Tuesday, June 18, 2024
Homeஆன்மிக தகவல்கார்த்திகை தீபம் 2023

கார்த்திகை தீபம் 2023

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கார்த்திகை தீபம் 2023

கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது தீபத் திருநாள்.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற தீபத் திருநாள் ஏனைய கார்த்திகை நாட்களை விடவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு நாள் ஆகும். கார்த்திகை தீபத்திருநாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

திருவிளக்கு வழிபாடு

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளன.

திருவிளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கின்றனர்.

கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த பலன் தரக்கூடியது.

தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது தீபம் ஏற்ற வேண்டும்.

TV MALAI 2006 1024 கார்த்திகை தீபம் 2023

தீபம் ஏற்ற உகந்த நேரம்:

தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரம் அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும், மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையும் ஆகும்.

காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் நன்மையைத் தரும்.

மாலையில் 4:30-6.00 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும்,நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, மற்றும் கல்வித்தடை நீங்கும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

கார்த்திகை தீப கொண்டாட்டம் ஏன்?

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார் அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவம் கொண்டு சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.

அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்ற நோக்கில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

tiruvanamalai 161122 கார்த்திகை தீபம் 2023

கார்த்திகை கூம்பு:

கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல், பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள்.

கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதை சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்திற்கு பனை ஒலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள்.

மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை செய்து, கோவிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கூம்புகளுக்கு முன்பாக பின்னர், சுவாமிக்கு தீபாராதனை சொக்கப்பனைகளைக் பரவி கொழுந்துவிட்டு சிவனாகவே எண்ணி. எழுந்தருளச் செய்வார்கள். செய்து, அந்தச் சுடரால் இந்த கொளுத்துவர். சுடர் வேகமாகப் எரியும். அந்த ஜோதியை வழிபடுவார்கள். இது.அக்னி மய லிங்கமாகும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா..!!

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில்திருவிழாக்கள்நடைபெற்றாலும் கார்த்திகைமாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது. தீபஜோதி வழிபாடானது. இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

கொப்பரை :

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகாதீப கொப்பரை கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் 2,668 அடி உயரம் கொண்ட மகாதீப கொப்பரை மலைக்கு எடுத்து செல்லப்படும்.

பரணி தீபம்:

கார்த்திகை தீபத்திருவிழா நாளின் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல்விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சன்னதியிலும் ஐந்து பெரிய அகல்விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணி தீபம் காலையில் நடக்கும். பரணி தீபம் ஏற்றப்பட்டபிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

மகாதீபம்:

மகாதீபம் கார்த்திகை தீபத்திருவிழா நாளின் மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருவது வழக்கம்.

எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

வீடுகளில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 தீபங்கள் ஏற்றுவது சிறப்பானது. 27 தீபங்கள் ஏற்ற முடியாத பட்சத்தில், குறைந்த பட்சம் 3 தீபங்களாவது ஏற்ற வேண்டும்.

முதல் விளக்கு உங்கள் குடும்பத்திற்காகவும்,

இரண்டாவது விளக்கு உங்கள் மூதாதையர்களை வழிபடும் பொருட்டும்,

மூன்றாவது விளக்கு உங்கள் எதிர்கால சந்ததிகள் நலமுற்று வாழ வேண்டும் என்பதற்காகவும் ஏற்றபடுகிறது.

விளக்கு தானாக அணையலாமா?

தீபம் ஏற்றியபின் விளக்கு தானாக அணையக்கூடாது. விளக்கு ஏற்றிய பின் அது தானாக கருகி அணைந்து விடும். கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக்கூடாது. பூவை பயன்படுத்தி விளக்கை குளிர்விக்க வேண்டும்.

எந்த விளக்கை ஏற்றினால் என்ன பலன்?.

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும்.

வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும்.

பஞ்சலோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும்.

வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும்.

இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.

அறிவியல் ரீதியாக யோசிக்கலாம் வாங்க!!

கார்த்திகை மாத தீபத்திருநாளில் மட்டுமல்லாமல் கார்த்திகை மாதம் முழுவதும் நம் முன்னோர்கள் தீபமேற்றி வழிபட்டனர். ஏன் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி வழிபட்டார்கள்?

கார்த்திகை மாதத்தில் மழைக்காலமும், பனியும் சற்று இணைந்தே குளிருடன் காணப்படும். இதனால் சளி, காய்ச்சல் அதிகமாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இக்காலத்தில் சிறு சிறு பூச்சிகளும், கொசுகளும் உலாவும்.

இதை கட்டுப்படுத்தவே நல்லெண்ணெய், காட்டாமணக்கு, சிற்றாமணக்கு. பசு நெய், வேப்பெண்ணெய் மற்றும் பலவகை மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி வீடெங்கும் தீபமேற்றப்பட்டது.

இதனால் கொசு மற்றும் பூச்சிகள் குறைந்து நோய்களும் கட்டுக்குள் இருக்கும். மேலும் பல்வேறு மூலிகைகளை இந்நாளில் தூபமாக எரிப்பதாலும் பல்வேறு நன்மைகள் விளைகின்றன.

அறிவியல் ரீதியாகவும் கார்த்திகை தீபத்திருநாள் நமக்கு பல நன்மைகளை அள்ளி தருகிறது.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்98குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25அற்புத ஆலயங்கள்21சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சுபகிருது வருட பலன்கள்13குரோதி வருட பலன்கள் 202413ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular