Monday, June 24, 2024
Homeஜோதிட குறிப்புகள்ஜோதிட ரகசியங்கள் பகுதி -2

ஜோதிட ரகசியங்கள் பகுதி -2

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஜோதிட ரகசியங்கள்

சனிபகவான்

சனியின் லக்னம் மகரம் கும்பத்தில் செவ்வாய் இருந்தாலும் சனி பகவான் இருந்தாலும் (அ) கேதுவுடன் சனி சேர்ந்து இருந்தாலும் வாழ்க்கையில் விஷ்ணு சம்பந்தப்பட்ட கடவுள்கள் குறையை ஏற்படுத்துவார்கள்.

அதில் நின்ற கோலம் (திருப்பதி அமர்ந்த கோலம் (ஐயப்பன்) கிடந்த கோலம் (பெருமாள்) சனி ஆட்சியாக இருப்பவர்கள் இதில் எந்தக் கோலத்தை வணங்கினாலும் சிரமம் ஏற்படும். இவர்கள் வழிபட ஏற்ற தெய்வம் நரசிம்மர் மட்டுமே.

சனி உச்சமாக இருந்தால் திருப்பதி, வெங்கடாஜலபதி

சனி நீசமாக இருந்தால் ஐயப்பன் வழிபாடு சிறந்தது.

சுக்ரன்

சுக்ரன் உச்சமாக இருந்தாலும் நீசமாக இருந்தாலும் மகாலெட்சுமி வழிபாடு உகந்தது அல்ல. 5,11ல் வரும் போது அரிஷ்டதோஷமாக இருந்தாலும் மகாலெட்சுமி வழிபாடு கூடாது. 11ல் சுக்ரன் உள்ளவர்களுக்கு மர்ம உறுப்பில் பிரச்சனை ஏற்படும்.

10ல் சுக்ரன் பாவியாக இருந்தாலும் மகாலெட்சுமி வழிபாடு கூடாது. இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் இந்திராணி. தினமும் நெய் விளக்கேற்றுதல், தீப தூபம் காட்டுதல் பூஜை செய்து வந்தால் கண்டிப்பாக சிரமங்கள் குறையும்.

மிகவும் கஷ்டப்படும் பொழுது விநாயகர் கோயிலுள்ள பிராமணரிடம் நவதானியம் தேங்காய் முதலியவைகளை விநாயகருக்கு நல்லெண்ணை தீபமேற்றி அருகம்புல் மாலை சாற்றி தானம் கொடுத்து விட வேண்டும்.

ஜோதிட ரகசியங்கள்

குருபகவான்

குரு பகவான் நீசமாக இருந்தாலும் உச்சமாக இருந்தாலும், 10ல் இருந்தாலும் பதவி நாசம், தொழில் நாசம் ஏற்படும்.

8மிடத்திலும் குரு இருக்கக் கூடாது. சந்திரன் வீடுகளில் குரு இருந்தாலும் மகர ராசியில் குரு இருந்தாலும் கஷ்டத்தைக் கொடுப்பார்.

தொழிலில் பின் தங்கிய நிலை அகோரமான கஷ்டம், தினசரி சோதனைகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்கு பிரம்மா வழிபாடு மிகவும் சிறந்தது.

பிரம்மாவிற்கு நெய் தீபம் ஏற்றி மூன்று நெய்தீபம் , மூன்று தேங்காய்களை மாலையாக போடுவது உத்தமம். வியாழக்கிழமை தோறும் மூன்று நபர்களுக்கு அன்னதானம். ஆனால் தயிர்சாதம் கொடுக்கக் கூடாது.

புதன்

புதன் பகவான் நீசமாக இருந்தால் புதன் திசை வரும் போது புதன் புத்தி வரும் போது நரம்பு மண்டலங்களில் ஏதாவது ஒரு பிரச்சனையைக் கொடுப்பார் (அல்லது)விவாஹம் நடைபெறாமல் நின்று விடும். குழந்தை பிராப்தி இருக்காது. இதுவே கணவன் விசாகம் நட்சத்திரத்தில் இருந்தால் கடுமையான நோய்க்கு ஆளாக்கப்பட்டு வைத்திய செலவு ஏற்படும்.

புதன் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களான ஆயில்யம். கேட்டை, ரேவதி இவைகளில் மனைவி இருந்து கணவனுக்கு புதன் நீசமாக இருந்தால் சொத்துக்களில் வில்லங்கம் ஏற்பட்டு கோர்ட், கேஸ் என அலைந்து கொண்டு இருப்பார்கள்.

இதற்கு பரிகாரம் மீனாட்சியம்மன் கோவிலில் அடுத்த சாம பூஜையின் போது சிவப்பு தாமரைப் பூ கொடுத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் மகாசியாமளா தேவி வழிபாடு சிறந்தது.

சூரிய பகவான்

சூரியன் துலாத்தில் நீசம் மேஷத்தில் உச்சமாக கணவன் மனைவி ஜாதகம் அமைந்தால் இருவரிடையே மிகுந்த அன்பு இருந்தாலும் ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருப்பது போல இருக்கும்.சூரியன் ஆத்மகாரகனாக இருந்தாலும் சந்திரனின் நட்சத்திரங்களில் உள்ளவர்கள் மனைவியாக அமைந்தால் வாழ்க்கை வளர்பிறையில் சந்தோஷமாகவும், தேய்பிறையில் கஷ்டமாகவும் இருக்கும்.

மைத்துனர்,மாமனார் யாராலும் எந்த உதவியும் கிடைக்காது. மனோநிலையில் மிகுந்த குழப்பமும், மூத்த வாரிசுகளால் கவலையும், தாய் தகப்பன் மரணம் சரியில்லாமலும் இருக்கும். தினமும் சிவ பூஜையும் ,தீபம் ஏற்றுதலும் செய்து வந்தால் கண்டிப்பாக பிரச்சனைகள் குறையும். அல்லது செப்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து முகம் பார்த்து தண்ணீரை அரசு (அல்லது)வில்வ மரத்திற்கு ஊற்றிவிட்டு செப்பு பாத்திரத்தை பிராமணருக்கு கொடுத்து விட வேண்டும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்521அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்98குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25அற்புத ஆலயங்கள்21சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சுபகிருது வருட பலன்கள்13குரோதி வருட பலன்கள் 202413ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular