Saturday, September 30, 2023
Home108 திவ்ய தேசம்கலைத்துறையில் சாதிக்க துடிப்பவர்கள் செல்லவேண்டிய ஒரு அற்புத திவ்ய தேசம் - திருசித்ரகூடம்

கலைத்துறையில் சாதிக்க துடிப்பவர்கள் செல்லவேண்டிய ஒரு அற்புத திவ்ய தேசம் – திருசித்ரகூடம்

ASTRO SIVA

google news astrosiva

திவ்ய தேசம் – திருசித்ரகூடம்

கடலூரிலிருந்து தெற்கே 48 கி.மீ உள்ள மிகவும் புகழ்வாய்ந்த சிதம்பர நகருக்கு மறுபெயர்தான் திரு சித்ரகூடம். தென்புலியூர், தில்லைவனம், கோவில் பெரும் பற்றப் புலியூர், புலிச்சரம், திருச்சிற்றம்பலம் என்று பல பெயர்கள் இதற்குண்டு. சுமார் நாற்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பெரிய கோயிலைப் பற்றி பல வியக்கத்தக்க புராணக் கதைகள் உண்டு புகழ்பெற்ற நடராஜர் கோயிலுக்குள் இந்த வைணவக் கோயில் சிறப்பான முறையில் அமைத்திருக்கிறது.

மூலவர் கோவிந்தராஜப் பெருமாள் கிழக்கு நோக்கிச் சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்சவர் தேவாதித் தேவன். தாயார் புண்டரீகவல்லி.தீர்த்தம் புண்டரீகத் தீர்த்தம்.

திவ்ய தேசம்

கோடி நாட்டுத் திருப்பதிகளில் 23வது இடத்தைப் பெற்றது. குலசேகர ஆழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். விமானம் ஸாத்விக விமானம்.

நடராஜப் பெருமானும், இந்திராதி தேவர்கள் மூவாயிரம் பேர்களும் இங்குள்ள கோவிந்தராஜப் பெருமாளை தரிசிக்க வந்ததாக ஒரு வரலாறு. தன்னெதிரே நடனமாடிய நடராஜப் பெருமானது தாண்டவத்தைக் கண்டு பெருமாள் மெய்மறந்து இங்கேயே தங்கியதாகவும் சொல்வதுண்டு. பரதமாமுனிவர் நாட்டிய சாஸ்திரத்தை ஏற்படுத்திய ஸ்தலம். சிவன், தானே விரும்பி அமர்ந்து ஆனந்த தாண்டவம் செய்தார்.

திவ்ய தேசம்

உலகிலுள்ள எல்லாவிதமான நடனங்களையும் இங்குள்ள சிற்ப சாஸ்திரத்தில் காணலாம். பாணினி முனிவர் வியாகரணம் செய்த இடம். பதஞ்ஜலி முனிவருக்கும் பாணினி, தில்லை மூவாயிரம் பேர்களுக்கும் பகவாள் நேரடியாகத் தரிசனம் காட்டிய இடம்.

பரிகாரம்:

கலைத்துறையில் முன்னுக்கு வர வேண்டும் என்று துடிப்பவர்கள் வியாபாரம் சீர்குலையாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்,உடல் ஆரோக்கியத்தால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்கள், அலுவலகத்தில் ஏதாவது சாதனை செய்து விரைவில் உலகளாவிய வகையில் பெயரும் புகழும் வேண்டுமென்று நினைப்பவர்கள், இங்கு வந்து கோவிந்தராஜ பெருமாளை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் போதும் அவர்கள் பல வகையில் பெயரோடும் புகழோடும் எதிர்காலத்தில் சிறப்பாக விளங்குவார்கள்.

கோவில் இருப்பிடம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular