Saturday, September 30, 2023
Homeஜோதிட குறிப்புகள்ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் இணைந்திருந்தால் ஏற்படும் பொது பலன்கள்

ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் இணைந்திருந்தால் ஏற்படும் பொது பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

இரண்டு கிரகங்கள் இணைந்திருந்தால் ஏற்படும் பொது பலன்கள்

1.சூரியன் +சந்திரன்:அமாவாசை யோகம் ,மன உறுதி ,மறை பொருளை கண்டு பிடிக்கும் ஆற்றல் உண்டாகும்.அனுமார் போல்.

2.சூரியன் +செவ்வாய் :விதவை / மனைவியை இழப்பர் ,விவாக இரத்து ஆகும்.

3.சூரியன் +புதன் : புதாத்திய யோகம்,கல்வியில் மேன்மை உண்டாகும்.நிர்வாக திறமை ஓங்கும்.முதுகலை நிர்வாகவியல் படிப்பார்.

4.சூரியன் +குரு :வழக்கறிஞர் ,இரயில்வே மண்டல மேலாளர் ஆகும் வாய்ப்பு உண்டு.

5.சூரியன் +சுக்கிரன் :மாநில பெயர் கொண்ட வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு வரும்.(உ.தா-பரோடா வங்கி ,ஹைதராபாத் வங்கி)

6.சூரியன் +சனி : கிரானைட் தொழில்,மின்பொறியாளர் ,திட்ட அலுவலர் ,முடிதிருத்துவர் ஆகிய தொழிலில் இருப்பர்.

கிரகங்கள்

7.சூரியன் +ராகு :திருட்டு தொழிலை கண்டு பிடிப்பார்.கள்ள கடத்தலை தவிர்ப்பார்,பிடிப்பார்.காவல் துறை கண்காணிப்பாளர்.பிற இண முகமதிய மணம் கூடும்.

8.சூரியன் +கேது :சூரணம் செய்தல் ,மருந்து தயாரித்தல் செய்வார்.

9.சந்திரன்+செவ்வாய்: மதி மங்கள யோகம் வீடுவாசல் உண்டாகும். திரையரங்கு, கல்யாண மண்டபம் கட்டுவார் (இது மதிமங்கள் யோகம் அல்லது சந்திர மங்களயோகம் என்று பெயருறும்.) இது பெரிய யோகம்.

10.செவ்வாய்+புதன்: கால் நடை மருத்துவர். பரிசோதனைக் கூட பொறுப்பாளர், தீவனமிடுத் தொழில் அமையும். வேதியியல் படிப்பு அமையும்.

11.சந்திரன் + குரு :குருச் சந்திரயோகம். இது நல்ல யோகமல்ல வாழ்வில் அடிபட்டு முன்னேறுவார்.

12.சந்திரன் + சுக்கிரன்: பெண்விரும்பிகள், காமுகர்கள், பெண்கள் எனில் தவறான தொழில் செய்வர்.

13.சந்திரன் + சனி: கட்டிட இயல் பொறியாளர். அணைக்கட்டு, அடுக்கு வீடு கட்டுவார்.

14.சந்திரன் இராகு: எக்ஸ்ரே, கணினி, திரைப்படத் தொழில் அமையும். ஓவியர்.

15.சந்திரன் + கேது இரத்தப் பரிசோதனை, குடல் மருத்துவம், சித்த மருத்துவம் செய்வார்.

16.செவ்வாய் +சனி: கல் குவாரியில் கல்லுடைத்தல், அலுவலக உதவியாளர் பணி, மருத்துவ வேதியியல் படிப்பு அமையும்.

17.செவ்வாய்+சுக்கிரன்: தைரியமற்றவர், வைர மோதிரம் அணிவார்.

18.செவ்வாய்+இராகு: பெருந் திரையரங்குகள் வைத்திருத்தல், நாடகம் எழுதுதல், பெட்டிக்கடை வைத்தல் போன்றவை அமையும்.

19.செவ்வாய்+கேது: நாட்டு மருந்துக்கடை, புளி வியாபாரம், தாய் மாமாவின் பூமியை உழுதல் போன்றவை

20.புதன்+குரு: வழக்கறிஞர். போட்டி வைத்து வெல்வார். சர்க்கரை ஆலையில் தனியார் பள்ளியின் தாளாளர் ஆவார்.

21.புதன் + சனி: அச்சுத்தொழில், இலண்டன், ஜெர்மனித் தொடர்பு. வெள்ளை நிற வீடு கட்டுதல், காவல் சீருடைப் பணியாளர்.

22.புதன் +கேது: பெண்களைப் பெண்களே திருமணம் செய்து கொள்ளும் நிலை.கோவினுக்கு மின்சாதனம் வாங்கி தருதல்,கையில் பச்சை குத்துதல் ஆகியன. பல் மருத்துவராவார்.

கிரகங்கள்

23.புதன் + சுக்கிரன்: கிராமவங்கிப்பணி, சிலருக்கு புற்றுநோய் இடர் வரும்.

24.புதன் +இராகு: ஆண்களை ஆண்களே திருமணம் செய்து கொள்ளும் நிலை.

25.குரு +சனி: வாகனப் பணிமனை வேலை, தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பு உண்டு.

26.செவ்வாய் + புதன்: மணவாழ்வு சுகமின்மை, நிலக்கரி சாம்பல். தலைமுடி சவுரி வாணிபம். இயற்பியல் படிக்கும் வாய்ப்பு வரும்.

27.செவ்வாய் + குரு: குரு மங்கள யோகம். அமோக செல்வாக்கு உண்டாகும். உடற்கல்விப் பாடம் படிப்பார் பெருஞ்செல்வர்.

28.குரு + சுக்கிரன்: மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர். சிலகாலம் பணி நீக்கம் செய்யப்படுவார்.

29.குரு + இராகு: குரு சண்டாள யோகம்: கீழோர் தொடர்பால் இடர். தொழிற்சங்கத் தலைவராவார். அரிசி விற்பனை செய்வார்.

30.குரு + கேது: கொள்ளையடிப்பவர். மத-மனோதத்துவ மருத்துவ ஆசிரியர். பங்குத் தொழில் சிறக்கும்.

31.சுக்கிரன் + சனி: கல்வெட்டு ஆய்வு. ஆயுர்வேத மருத்துவர். உருளைக்கிழங்கு, வெங்காயம் வாணிபம்.

32.சுக்கிரன்+இராகு: கதாசிரியர். வங்கிக் கணக்கு அதிகாரி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular