Thursday, December 7, 2023
Homeஆன்மிக தகவல்நாளை(28.10.2023) நள்ளிரவில் ஏற்படும் சந்திர கிரகணம்! பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

நாளை(28.10.2023) நள்ளிரவில் ஏற்படும் சந்திர கிரகணம்! பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

சந்திர கிரகணம்

கிரகண காலம் என்பது நம் சாஸ்திரங்களில் புண்ணிய காலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நுண்ணோக்கிகள் கண்டுபிடிப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நாம் தேசத்தின் வானியல் நிபுணர்கள் சூரிய சந்திர கிரகணங்கள் நிகழ இருக்கும் தினங்களையும் நேரத்தையும் சரியாக கனித்தார்கள். ஜோதிட அடிப்படையில் ராகு கேதுவோடு சூரிய சந்திரர்கள் சேரும் அமாவாசை தினம் சூரிய கிரகணமாகவும், ராகு கேதுவோட பௌர்ணமி சந்திரன் சேரும் தினம் சந்திர கிரகணமாகவும் அமையும்.

கிரகண நேரத்தில் பல கோயில்களில் நடை திறப்பதில்லை. இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 14-ம் தேதி அமாவாசை தினத்தன்று கேதுவோடு சூரிய சந்திரர்கள் இணைந்து இருந்தனர். அதனால் சூரிய கிரகணம் உண்டானது. ஆனால் அது நம் தேசத்தில் தெரியவில்லை. எனவே நமக்கு கிரகண தோஷம் ஏற்படவில்லை.

சந்திர கிரகணம்

குறை சந்திர கிரகணம்

வரும் பௌர்ணமி தினமான அக்டோபர் 28-ம் தேதி நள்ளிரவில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணம் குறை சந்திர கிரகணமாக நிகழ்கிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும். அக்டோபர் 28ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 29-ம் தேதி அதிகாலை 01:03 மணிக்கு தொடங்கி 02:23 மணி வரை சந்திர கிரகணம் நீடிக்கிறது. எனவே குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் தவிர்த்து பிறர் 28-ம் தேதி மாலை 3 மணிக்கு மேல் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

அஸ்வினி, ரேவதி, பரணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு இந்த கிரகணத்தால் தோஷம் உண்டாக்கும். எனவே இவர்கள் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மறுநாள் 29-ம் தேதி காலை நீராடி ஆலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. நவகிரக சன்னதியில் ராகு கேதுவை வேண்டிக்கொண்டு விளக்கேற்றி வழிபடலாம். மேலும் மட்டை தேங்காய், நெல் ஆகியவற்றோடு நாணயம் சேர்த்து தானம் செய்வது சிறப்பு.

ஜோதிடரீதியாக சந்திரன் மனோகாரகன் நம் மனத்தின் அதிபதி இதனால் கிரகண காலத்தில் மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே கிரகண நேரத்தில் நாம் இறை வழிபாட்டில் நம் மனதை செலுத்தி பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இறை வழிபாட்டை விட உயர்ந்த பரிகாரமும் காப்பும் இந்த உலகில் இல்லை என்றால் மிகை இல்லை

சந்திர கிரகணம்

கிரகண நேரத்தில் செய்யும் தர்ப்பணம் போன்ற பித்து காரியங்கள் நமக்கு முன்னோர்களின் ஆசியை தவறாமல் பெற்று தரும். மேலும் அந்த வேளையில் தானங்கள் கொடுப்பது மிகவும் சிறப்பு. கிரகண வேலையில் தரும் தானம் பன்மடங்கு புண்ணிய பலனை கொடுக்கும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular