Saturday, June 15, 2024
Homeராசிபலன்ஐப்பசி மாத ராசி பலன்கள்-2023ஐப்பசி மாத ராசி பலன்கள்-2023

ஐப்பசி மாத ராசி பலன்கள்-2023

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஐப்பசி மாத ராசி பலன்கள்

மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)’

சுக்கிரன், கேது ஆகிய இரு கிரகங்களும் உங்களுக்கு அனுகூலமாக உள்ளனர். இம்மாதம் முழுவதும் ! சனி பகவானால் அளவோடு நன்மைகள் ஏற்படும். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். ஜென்மராசியில் குருவும், விரயத்தில் ராகுவும் அமர்ந்திருப்பதால், செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும்.

அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை ஏற்க நேரிடும். விவாக சம்பந்தமான முயற்சிகளில் தடங்கலும், குழப்பமும் ஏற்படும். உறவினர்களிடையே, பரஸ்பரம் ஒற்றுமை நிலவும். உத்தியோகப் பொறுப்புகளால் கணவர் – மனைவி தற்காலிகமாகப் பிரிந்திருக்க நேரிடும்.

ஐப்பசி மாத ராசி பலன்கள்

உடல் ஆரோக்கியத்திலும் பின்னடைவு ஏற்படும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. ஒரு சிலருக்கு, வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. குருவின் ஜென்ம ராசி சஞ்சார தோஷம், சுக்கிரனின் கப்பலத்தினால் குறைந்துவிடுகிறது.

பலன் தரும் பரிகாரம்

வியாழக்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், பிரதோஷ காலமாகிய மாலை நேரத்தில், தீபத்தில், நெய் சேர்த்து வந்தால் போதும். அது, எந்தத் திருக்கோயினாலும், பலன் ஒன்றே!

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி: 3-5, 9-12, 16-18, 23-26,30

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி: 1, 2 இரவு வரை, மீண்டும் 27 இரவு முதல், 29 வரை.

ரிஷபம்

(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

பெரும்பான்மையான கிரகங்கள், உங்களுக்கு மிகவும் ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். லாப ஸ்தானத்தில் ராகு நிலைகொண்டிருப்பது, பல நன்மைகள் ஏற்படவுள்ளதைக் குறிக்கிறது. கொடுப்பதில் ராகுவும், சனியும் கணக்குப் பார்க்காமல், சற்று தாராளமாகவே கொடுக்கும் கருணையுள்ளம் படைத்தவர்கள்.

ஐப்பசி மாத ராசி பலன்கள்-2023

சுக்கிரன், உங்கள் திட்டங்களை நிறைவேற்றிவைப்பார். பலருக்குச் சொந்த வீடு அமையும் பாக்கியமும் உள்ளது. குரு பகவான் சாதகமாக இல்லாததால், திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சற்று தடங்கல்கள் ஏற்படும். ஆரோக்கியம் திருப்திகரமாகவே இருக்கும். உத்தியோகம் காரணமாக, பிரிந்திருக்கும் கணவர்-மனைவி ஒன்றுசேர்வார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்குகள் சமரசத்தில் முடியும்.

பலன் தரும் பரிகாரம்

தினமும் காலையில் கந்தர் சஷ்டி கவசமும், மாலையில் விஷ்ணு சகஸ்ர நாமமும் சொல்லிவாருங்கள் பலன் கைமேல்.

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி:1,5-9, 13-15, 19-22,26-8.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி:2இரவுமுதல், 4பின்னிரவுவரை. மீண்டும் 30.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

சுக்கிரன், குரு ஆகிய இருவரும் மிகவும் சாதகமாக சஞ்சரிக்கும் நிலையில், ஐப்பசி மாதம் பிறக்கிறது. பணப் பிரச்னை இராது. வருமானம் நல்லபடியே உள்ளது. அஷ்டம ராசியில் ஆயுள்காரகரான சனி வக்கிரகதியில் இருப்பதால், ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மருத்துவச் செலவுகள் தவிர்க்க இயலாதவை. கூடியவரையில், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுதல், பணம், பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றுடன் தனியே செல்வதையும், அஜாக்கிரதையாக இருப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஐப்பசி மாத ராசி பலன்கள்

குரு, சுக்கிரன் சுபபலம் பெற்றுள்ளதால், திருமண முயற்சிகள் வெற்றிபெறும். மனத்திற்கு உகந்த வரன் அமையும். சுக்கிரனின் நிலையினால், தக்க தருணங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். உறவினர்களிடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு தென்படும்.

பலன் தரும் பரிகாரம்

சனி, ராகுவிற்கு பரிகாரம் அவசியம் செய்யவேண்டும். சனிக்கிழமைகள்தோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், தீபத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வந்தால் போதும். ஒவ்வொரு துளி எண்ணெயின் சக்தியும் அளவற்றது! இதை அனுபவத்தில் மட்டுமே காண முடியும்!!

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி:1-3,7-9, 13-15, 19-22,26, 27, 30.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி: 4 பின்னிரவு முதல், 6 பின்னிரவு வரை.

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

சுக்கிரன், குரு ஆகிய இருவரும் உங்களுக்கு அனுகூலமாக நிலைகொண்டுள்ளனர், இம்மாதம் முழுவதும்! குரு பகவான் ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும், பாக்கிய ஸ்தானத்தின் சுப பலனைத்தான் அவர் அளிப்பார். ஏனெனில், அதிச்சார, வக்கிர தோஷம் குருவுக்கு மட்டும் கிடையாது என்பது மகரிஷிகளின் வாக்காகும்!! ஆதலால்,பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

குடும்பச் சூழ்நிலை, மன நிம்மதியைத் தரும். களத்திர ஸ்தானத்தில் வக்கர கதியில் நிலைகொண்டிருந்த சனி பகவான், ஐப்பசி 6ம் தேதி வக்கிர கதி நீங்கி, நேர் கதியில் செல்ல ஆரம்பிப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீண் செலவுகள் குறையும்.

ஐப்பசி மாத ராசி பலன்கள்

திருமண முயற்சிகளில் ஏற்பட்டு வந்த பல பிரச்னைகள் நீங்கி, வரன் அமைவதற்கு கிரக நிலைகள் சாதகமாக மாறுகின்றன. கேது அனுகூல நிலையில் இருப்பதால், முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படக்கூடும். வெளியூர் பயணங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழ்வதால் மனதில் மகிழ்ச்சி நிலவும். கருவுற்றிருக்கும் பெண்மணிகளுக்கு சுகப் பிரசவம் ஏற்படும்.

பலன் தரும் பரிகாரம்

விழுப்புரத்திற்கு அருகிலுள்ள, மகத்தான சக்திவாய்ந்த பூவரசன் குப்பம், பரிக்கல் (பண்ருட்டி), அபிஷேகபாக்கம் ஆகிய மூன்று லட்சுமி நரசிம்மர் க்ஷேத்திரங்களையும் தரிசிப்பது, எத்தகைய கடினமான தோஷமாயினும், உடனுக்குடன் நீக்குவதில் ஈடிணையற்ற சக்திவாய்ந்தவை. தவறாமல் பலன் கிட்டும். கோயிலுக்குச் செல்லும்போது மறந்துவிடாமல், மண் அகல் விளக்குகளும், நெய் அல்லது நல்லெண்ணெயும் எடுத்துச் செல்ல மறந்துவிடாதீர்கள்!

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி:3-5, 9-11, 16-18, 23- 25, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி: 6 பின்னிரவு முதல் 8 வரை.

சிம்மம்

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் வரை)

ராகு ஒருவரைத் தவிர, மற்றபிரதான கிரகங்கள் அனைத்தும் உங்களுக்குச் சாதகமாக வலம் வருவதால், முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வருமானம் எதிர்பார்க்கும் அளவிற்கு இருப்பதால், பணப் பற்றாக்குறை இராது.

தன ஸ்தானத்தில், கேதுவும், அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் இருப்பதால், மருத்துவச் செலவுகள் தவிர்க்க இயலாதவை. வாகனம் ஓட்டும்போது, கவனமாக இருத்தல் அவசியம். குறிப்பாக, இரவு நேரப் பயணங்களின்போது, பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். பின்னிரவு நேரத்தில், ராகுவின் வீரியம் அதிகமாக இருக்கும் என சூட்சும கிரந்தங்கள் கூறுகின்றன.

தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், விபத்துகள் நேரிடக்கூடும். இருட்டில் வழிகாட்டும் ஓர் ஒளி விளக்காகத் திகழ்கிறது. ஜோதிடம் எனும் வானியல் கலை! அதிர்ஷ்டவசமாக, உங்கள் ராசிக்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால்,ராகுவினால் ஏற்படும் தோஷம் மிகவும் குறைகிறது!

ஐப்பசி மாத ராசி பலன்கள்

பாக்கிய ஸ்தானத்தில், குரு அமர்ந்து, ராசியையும் பார்ப்பதால், குடும்பத்தில் விவாகம், சீமந்தம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நிகழும். சுபச் செலவுகள் சற்று அதிகமாகவே இருப்பினும், சமாளிப்பதில் பிரச்னை இராது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு, சுகப் பிரசவம் ஏற்படும்.

சுக்கிரனைவிட, குருவே அதிக பலம் பெற்றுள்ளதால், இம்மாதம் பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகளே அதிகமாக இருக்கும். குடும்பத்தில், நிம்மதி நிலவும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் ஏற்படும்.

பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற வழி பிறக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும். பெண் அல்லது பிள்ளை ஒருவருக்கு, வேலை கிடைக்கச் செய்வார், மகரத்தில் அனுகூலமாகத் திகழும் சனி பகவான் (வக்கிர கதியில்)! பாகப் பிரிவினை சம்பந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பினை எதிர்பார்க்கலாம்.

பலன் தரும் பரிகாரம்

அஷ்டம ஸ்தான ராகுவிற்கு, பரிகாரம் செய்தல் மிகவும் அவசியம். சனிக்கிழமைகளில், பிரதோஷ காலமாகிய மாலை நேரத்தில், ராகுவிற்கென்று, மண் அகலில் எள் எண்ணெய் தீபம் ஒன்று ஏற்றி வந்தாலே போதும்.

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி:2-4,7,8, 12-15, 19-22, 26, 27.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி: 9, 10, 11 காலை வரை.

கன்னி

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

சுக்கிரன் ஒருவரே இம்மாதம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றார்! மேலும், ஐப்பசி 6ம் தேதி சனி பகவானின் வக்கிர கதி நிவர்த்தியாவதும்,ஓரளவு நன்மையை அளிக்கக்கூடிய நிகழ்ச்சியாகும். சுக்கிரன் கொடுப்பதை குருவின் வக்கிர கதி விரயம் செய்துவிடும் என மிகப்பழமையான ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

வரவும், செலவும் ஏறக்குறைய சமமாகவே இருக்கும். மாதக்கடைசியில், நிதிப்பற்றாக்குறை சற்று கடினமாகவே இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் குரு வக்கிர கதியில் சஞ்சரிப்பதால், கணவர், மனைவியரிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது.

ஐப்பசி மாத ராசி பலன்கள்

சனி பகவானின் வக்கிர கதி நிவர்த்தியாவதால், பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திற்கு அவரால் ஏற்பட்ட தோஷம் குறைய ஆரம்பிக்கிறது. குழந்தைகளின்கல்வி மற்றும் ஆரோக்கியம் பற்றிய கவலை குறையும். திருமண முயற்சிகளில், எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. நீதிமன்ற வழக்குகளில் எதிர்பார்த்ததற்கு மாறான தீர்ப்பு கிடைக்கும் பல குடும்ப பிரச்சனைகளினால் மன நிம்மதி பாதிக்கபடும்.

பலன் தரும் பரிகாரம்

தொடர்ந்து, சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள ஆலயம் ஒன்றில் மாலையில் எள்எண்ணெய் தீபம் ஏற்றிவந்தால் ராகுவினால் ஏற்படும் தோஷம் விலகிவிடும்.

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி:1,2,6-9, 14-16, 19- 22, 26, 27, 30.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி:11 காலை முதல், 13 பிற்பகல் வரை.

துலாம்

சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

வருமானம் நல்லபடி நீடித்தாலும், பலவிதத் தவிர்க்க இயலாத செலவுகளினால், பணம் விரயமாகும். அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் அசதியை ஏற்படுத்தும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், வக்கிர கதியில் இருப்பதால், குருவினால் அதிக நற்பலனை இம்மாதம் எதிர்பார்க்க இயலாது. இருப்பினும்,சுக்கிரன் அனுகூலமாக இருப்பதால், அக்குறையை ஓரளவிற்கு சரிசெய்துவிடுவார்.

ஐப்பசி மாத ராசி பலன்கள்

திருமண முயற்சிகளில் சிறு, சிறு பிரச்னைகளும், குழப்பங்களும் ஏற்பட்டு, அதன் பிறகு வரன் அமையும். உறவினர்களிடையே ஒற்றுமை நிலவும், கேதுவின் சஞ்சார நிலையினால், தீர்த்த, தல யாத்திரை ஒன்று சித்திக்கும். பாடல் பெற்ற திருத்தல தரிசனம் கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. பழைய கடன்கள் நீடிக்கும். நீதிமன்ற வழக்குகளிலும் எவ்வித மாறுதலும் இராது. அந்நிய நாட்டில் பணியாற்ற வேண்டுமென்ற பிள்ளை அல்லது பெண்ணின் ஆசை நிறைவேறும்.

பலன் தரும் பரிகாரம்

வியாழக்கிழமை தோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தீபத்தில் கொஞ்சம் நெய் சேர்த்துவிட்டு தரிசித்துவிட்டு வந்தால் போதும்.

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி: 1-3, 6-8,12, 16-18,22-24, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி:13 பிற்பகல் முதல், 15 இரவு வரை.

ஐப்பசி மாத கிரக நிலைகள்

இந்த மாத கிரக பெயர்ச்சிகள்

ராகு -கேது பெயர்ச்சி -ஐப்பசி -14

ராகு -கேது பெயர்ச்சி -ஐப்பசி -14

சுக்கிரன் பெயர்ச்சி -ஐப்பசி -17

சுக்கிரன் பெயர்ச்சி -ஐப்பசி -17

புதன் பெயர்ச்சி -ஐப்பசி -21

புதன் பெயர்ச்சி -ஐப்பசி -21

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம்,கேட்டை வரை)

வக்கிர கதியில் அமர்ந்திருந்த சனி பகவான், நேர் கதியில் செல்ல ஆரம்பிப்பதால், அர்த்தாஷ்டக தோஷத்தின் சாயை உங்கள் மீது படும் ! சிறு விஷயங்களுக்கும்கூட, அதிக அலைச்சல் தேவைப்படும்.

ஐப்பசி 16ம் தேதியிலிருந்து சுக்கிரன், சாதகமாக மாறுகிறார். குரு, மேஷத்தில், வக்கிர கதியில் இருப்பதால், பூர்வ ராசி பலனைத்தான் அளித்தருள்வார்!! குடும்பத்தில் நிம்மதி நிலவும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். வருமானம் போதுமான அளவிற்கு நீடிக்கும்.

ஐப்பசி மாத ராசி பலன்கள்

கருவுற்றிருக்கும் பெண்மணிகளுக்கு, சுகப் பிரசவம் ஏற்படும். சிறு, சிறு உடல் உபாதைகள் அசதியை ஏற்படுத்தும். மூன்றாவது வாரத்தில், எளிய சிகிச்சையும் தேவைப்படக்கூடும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். ஒருசிலருக்கு, வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அவரவரது ஜனன கால ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் இதனை உறுதி செய்ய முடியும்.

பலன் தரும் பரிகாரம்

நரசிம்மப் பெருமான் அருள்பாலிக்கும் திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தரிசித்துவிட்டு வந்தால், மிக நல்ல பலன் கிடைக்கும். கோயிலுக்குச் செல்லுகையில் அகல் விளக்கையும், பசு நெய் அல்லது நல்லெண்ணெயும் எடுத்துச் செல்லுங்கள்.

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி : 3-5, 10 – 14, 18 – 22,26, 27, 30.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி:15 இரவு முதல், 16, 17வரை.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

லாப ஸ்தானத்தில், சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவானும், ஐப்பசி6ம் தேதியிலிருந்து, உங்களுக்கு மிகவும் ஆதரவாகக் கைகொடுக்கிறார். ஐப்பசி 15ம் தேதி வரை, சுக்கிரனும் சாதகமாக வலம் வருகிறார். குரு பகவான் வக்கிர கதியில் இருப்பதால், அர்த்தாஷ்டக பலனையே கொடுப்பார்! ஆதலால், பண வசதி போதுமான அளவிற்கு உள்ளது.

இம்மாதம் முழுவதும்! பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ள இறைவன் அளிக்கும் அரிய வாய்ப்பு இது. திருமண முயற்சிகளில், சிறு பிரச்னைகளும், குழப்பமும் ஏற்பட்டு, அதற்குப் பின் வரன் அமையும். குடும்பத்தில் சுபச் செலவுகள், எதிர்பார்ப்பைவிட அதிகமாகவே இருக்கும்.

ஐப்பசி மாத ராசி பலன்கள்

ஐப்பசி 16ம் தேதி சுக்கிரன்,கன்னிராசிக்கு மாறுவதால், கணவர் – மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் பாதிக்கப்படும்.

பிரசவத்திற்கு காத்துள்ள பெண்மணிகள் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் மிக முக்கிய தருணங்களில் நாம் எப்போது எந்த விஷயங்களிலில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே நமக்கு அறிவித்து நம்மை பாதுகாக்கும் விஞ்ஞானபூர்வமான வாழ்வியல் கலை ஜோதிடமாகும்.

பலன் தரும் பரிகாரம்

ராகு மற்றும் சனி ஆகிய இருவருக்குமே பரிகாரம் அவசியம்.ஆலயத்திலோ அல்லது, வீட்டிலோ 24 சனிக்கிழமைகள் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வருவது தன்னிகரற்ற பரிகாரம்.

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி:2-4, 9-11, 15-17, 24- 26, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி: 18, 19, 20 மாலை வரை.

மகரம்

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

ஜென்மராசியில், வக்கிரகதியில் நிலை கொண்டிருக்கும் சனி பகவான் ஐப்பசி 6ம் தேதி, நேர்திசையில் கும்ப ராசியை நோக்கிப் பயணிக்கவிருப்பது மிக நல்ல மாறுதலாகும்.

திருதீய ஸ்தானத்தில் (3) ராகு அமர்ந்திருப்பதும், சுக்கிரன் மாதம் முழுவதும் அனுகூல நிலையில் இருப்பதும், குடும்பத்தில் எதிர்பாராத பண உதவி கிடைக்கவுள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். குரு, சுபபலம் இல்லாமல் சஞ்சரிப்பதால், திருமணமுயற்சிகளில் ஏமாற்றமே மிஞ்சும். குடும்பப் பிரச்னையினால், கணவர் மனைவியரிடையே அந்நியோன்யக் குறைவும், வாக்குவாதமும் ஏற்படும்.

ஐப்பசி மாத ராசி பலன்கள்

ஜனன கால ஜாதகத்தில் களத்ர, மாங்கல்ய தோஷம் இருப்பின் கருத்து வேற்றுமையும் விவகாரத்தில் கொண்டு விடக்கூடும்.

பலன் தரும் பரிகாரம்

சனிக்கிழமைகளில் உபவாசம் இருப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும். பால், பழம் மட்டும் சாப்பிடலாம். அந்தக் கிழமையில் திருக்கோயில் தரிசனம் செய்வதும் நன்மையை அதிகரிக்கச் செய்யும்.

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி:1-3, 6-8, 12-15, 19, 23-25, 30.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி: 20 மாலை முதல், 22 பின்னிரவு வரை.

கும்பம்

(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

இம்மாதம் முழுவதும், வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். சனி பகவான். ஜென்ம ராசியை நோக்கித் திரும்புகிறார். ஐப்பசி 6ம் தேதியன்று! காரணமில்லாமல், மனதில் பதற்ற நிலை ஏற்படும்.

கற்பனையான கவலைகள் மன நிம்மதியைப் பாதிக்கும். கணவர், மனைவியரிடையே பரஸ்பர அன்பும் ஒற்றுமையும் மேலோங்கும். சிறு விஷயங்களுக்கும்கூட, அதிகமாக பாடுபடவேண்டியதிருக்கும். விவாக முயற்சிகளில், சிறு தடங்கல் ஏற்பட்டு, அதன் பிறகு நல்ல வரன் அமையும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், சொந்த வீடு அமையும் யோகமும் அமைந்துள்ளது வெளியூர்ப் பயணம் ஒன்று தவிர்க்க இயலாதது.

ஐப்பசி மாத ராசி பலன்கள்

கேதுவின் நிலையினால், பிரசித்திப் பெற்ற திருத்தல தரிசனம் ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. உடன்பிறந்தோர் நன்மை பெறுவார்கள் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு சுகப்பிரசவம் உண்டாகும். குரு பகவான் வக்ரகதியில் இருப்பினும் மீன ராசியின் பலனையே அளித்தருள்வார். ஏனெனில் அதிசார வக்ரகதிகள் குருவை பாதிக்காது.

பலன் தரும் பரிகாரம்

சனிக்கிழமைகளில், அருகிலுள்ளதிருக்கோயில் ஒன்றிலோ அல்லது வீட்டின் பூஜையறையிலோ, மாலையில் ஐந்து எள் எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால், தோஷம் அடியோடு நீங்கும்.

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி:2, 3,6-8, 12-15, 20, 21, 26-28.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி : 22 பின்னிரவு முதல் 25 பிற்பகல் வரை.

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

இம்மாதம் முழுவதும், வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணப் பிரச்னைக்கு வாய்ப்பில்லை! குடும்பச் சூழ்நிலை, திருப்திகரமாக இருக்கும். விரய ஸ்தானத்தை நோக்கி, சனி பகவான் திரும்பியுள்ளதால், வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால், உஷ்ண சம்பந்தமான சரும உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், எவ்விதக் காரணமுமில்லாமல், அடிக்கடி உடலில் சோர்வும், மனதில் அசதியும் ஏற்படும்.

ஐப்பசி மாத ராசி பலன்கள்

குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான போக்கு தென்படும்.

பலன் தரும் பரிகாரம்

ராகு மற்றும் சனிக்கு பரிகாரம் செய்வது, தோஷத்தைக் குறைக்க உதவும் திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, நாகமங்களா (கர்நாடகா) திருத்தல தரிசனம் சக்திவாய்ந்தவை.

பலன் தரும் தினங்கள்

ஐப்பசி: 1, 2, 6-8, 12-15, 19-22, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி 25 பிற்பகல் முதல், 27 இரவு வரை

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்97குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20அற்புத ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular