவர் வக்கிரமானவுடன் பொருளாதாரம் மிகவும் தட்டுப்பாடு ஆகிவிடும். அதனால்தான் ‘ஆடிமாதம் ஆட்டுவிக்கிறது’ பணம் புரளவில்லை எனச் சொல்லுவார்கள்.

எட்டாம் இடத்தில் சுக்கிரன் இருந்து அவர் பார்வை கிடைக்காவிட்டால் ஜாதகர் காதல் தோல்வி அடைவார். பாலியல் நோய் ஏற்படும். தொல்லை படுவார்.

சுக்கிரன் நாய்களுக்கு காரகத்துவம் உடையவர் ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டுப்போய் இருந்தால் அவரை நாய் கடிக்கும்.

சந்திரனுக்கு 6,8,12 குரு இருந்தால் அதற்கு சகடை தோஷம் என்று பெயர். பலன் என்னவென்றால் நிலையில்லா வாழ்வையும், சதா கஷ்டமும், தேவையில்லாத நிறைய அனுபவங்களும் ஏற்படும். போக்கிக் கொள்ள யானைவால் முடியை தங்கத்தில் காப்போ, மோதிரமோ செய்து அணிய வேண்டும். யானைக்கு பச்சரிசி வெல்லம் ஆகியவற்றை கலந்து வைத்து, கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை கொடுத்தும் அதன் தும்பிக்கையால் ஆசீர்வாதம் பெற்றும் இந்த சகடை தோஷத்தின் பாதிப்பை குறைக்கலாம்.

சதயம் நட்சத்திரமுடைய ஆண்களுக்கு பெண் பிள்ளைகளே பிறப்பார்கள்.ஆண் பிள்ளைகள் பிறப்பது கஷ்டம். அதே போல் சதய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு ஆண் பிள்ளைகளை பிறப்பார்கள். பெண் குழந்தை இருப்பது கஷ்டம். ஆனால் அவர்களுக்குள் சாதகம் பலம் பெற்றிருந்தால் அதன் பலன் மாறும்.

ஆண்களுக்கு சுக்கிர திசை நடைபெறும் போதும் பெண்களுக்கு செவ்வா திசை நடைபெறும் போதும் அதிக யோகப் பலன்களை கொடுக்கும். காரணம்? சுக்கிரன் பெண் கிரகமாயும் செவ்வாய் ஆண் கிரகமாயும் இருப்பதினால் தான்

ஜோதிட ரகசியங்கள்

ஆண்களின் ஜாதகத்தில் கேது, சனி, குரு ஆகிய கிரகங்கள் ஏழு அல்லது எட்டாம் இடங்களில் நின்றிருந்தால் தோஷம் அதிக அளவில் செயல்பட்டு அதிக துன்பங்களையும் திருமணத்தில் காலதாமதத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும். அதே போல் பெண்கள் ஜாதகத்தில் ஏழு அல்லது எட்டாமிடத்தில் ராகு, சுக்கிரன் ஆகியன இருந்தால் மேற்கண்ட பலன்களையே தரும்

ஒவ்வொருவர் மீதும் 23 வயது முதல் 28 வயது வரை ராகு பகவானின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். ராகுவால் தோஷம் ஏற்பட்டிருந்தால் அவர்கள் 28 வயதுக்கு பிறகு திருமணம் முடிப்பது மிகவும் நல்லது.

விருச்சிக, மேஷ லக்னத்திற்கு சப்தமாதிபதி சுக்கிரன் ஆவார். சூரியன், சந்திரன், கேது ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து காணப்பட்டாலோ, அக்கிரகங்களுக்கு ஏழில் அமர்ந்து இருந்தாலோ திருமணம் காலதாமதம் ஆகும். திடீர் திருமணமும், தூர தேசத்தில் நிர்ப்பந்தத்தின் பெயரில் திருமணமோ ஏற்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular