Friday, March 1, 2024
Homeநட்சத்திர ரகசியங்கள்கிருத்திகை 3-ம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன் மற்றும் 3ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்

கிருத்திகை 3-ம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன் மற்றும் 3ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கிருத்திகை 3-ம் பாதம்

கிருத்திகை 3ம் பாதம் ரிஷபத்தின் 2வது நவாம்சமாகும். இது சனியின் கும்பராசியைச் சாரும். இதனால் இதற்கு ஏறக்குறைய கெட்டபலனே சொல்லப்பட்டது. இது இச்செய்யுளின் பொருள் வருமாறு.

ஊனம துடைய னாகும் உறவொடு பகையும் எண்ணான்
மானம துடை னாகும் மனம்பிறர்க் கறிய வொண்ணான்
மேனியும் உருவம் நல்லன் மிக்கதோர் அறிவு மில்லை
கானகந் திரிந்து வாழ்வான் காரிஅங் கிஷத்தி னானே.

இந்த கிருத்திகை 3ம் பாதத்தில் பிறந்தவன் உடலில் ஏதாவது ஊனம் உண்டு. பிறரிடம் உறவு பகை எதையும் எண்ணாமல் கண்மூடித்தனமாகப் பழகுபவன். இவன் மானம் உள்ளவன். அஃதாவது ரோஷம் உள்ளவன். இவனுக்கு அறிவு கூர்மை இல்லை. இவன் மனத்தை பிறர் அறியாவண்ணம் அமுக்கமாக இருப்பவன். புத்தி கூர்மை இல்லாவிட்டாலும் அழகான தோற்றம் உண்டு. இவன் காடுகளில் திரிந்து தன் வாழ்வை கழிப்பவன். அஃதாவது மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஒதுக்குப்புறமான இடங்களில் இவன் வாழவேண்டி வரும்.

கிருத்திகை 3-ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்

கிருத்திகை 3-ம்

கிருத்திகை 3-ல் சூரியன் நின்றால்

இதில் சூரியன் சுப சம்பந்தம் சேர்ந்து இருந்தால் நல்லது. இல்லையேல் இவன் ஏழை, பிச்சையும் எடுப்பான். வாழ்நாள் கடைசிவரை இந்த கதிதான். எப்போதும் இடம் விட்டு, இடம் அலைந்து கொண்டே இருப்பான். முரண்பாடான பல்வகை தீராநோய்களால் பீடிக்கப்படுவான். இந்த பாதத்தில் பிறந்த குழந்தைக்குப் பாலாரிஷ்டம் உண்டு.

இவன் முடிதிருத்தும் தொழில் செய்பவனாகவும் இருப்பான். இதில் பெண் பிறந்தால் இந்த சூரியனை சந்திரன் பார்த்தால் இவள் முறை மீறிய (வேசி) தொழில்களால் பணம் சம்பாதிப்பாள். பாலியல் நோய்களால் பீடிக்கப்படுவாள். ஆணானால் ஏற்றுமதி, மீன் தொழில் முதலியவற்றால் சம்பாதிப்பான்.

கிருத்திகை 3-ல் சந்திரன் நின்றால்:

இவன் நெட்டையானவன். ஆனால் ஏழை. அறிவாளி. இதில் பெண் பிறந்து செவ்வாய் அல்லது ராகு பார்த்தால் இவளுக்கு 30 வயது ஆகும்போது கணவன் இறக்கலாம்.

கிருத்திகை 3-ல் செவ்வாய் நின்றால்

அரசின் மூலமும் நகை வாணிபம் முதலியவற்றாலும் மிக அதிகமாகவும் சம்பாதிப்பான். மிகவும் நிம்மதி. உடல் உழைப்பற்ற உத்தியோகம், தொழில் அமையும். இவன் பண்டிதன்.

மத நூல்களில் கற்றுத் தேர்ந்தவன். பிறரை அச்சுறுத்தும் தோற்றம் உள்ளவன். வாயாடி. ஆனால் திறமைசாலி. முன்னோர் சொத்து இவனுக்குக் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் ஈடுபாடும் வெற்றியும் உண்டு.

கிருத்திகை 3-ம்

கிருத்திகை 3-ல் புதன் நின்றால்

இவன் செய்யும் காரியங்களை எல்லாம் அனுபவத்திற்கு ஒத்து வருபவை. இவன் எதிலும் திட சித்தம் உள்ளவன். அந்தஸ்து அதிகாரம் உண்டு. அழகான தோற்றம் உண்டு. இந்த புதனுடன் சனி சேர்ந்தால் விஞ்ஞானியாகவும், அறிவு ஜீவியாகவும் இருப்பான்.

கிருத்திகை 3-ல் குரு நின்றால்

இவன் அரசு ஊழியன். பெரும்பாலும் உயர்மட்டத்திற்கு ஆலோசனை சொல்லுபவனாக இருப்பான். மிகவும் உயர்ந்த, திறமைசாலியாகவும் இருப்பான். இவனுக்குப் பலருடைய நேசமும் பாசமும் கிட்டும். ஆனால் பணம் அவ்வளவாக சேராது. தன்னைப் பொறுத்தவரை வரம்பு, நெறி, ஒழுக்கத்திற்கு உட்பட்டு வாழ்பவன். ஆனால் பிறரிடம் அதை எதிர் பார்ப்பதில்லை.

கிருத்திகை 3-ல் சுக்கிரன் நின்றால்

இவன் தாராளமானவன். வள்ளல், இவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர்உண்டு. பரிமன வாசனைப்பொருள் முதலியவை வாணிபம் செய்வான் (Cosmatics). ஆசிரியன், சங்கீத வித்துவான் அல்லது திரையுலக நடிகள் போன்ற தொழில்களில் இருப்பான்.

கிருத்திகை 3-ல் சனி நின்றால்

பயிர்த்தொழில் மூலம் சம்பாத்தியும் உள்ளவன். இது பெண்ணாகி, அந்த சனியை சூரியன் பார்த்தால் கல்யாணம் கூடாது. துரதிர்ஷ்டமான வாழ்க்கை உண்டாகும். இது ஆணாகி இந்த சனியை புதன் பார்த்தால் ஆண்தன்மை அற்றவனாக இருப்பான்.

கிருத்திகை 3-ல் ராகு நின்றால்

பேசுவதில் தடங்கல், திக்குவாய் உண்டு. சிவந்த கண்கள் உள்ளவன். சோம்பேறி, நல்லதும் செய்யமாட்டான், கெட்டதும் செய்யமாட்டான். மிகவும் கொடிய வறுமையில் உழல்பவன். மீன், பிளாஸ்டிக் போன்ற தொழில்களில் ஈடுபடுவான்.

கிருத்திகை 3-ல் கேது நின்றால்

போட்டி, பந்தயம், சூதாட்டங்களில் பெருந்தொகைகளை இழப்பவன். அரசாங்கத்திலிருந்து இவனுக்கு கெடுதல். குற்றச்சாட்டு முதலியவை ஏற்படும். கீழ்த்தரமான மக்களுடன் பழகுபவன். இவனுக்குப் பிறவாத, மனைவியின் பெண் குழந்தைகள் மூலம் மிகவும் துயரப்படுவான். தக்க சமயத்தில் இவனுக்குப் பிறரிடமிருந்து உதவிகள் கிடைக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்514அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்164ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்99ஆன்மிக தகவல்91அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்50பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25கோவில் ரகசியங்கள்20சிவன் ஆலயங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராசிபலன்18அற்புத ஆலயங்கள்18வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213புத்தாண்டு பலன்கள்-202213சுபகிருது வருட பலன்கள்13ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10Gem Stone8பெருமாள் ஆலயங்கள்8தேவாரத் திருத்தலங்கள்7கருட புராணம்7திருமண பொருத்தம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்4தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மார்ச் மாத ராசி பலன் 20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular