Thursday, December 7, 2023
Homeஆன்மிக தகவல்13 வகையான சாபம் மற்றும் அவற்றால் ஏற்படும் விளைவுகள்

13 வகையான சாபம் மற்றும் அவற்றால் ஏற்படும் விளைவுகள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

சாபங்கள் மொத்தம் 13 வகையான “சாபம்” இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? !..

1. பெண் சாபம், 2. பிரேத சாபம், 3. பிரம்ம சாபம், 4. சர்ப்ப சாபம், 5. பித்ரு சாபம், 6. கோ சாபம், 7. பூமி சாபம். 8.கங்கா சாபம், 9. விருட்ச சாபம், 10. தேவ சாபம் 11. ரிஷி சாபம் 12. முனி சாபம், 13. குலதெய்வ சாபம்

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1.பெண் சாபம்

இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2.பிரேத சாபம்

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3.பிரம்ம சாபம்

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் இல்லாமல் போகும். அதாவது. படிப்பு இல்லாமல் போகும்.

4.சர்ப்ப சாபம்

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால் காலசர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமண தடை ஏற்படும்.

5.பித்ரு சாபம்

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய், தந்தை, தாத்தா,பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6.கோ சாபம்

பசுவை வதைப்பது, இகழ்வது பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

சாபம்

7.பூமி சாபம்

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், மண்ணை மாசுபடுத்தும் பொருள்களை போட்டு புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியை பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரக வேதனையை கொடுக்கும்.

8.கங்கா சாபம்

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9.விருட்ச சாபம்

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போக செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை வீடு கட்டும் மனை ஆக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால் கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10.தேவ சாபம்

தெய்வங்களின் பூஜையைப் பாதையில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால் தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்து விடுவர்.

11.ரிஷி சாபம்

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால் வம்சம் அழியும்.

12.முனி சாபம்

எல்லை தெய்வங்கள் மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜைகளையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினை கோளாறுகள் ஏற்படும்.

13.குலதெய்வ சாபம்

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் ஒருவித துக்கம் சூழ்ந்து கொள்ளும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular