Friday, May 24, 2024
Homeஆன்மிக தகவல்ஆவணி அவிட்டம் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள்

ஆவணி அவிட்டம் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்” என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் விஸ்வகர்மா மற்றும் செட்டியார் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கடைபிடிக்கும் வழிபாடாகும். சமசுகிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் எனபதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம்.

உபாகர்மம் பொதுவாக ஆடி/ஆவணி (சிரவண) மாதத்தின் பௌர்ணமி நாளில் நடைபெறுகிறது. ஆனால் ஒருவரின் வேத பிரிவு கிளையின் அடிப்படையில் நாட்கள் வேறுபடும். வேதங்களாவன இருக்கு, யஜுர், சாம, அதர்வணம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பழையகாலத்திலிருந்து மக்கள் தங்களை இந்தப் பிரிவுகளுள் ஒன்றுடன் இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களது பரம்பரையினர் அந்தந்த வேதப் பிரிவைச் சார்ந்திருப்பார்கள். அதன்படியே தங்கள் புனிதச் சடங்குகளைச் செய்து வருவார்கள்.

ஆவணி அவிட்டம்

சிராவண மாதம் என்பது ஆடி அமாவாசையில் தொடங்கி, ஆவணி அமாவாசை வரை உள்ள காலமாகும். இந்தச் சிராவண மாதத்தில் வரும் அவிட்டம் நட்சத்திரம் பௌர்ணமி நாள் யஜுர் வேதிகளுக்கு உபாகர்மம் நடக்கும். இதே சிராவண மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்திலன்று யஜுர் வேதிகளின் உபாகருமமும், அடுத்த மாதத்தில் வரும் அஸ்த நட்சத்திரத்தன்று சாம வேதிகளின் உபாகர்மமும் நடக்கும். (இது அநேகமாக பிள்ளையார் சதுர்த்தி அன்றோ அல்லது அதற்கு ஒரு நாள் முன், பின்னேயோ வரும்.)

ஆவணி அவிட்டம் பெயர் வர காரணம்

தமிழ் நாட்டில் மிகப் பெரும்பாலானோர் யஜுர் வேதிகளாக இருப்பதாலும், அவர்கள் அவிட்டம் நட்சத்திரத்தில் உபாகர்மம் மேற்கொள்வதாலும் தமிழில் உபாகர்மத்துக்கு “ஆவணி அவிட்டம்” என்றே பொதுவாகச் சொல்லப்படுகிறது.

ஆவணி அவிட்டத்தின் சிறப்பு

இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.

காயத்ரி மந்திரம்

உபாகர்மம் நடந்த அடுத்த நாள் காயத்ரி ஜபம் என்னும் மந்திரத்தை உச்சாடனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். காயத்ரி மந்திரத்தை 1008 தடவைகள் உச்சாடனம் செய்யவேண்டும். இதனை கூட்டு வழிபாடாகச் செய்யும்போது எத்தனை பேர் பங்கேற்கிறார்களோ அந்த எண்ணிக்கையால் 1008 ஐ வகுத்து அத்தனை தடவைகள் எல்லோரும் சேர்ந்து சொல்வார்கள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular