Wednesday, June 19, 2024
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-2025யார் இந்த ராகு கேது ? ஜாதகத்தில் ராகு கேது ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?

யார் இந்த ராகு கேது ? ஜாதகத்தில் ராகு கேது ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ராகு கேது

“ஸிம்ஹிகை” எனும் அகரப் பெண்மணிக்குப் பிறந்தவர் ராகு! மகா விஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் இயற்றி, அதன் பலனாகக் கிரகப்பதவியை அடைந்தவர். அரசனை ஆண்டியாகவும், ஆண்டியை அரசனாகவும் மாற்றும் வல்லமை படைத்தவர் ராகு.

நற்பலனாலும், கெடுபலனாலும், தயை, தாட்சண்யமின்றிச் செய்வதால், உலக மக்களுக்கு ராகு என்றாலேயே அச்சம் ஏற்பட்டுவிடுகிறது. ஆதலால்தான், “கொடுப்பதிலும், கெடுப்பதிலும் ராகுவிற்கு இணையில்லை…!” என்ற கருத்து நிலைபெற்றுவிட்டது.

“குடை கீழிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து, ஓர்ஊர் நண்ணிலும் நண்ணுவர்…!” (குஞ்சரம் : யானை) என விதியின் வலிமையை வர்ணித்துள்ளனர், நம்முன்னோர். அந்த விதியைச் செயல்படுத்துவது ராகுவே!

“ஜெனனகால ஜாதகத்தில் ராகு, சுப பலம் பெற்று, குரு, சுக்கிரன் ஆகியோரின் சேர்க்கை அல்லது சுபப்பார்வை பெற்றிருப்பின், அதிர்ஷ்டத்தை அள்ளித் தந்துவிடுவார். ஒரே இரவில்….!” எனக் கூறுகிறது. பூர்வ பாராசர்யம்” எனும் ஜோதிடக் கிரந்தம். ஆயினும், அந்த அதிர்ஷ்டத்ததைத் தவறான வழிகளில் தருவார், ராகு! (லாட்டரி, குதிரைப் பந்தயம், பிறரை ஏமாற்றுவது, கலப்பட வியாபாரம் போன்ற தவறான வழிகளில் பெற்றுத் தருவார்).

ராகு கேது

ஜாதகத்தில், அசுப பலம் பெற்றிருந்தால், தாங்குவதற்கு இயலாத துன்பங்களைத் தருவார், ராகு. சூரிய வம்ச மன்னரான அரிச்சந்திரன், நிடத் நாட்டு அரசனான நளன் ஆகியோர் ராகுவின் நிலைகளினால்தான் விவரிக்க இயலாத துன்பங்களை அனுபவித்தனர்.

அரசியலில் வெற்றி பெறுவதற்கு ஜாதகத்தில் ராகுவின் நிலை உயர்ந்த சுப பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதை “அர்த்த சாஸ்திரம்” கூறுகிறது. சுக்கிரன், சனி, புதன் ஆகிய மூவரும் ராகுவிற்கு நட்புக் கிரகங்களாவர். குரு, சூரியன், சந்திரன் மூவரும் பகைவர்கள். மானிட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தலையிடும் உரிமை ராகுவிற்கு உண்டு! தகாத உறவுகள், மோசடி, தேசத் துரோகம், பிடிவாதம், முன்கோபம், சூதாட்டம் ஆகியவற்றிற்கு ஆதிக்கம் கொண்டவர் ராகு கிரகம்.

இருப்பினும், சுபக் கிரகங்களுடன் இணைந்திருந்தால், அளவற்ற நன்மைகளையும் செய்வார், ராகு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுபக் கிரகங்கள், அமைந்து, லக்கினத்திலிருந்து 12ம் இடத்தில் ராகு அமர்ந்திருந்தால், கங்கா ஸ்நானம் பாக்கியம் கிட்டும்…. என்று கூறுகிறது “ஜோதிட அலங்காரம்”.

ராகு தோஷத்திற்கு, கோமேதகம், ரத்தினம் பதித்த மோதிரம் அணிவது சிறந்த பரிகாரமாகும்,

ராகு – கேதுவிற்கு, விருச்சிகம், உச்ச ராசியாகும். ரிஷபம் நீச்ச ராசி.

ஜாதகத்தில் ராகு தோஷம் இருப்பின், சனிக்கிழமைகளில் ஆலயம் ஒன்றில் தீபங்கள் ஏற்றிவருவது சிறந்த பலனளிக்கும் பரிகாரமாகும்.

ராகு கேது

வேதவியாச பகவான் அருளிய கீழ்க்கண்ட ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி அவரை வழிபட்டுவந்தாலும், ராகுதோஷம் அடியோடு விலகும்.

“அர்த்தகாயம் மகாவீர்யம் சந்திராதித்ய
விமர்தனம் ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம்ராகும் ப்ரணமாம்யஹம்

திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, திருபாம்புரம் போன்ற திருத்தலங்கள் சக்திவாய்ந்த ராகு பரிகாரத் தலங்களாகும்.

ராகு கேது பிறந்த கதை

பாற்கடலில் அமிர்தம் தோன்றிய திருக்கதை நமக்கு தெரியும். அந்த அமிர்தத்தை அசுரர்கள் அபகரித்துக் கொண்டால் என்னா வது? தேவர்கள் கலங்கினர். அமிர்தத்தை பருகி அசுரர்கள் இன்னும் பலம் பெற்றால் நமது கதி அதோகதி தான் என்று பயந்தனர். எனினும் பகவான் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையுடன் அவரை துதி செய்தனர்.

அவர்கள் முன் தோன்றிய “மகாவிஷ்ணு” வருந்தாதீர்கள்… என் மாயையினால் அமிர்தம் உங்கள் வசமாக அருள் புரிவேன் என்று உறுதியளித்து மறைந்தார்.

நல்லதொரு விஷயம் நல்லவர்களுக்கு கிடைத்தால் அது பலருக்கு நன்மையாக பல மடங்கு பல்கிப் பெருகும். அதுவே தீயவர்களிடம் போய் சேர்ந்தால் நல்ல விஷயங்களுக்கு உதவாது தீய விளைவுகளுக்கு அடிகோலும். பாற்கடலில் தோன்றிய அமிர்தம் அசுரர்களிடம் சேர்ந்து விடக்கூடாது என்று முடிவு செய்தார் பரம்பொருள். ஆகவே மோகினி பெண்ணாக வந்தார்.

அசுரர்களோ வந்திருப்பது யார் ?என்று தெரியாமல் அவள் மீது மோகம் கொண்டனர். அவர்களின் மயக்கத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தால் மோகினி பெண். அசுரர்களும் அவள் செய்வதற்கெல்லாம் தலையாட்ட ஆரம்பித்தார்கள். அவள் கேட்டுக்கொண்டபடி நீயே இந்த அமிர்தத்தை பிரித்துக் கொடு என்றனர். அமிர்த கலசத்தை வாங்கிக் கொண்ட மோகினி தேவர்களையும் அசுரர்களையும் தனித்தனியே பிரித்து வரிசைப்படுத்தினால்.

ராகு கேது

கண்ணசைப்பாலும் உதட்டை சுழிப்பாலும் அசுரர்களை மதி மயக்கியபடியே தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை வழங்கினால் மோகினி. மூப்பையும், மரணத்தையும் தடுக்கும் அமிர்தத்தை ஆனந்தமாக பருகினார்கள் தேவர்கள். இந்த நிலையில் ஸ்வார்பானு என்ற அசுரன் ஓர் உபாயம் செய்தான். ஒரு தேவனாக தன்னை மாற்றிக்கொண்டு தேவர்களின் வரிசையில் வந்து நின்றான். அமிர்தம் வாங்கி பருகினான்.

அதே நேரம் அவனை அடையாளம் கண்டு கொண்ட சூரிய-சந்திரர் இந்த விஷயத்தை மோகினி பெண்ணுக்கு குறிப்பாள் உணர்த்தினார்கள். மோகினி பெண் அமிர்தம் அள்ளிக் கொடுத்த கரண்டியாலேயே அவனை தாக்கினாள். தலை வேறாக உடல் வேறாக ஆனான் அந்த அசுரன் ஆனாலும் அமிர்தம் பருகியதால் முற்றிலுமாக அவன் அழியவில்லை.

உடலின் ஒரு பாகம் மனித தலையும், பாம்பின் உடலும் பெற்று ராகுவாகவும் மற்றொரு பாகம் பாம்பின் தலையும் மனித உடலாக உருவம் பெற்று கேதுவாகவும் தோன்றியதாக புராணங்கள் விவரிக்கும்.

இவர்களில் உடல் ஆரோக்கியம், ஞானம், பிதா-மகன்உறவு, அரசாங்க சேவகம், ஆகியவற்றுக்கு காரகன் ராகு பகவான். சிறைவாசம், தண்டனை, அவமானம் போன்றவற்றை நிர்ணயிப்பவரும் இவரே.

ராகு -தென்மேற்கு திசைக்கு அதிபதி.

காமதேனு என்னும் பசு ராகுவின் அதிதேவதை.

காளி இவரது அதிதேவதை அல்லது பிரத்யதி தேவதையாக சொல்லுவார்கள்.

ராகுவின் நட்சத்திரம் அஸ்வினி.

இவருக்கு ஸர்பி என்ற பெயர் உண்டு. இவரது பத்தினி ஹிம்கி.

ராகுவின் வாகனம் ஆடு.

ராகுவுக்கு உரிய ரத்தினம் கோமதகம்.

ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும்.

இவர்களில் மற்றொருவர் கேது பகவான். இவர் ஞான காரகன் எனப்படுவார். இவர் மோட்ச காரகனும் ஆவார். மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடலில் பாம்பு தலையை பெற்றவர் இவர். விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் இவரே அதிபதி. தாய்வழிப் பாட்டனுக்கு காரகன்.

ராகு கேது

இவரது அதிதேவதை சித்திரகுப்தன். பிரத்யதி தேவதை பிரம்மன்.

கேது -வடமேற்கு திசை அதிபதி.

கேதுவின் ரத்தினம் – வைடூரியம்.

இவருக்கு சிகி என்ற பெயர் உண்டு.

கேதுவின் நட்சத்திரம் ஆயில்யம் .

ஸிம்ஹம் இவரது வாகனம்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்98குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25அற்புத ஆலயங்கள்21சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சுபகிருது வருட பலன்கள்13குரோதி வருட பலன்கள் 202413ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular