Saturday, July 27, 2024
Homeராசிபலன்ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2024ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-மேஷம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-மேஷம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

எதிலும் புதுமையை புகுத்த விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!!! சந்திரன் 5ம் இடத்தில் இருக்கும் பொழுது இந்த புத்தாண்டு பிறக்கிறது. இதுவரை நீங்கள் பணியிடத்தில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மலமலவென விலகும். பிறரோட சூழ்ச்சியால் நீங்கள் பின்தங்கி இருந்த நிலை மாறும். மறைமுக எதிரிகளால் போடப்பட்டிருந்த முட்டுக்கட்டைகள் முழுமையாக நீங்கி ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்.

உங்கள் திறமை பலரால் பாராட்டப்படும். இந்த சந்தோஷத்தை கொண்டாடுவது தப்பில்லை, அதை தலைக்கணமாக மாற்றாதவரை சகலமும் ஏற்றமாகவே இருக்கும். இடமாற்றம், பதவி உயர்வு எல்லாமே உங்கள் விருப்பம் போல் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரலாம், அது உங்கள் உயர்வுக்காகவே இருக்கும் தவிர்க்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் உறவுகள் இடையே ஒற்றுமை உருவாகி வெல்லமாக இனிக்கும். மனதில் இருந்த இனம் புரியாத பயம் விலகும். தடைப்பட்ட விசேஷங்கள் அடுத்தடுத்து வர ஆரம்பிக்கும். குழந்தைகளின் உடல்நலம் சீராகும். பண வரவு அதிகரிக்கும். இளம் வயதினர் பெற்றோர், பெரியோர் வார்த்தைகளை மதித்தால் சுப தடைகள் நீங்கும். செய்யும் தொழிலில் சேதாரங்கள் குறைந்து ஆதாயங்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இந்த காலகட்டத்தை எதிர்கால சேமிப்புக்கான தொடக்கமாக அமைத்துக் கொள்வது நல்லது. வர்த்தக ஒப்பந்தங்கள், முக்கியமான பத்திரங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். பங்கு வர்த்தகம், சூதாட்டத்தில் இறங்கினால் கைப்பொருளும் கரைந்து விடும் கனவிலும் இறங்காதீர்கள்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

அரசு துறையினருக்கு எதிர்பார்த்த நன்மைகள் தொடர்ச்சியாக கிடைக்கும். உடன் இருப்பவர் உள்ளம் வருந்தும்படி வார்த்தைகளை கொட்டாமல் இருந்தால் மேன்மைகள் நிலைக்கும். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். கூடா நட்பை நம்பி ஆபத்தில் உதவும் நட்பை உதறி விட வேண்டாம்.

8ல் சுக்கிரன்

புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்கிரன் எட்டாம் இடத்தில் இருப்பதால் தன வரவு நன்றாக இருக்கும். மேலும் உங்கள் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சிறுநீர் உபாதைகள் மற்றும் மாதவிடாய் கோளாறு போன்ற பிரச்சனைகள் தலை தூக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் சற்று தடங்களுடன் நடைபெறும். பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை.

11ல் சனிபகவான்

இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் தொடர்வதால், திடீர் யோகம் பணவரவு உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பாதி பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீறிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனை பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தூரத்து சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

8ல் புதன்

புதன் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பிரபலமாவீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

ஜென்ம குரு

வருடப்பிறப்பு முதல் 30.04.2024 வரை குருபகவான் உங்கள் ராசியில் ஜென்ம குருவாக நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலை இருந்து கொண்டே இருக்கும். வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும்.’ நல்ல வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமே’ என்று சில நேரங்களில் புலம்புவீர்கள்.

குருபகவான் 01.05.2024 ம் தேதி முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு விலகி இரண்டாம் வீட்டில் அமர்வதால் சோர்வு. கலைப்பு நீங்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு நீங்கி அமைதி திரும்பும்.தள்ளிப்போன கல்யாணம் , சீமந்தம் நல்ல விதத்தில் முடியும். வங்கிக் கடன் கிடைத்து புது வீடு கட்ட தொடங்குவீர்கள். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்த இடத்தில் வரன் அமையும். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். அனாவசிய செலவுகள் குறையும். அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

12ல் ராகு

இந்த ஆண்டு முழுக்க ராகு 12ல் மறைந்திருப்பதால் மறைமுக ஆதாயம் உண்டாகும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

6ல் கேது

கேது பகவான் வருடம் முடியும் வரை 6ல் அமர்ந்திருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வசதி நிறைந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள்.

பலன் தரும் பரிகரம்

ஒருமுறை திருச்செந்தூர் சென்று ஜெயேந்திரரை வழிபாட்டு வாருங்கள்.இந்த ஆண்டு இனிமையான ஆண்டாக இருக்கும்.

மொத்த பலன் : முற்பகுதி -சுமார் ,பிற்பகுதி -சூப்பர்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular