Friday, July 26, 2024
Homeஜோதிட குறிப்புகள்பத்திரை கரணத்தில் பிறந்தவர்களின் பலன்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய பரிகாரம்

பத்திரை கரணத்தில் பிறந்தவர்களின் பலன்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய பரிகாரம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

பத்திரை கரணம்

பத்திரை கரணத்தின் கிரகம் -கேது

பத்திரை கரணத்தின் மிருகம் – சேவல் &கோழி

பத்திரை கரணத்தின் வேறு பெயர் – விஷ்டி

பத்திரை கரணத்தின் தேவதை – இயமன்

பத்திரை கரணத்தின் மலர் – குன்றிமணிப்பூ

பத்திரை கரணத்தின் ஆகாரம் – சித்திரான்னம்

பத்திரை கரணத்தின் பூசுவது – கர்ப்பூரம்

பத்திரை கரணத்தின் ஆபரணம் – புஷ்பராகம்

பத்திரை கரணத்தின் தூபம் – நன்னீர் ( நல்ல தண்ணீர் )

பத்திரை கரணத்தின் வஸ்திரம் – தோல்

பத்திரை கரணத்தின் பாத்திரம் – வெண்கலம்

பத்திரை கரணத்திற்கு பலம் சேர்க்கும் ஆலயம் – திருச்செந்தூர் முருகன்

பத்திரை கரணத்தில் பிறந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை மொபைல் ஸ்க்ரீன் மற்றும் வால்பேப்பராக பயன் படுத்தி வந்தால் வெற்றி கிட்டும்.

பத்திரை

இவர்களுக்கு விஷம் முறிக்கும் சக்தி உண்டு. எனவே இவர்கள் விஷக்கடிக்கு மந்திரிப்பதில் தேர்ந்து விளங்குகிறார்கள்.

ஒரு விஷயத்தை பற்றி அறிவதில் மிக ஆர்வம் இருக்கும். மனிதாபிமானம் உண்டு. எளிதில் சோர்வினை அடைவார்கள். எனவே அடிக்கடி இவர்களை ஊக்கப் படுத்த வேண்டும்.சிக்கனக் குணம் மிக்கவர். மனச் சஞ்சலம் மிகுந்திருக்கும்.

பத்திரை என்பது விஷம். ஆகவே இவர்கள் விபூதி மந்திரித்து கொடுத்தால் உடலில் ஏறிய விஷம் குறையும்.

சிறந்த மருத்துவர்கள். ஒருவரை அழித்து மற்றவர் வெற்றி பெற பத்திரை கரணம் பயன்படுகிறது.

24:04:2014 தேய்பிறை தசமி நாளில் பத்தரை கரணத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த திரு மோடி அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறினார்.

பத்திரை

சேவல் சின்னம் கொடுத்த வெற்றி

1987-ல் எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு அதிமுக உடைந்தது. மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஒரு அணியும், திருமதி. ஜானகி அவர்கள் தலைமையில் ஒரு அணியும் உருவாகியது.

1988 இறுதியில் இரட்டை சிலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அப்போது ஜானகி அவர்கள் இரட்டை புறா சின்னத்தை கொண்டு போட்டியிட்டார்கள்.

ஜோதிடம் நாடிய புரட்சித்தலைவி

தெய்வத்திரு ஜெயலலிதா அவர்கள் பிறந்தது மகம் நட்சத்திரம் ஆகும். இதன் சாதக தாரை சதயம். அதுபோல அவரது ஜெனன கரணம் விஷ்டி என்றழைக்கப்படும் பத்திரை கரணமாகும். சாதக தாரை சதயத்தின் குறியீடு மயில் மற்றும் சேவல். ஆகவே அவரது சின்னமாக சாதக தாரை மற்றும் கார்ய சித்தி தரும் பத்திரை கரண விலங்கான சேவல் பரிந்துரைக்கப்பட்டது.

சேவல் பெற்ற மாபெரும் வெற்றி

1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அணி, ‘சேவல்’ சின்னத்தில் தனித்து போட்டியிட்டது. 27 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதன்பின். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க., மீண்டும் ஒன்றிணைந்தது. ஜெயலலிதா பொதுச்செயலரானார். ‘இரட்டை இலை’ சின்னம் மீட்கப்பட்டது.

ஆக, இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், ஜெனன கரணமும், சுபத்தாரையும் மிக சரியாக பயன்படுத்தி பலப்படுத்த, பெரும் தலைமை ஏற்கும் சக்தியை பிரபஞ்சம் தானாக தரும்.

பத்திரை

வெற்றி பெற செய்யவேண்டிய பரிகாரம்

  • கலவை சாதம் தெய்வத்திற்கு படையல் செய்வது கரண நாதனை வலுப்பெற வைக்கும்.
  • இவர்கள் Chicken சாப்பிடகூடாது.
  • கோழி இறகை Bage or சட்டை பையில் வைத்துக்கொள்ளலாம்.
  • சேவல் கொடி வேலவன் படம் பயன்படுத்தலாம்
  • பத்திரை கரணத்தில் பிறந்தவர்கள் மாதம் மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் முருங்கைக்காய், முருங்கைகீரை, முருங்கை சூப், முருங்கை சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் தானம் செய்தால் இவர்களுக்கு கரணநாதன் இயங்க ஆரம்பித்து சிறப்பான பலன் கிடைக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular