Thursday, April 25, 2024
Homeஜோதிட குறிப்புகள்பவ கரணத்தில் பிறந்தவர்களின் பலன்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய பரிகாரம்

பவ கரணத்தில் பிறந்தவர்களின் பலன்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய பரிகாரம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

பவ கரணம்

மிருகம் – சிங்கம்
தேவதை – இந்திரன்
கிரகம் – செவ்வாய்
ராசி – சிம்மம்
ஸ்தலம் – நாமக்கல் நரசிம்மர்
மலர் – புன்னை மலர்
ஆகாரம் -அன்னம்
பூசுபொருள் – கஸ்தூரி
ஆபரணம் – மாணிக்கம்
தூபம் – அகில்
வஸ்திரம் – வெண்மையானது
பாத்திரம் – பொற்கலம்
செயல்படும் வருடம் – 18 வருடம்
எண் – 1,8,9
உலோகம் – தங்கம்
தானம் – சாம்பார் சாதம், சக்கரை பொங்கல்

பவ கரண

பவ கர்ணத்தில் செய்யக் கூடியவை

நீடித்து நிலைத்திருக்கும் காரியங்களை பவகர்ணத்தில் செய்யலாம், வியாபாரம் நிமிர்த்தமாக பயணம் செய்யலாம், திருமணம் செய்யலாம், உயர் பதவி வேண்டுவோர்,அரசு வேலை வேண்டுவோர்கள் அப்ளிகேஷன் போட சிறந்த கரணம்,ரத்த தானம் செய்யலாம்,கட்டிடம் கட்டுதல்,யாத்திரை செல்ல.

பவ கரணத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம்

பவாக்கரணத்தில் பிறந்தவர்கள் எந்த காரியத்திலும் பின்வாங்க மாட்டார்கள்.தைரியம் மிக்கவர்கள் கம்பீரமான தோற்றமுடையவர்கள்.எந்த வேலையையும் சரியாகவும் சுத்தமாகவும் செய்து முடிப்பார்கள்.ஒரு செயலை பவகர்ணத்தில் செய்தால் வெற்றி நிச்சயம்.தனக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு வாழ்வார்கள்.நன்னடத்தை உடையவர்கள்.அஞ்சான் நெஞ்சம் படைத்தவர்கள்.

மென்மையான தலை முடி உடையவர்கள்.பவ ஆண்கள் ஆளுமைதன்மை நிறைந்தவர்கள்.ஆனால் சோம்பேறி. முதலில் சாப்பிடுவார்கள்.
பவகரண பெண்கள்வீட்டின் நிர்வாகதிறனைபொறுப்பேற்றுக்கொள்வார்கள். பவத்தில் பிறந்த ஒரு ஆண் அவர்களின் ராசிக்கட்டத்தில் ஆண் ராசியில் அதிக கிரகம் இருந்தால் அவர்களுக்கு ஆளுமை இருக்கும்.

பவகரணத்தில் பிறந்து பெண் ராசியில் அதிக கிரகம் இருக்க பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.சுறுசுறுப்பானவர்கள்.பொருளாதாரத்தில் மேலே வரும் எண்ணமுடையவர்கள். வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைகளில் வரும் பவ கரணத்தை பயன்படுத்தி உயர்வு அடையலாம். ஒளி பொருந்தியவர்கள்.

அவர்களும் அவர்களின் செயல்களும் கவரும் விதமாக இருக்கும்.சக்தி வாய்ந்ததாக இருக்கும்.எனவே பவகரணத்துடன் மென்மையான குணம் கொண்ட ஜாதகத்தை இணைக்க கூடாது. உதாரணமாக பவம் கரசையை இணைக்க கூடாது.

சந்ததிக்காக அனைத்தையும் சேர்த்து வைப்பார்.வேலை வாய்ப்பு எங்கு அதிகம் இருக்குமோ அங்கேயே இவருக்கு வீடு அமையும் இவர்களுக்கு சொந்த வீடு அமையும் போது உடனடியாக திருமணம் முடிந்து விடும்.பவ கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு எல்லைப் பிரச்சனை இருக்கும்.பவ கரணத்தில் பிறந்தவரின் தாயாரின் வாழ்க்கை பிரச்சினைக்கு உரியதாக இருக்கும்.

பவ கரணத்தில் பிறந்தவருக்கு முதல் தொழிலை உதறி இருப்பார்கள். இவர்களுக்கு இடைஞ்சல்கள் இருந்திருக்கும்.தான் என்ற எண்ணம் அதிகம் இருக்கும்.தந்தையின் மீது பாசம் அதிகம் இருக்கும் ஆனால் தந்தை மகன் கருத்து வேறுபாடு இருக்கும்.
தலைரீதியான பிரச்சனை இருக்கும் அல்லது சொட்டை விழுதல் போன்ற தொந்தரவு இருக்கும்.தலைவலி அல்லது கண் கண்ணாடி அணிபவர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு எந்த நேரத்தில் எதைப் பேசவேண்டும் என தெரியாது.

பவ கரண

சாப்பாடு விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.இவர்கள் ஒரு சின்ன கௌரவ இழப்பு ஏற்பட்டாலும் தாங்க மாட்டார்கள், தூக்கி எறிந்துவிடுவார்கள்.
புகழ்ச்சியை மிகவும் பிடிக்கும். எதிரிகளை துவம்சம் செய்து விடுவார்கள்.

இவர்களின் ஜாதகத்தில் சூரியன் செவ்வாயும் நல்ல நிலையில் இருக்க இவர்களின் குடும்பத்தில் இவர்கள் பிரபலம் அடைவார்கள்.பவ கரணத்தில் பிறந்தவர்களின் வீட்டில் சிம்மம், மேஷம், விருச்சிகம், கும்பம் ராசி அல்லது லக்னமாக கொண்டவர்கள் நிச்சயம் இருப்பார்கள் அல்லது ஜாதகரே இருப்பார்.

பவ கரணத்தில் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

 • இவர்கள் உத்திராட நட்சத்திர வரும் நாள் அன்று பலாப்பழதானம் கொடுத்தால் மென்மேலும் உயர்வடைவார்.
 • தேய்பிறை சதுர்த்தசி திதி, செவ்வாய்க்கிழமை சுவாதி நட்சத்திரம் வரும் நாள் அன்று நாமக்கல் நரசிம்மரை சென்று வழிபடுவது மேன்மையை தரும்.
 • ஒரு போட்டி தேர்வு எழுத சிங்கம் படம் ஸ்கிரீன் சேவர் ஆக வைத்துக்கொண்டு தேர்வு முடிந்த பின் எடுத்து விட வேண்டும், தேர்வில் வெற்றி பெறுவார்கள்.
 • இவர்கள் கோபம் வந்தால் டக்கென்று அடித்து விடுவார்கள், இதனை குறைக்க சூரியநமஸ்காரம் தொடர்ந்து 27 நாட்கள் செய்ய கோபம் தணிந்து சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பவ கரண
 • நாமக்கல் லக்ஷ்மி நரசிம்மரையும், ஆஞ்சநேயரையும் வழிபட சிறப்பு.
 • திருமண தடை படும் ஜாதகர், சர்ப்ப தோஷம் உடையவர்கள் பக்கத்தில் இவர்களுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு கஸ்தூரி மஞ்சள் தடவி நாமக்கல் லட்சுமி நரசிம்மர் அல்லது ஆஞ்சநேயர் இருவரின் பாதத்தில் வைத்து பூஜித்து பிறகு வரன் பார்க்க ஆரம்பித்தாள் கண்டிப்பாக திருமணம் கைகூடும்.
 • பவ கரணத்தில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தம்பதியர்கிடையே அடிக்கடி ஒற்றுமை குறைவு ஏற்பட்டு அம்மா வீட்டிற்கு பெண் சென்றுவிடும். ஆகையால் கோபப்பட்டு வீட்டிற்கு வரும் பெண்ணை 5 – 10 kg துவரம் பருப்பு கொடுத்து அதை சுத்தம் செய்ய சொல்ல வேண்டும்.துவரம்பருப்பை வாங்கி சுத்தம் செய்த பிறகு அந்த பெண் கையால் அதை யாருக்காவது தானம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்ய தம்பதியர் ஒற்றுமை ஓங்கும்.
 • பவ கர்ணத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய சூரிய ஹோரையில் அவர்களின் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும். தந்தை இல்லாதவர்கள் மூத்த அண்ணன் இருக்க அவர்களிடம் ஆசி வாங்கலாம் அல்லது முருகர் கோவில் அதிலும் குன்றின் மேல் உள்ள முருகன் கோவில் சென்று வழிபாடு செய்வது போன்றவை குகை கோவில் மிகவும் சிறப்பு தரும். திருமணத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் திருப்பரங்குன்றம் சென்றுவர சிறப்பைத்தரும்.
 • பெண் சிங்கம் – சிம்ம வாகனி வழிபாடு, பிரத்தியங்கிரா தேவி வழிபாடு
 • ஆண் சிங்கம் – நரசிம்மர் வழிபாடு.
 • ரத்த தானம் செய்வது, வைத்தீஸ்வரன் கோவில் சென்று துவரம்பருப்பு அர்ச்சனை செய்வது சிறப்பைத் தரும்.
 • ஏதாவது பிரச்சனை எனில் சற்று நேரம் தூங்கி எழுந்தால் பிரச்சனை சரியாகிவிடும்.
 • பவத்தில் பிறந்தவர்களுக்கு நரசிம்மர் வழிபாடு, சிங்கம் ஸ்கிரீன் சேவர் சிறப்பு.
 • பவ கர்ணத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி டீக்கடை பக்கம், போலீஸ் ஸ்டேஷன் பக்கம் சென்று வரவேண்டும்.
 • சகோதர உறவுகளை நல்ல முறையில் பேணி பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். மிகச்சிறந்த நற்பலன்களை தரும். காரகத்துவ உறவுகளுக்கு உதவி செய்வது மிக சிறப்பு.
 • 3 1/2 நாளை ஒரு முறை வரும் பவ கர்ணம்.
 • பவ கர்ணம் ஜோதிடர்கள் வாஸ்து பார்க்க பிரபலம் அடைய முடியும். அந்தந்தக் கர்ணத்தில் பிறந்தவர்களை அது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுத்த( உடன் வைத்துக் கொள்ள வேண்டும்) மேன்மை தரும். செயல்களில் வெற்றி பெற முடியும்.
 • பவ கர்ணத்தில் பிறந்தவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். வெற்றியாளர்கள். பரிபூர்ணமாக கரணநாதனை இயக்க அற்புதமான பலனை பெற முடியும்.
பவ கரண

பவ கரணத்தின் விசேஷமான ஸ்தலங்கள்

 • நாமக்கல் லட்சுமி நரசிம்மர்
 • ராஜராஜேஸ்வரி உடனுறை சதுரங்க வல்லபநாதர் கோவில் – பூவனூர் திருவாரூர் அருகில்
 • திருநல்லூர்
 • சமயபுரம்
 • புன்னைநல்லூர்
 • மூகாம்பிகை
 • அம்பகரத்தூர் காளி கோவில் – திருநள்ளாறு அருகில்
 • மேச்சேரி காளி
 • ஈரோடு சந்திர காளி

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular