Free Astrology Consultation| இலவச ஜாதக பலன்
வாசகர்கள் ஜாதக சம்மந்தமான கேள்விகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
கேள்விக்கான காணிக்கை தொகை ரூ.51/- ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு அல்லது GPAY-PHONEPE மூலமாக செலுத்தலாம்.
கேள்விக்கான பதில்கள் உங்கள் வாட்ஸ் அப் எண் அல்லது ஈமெயில் மூலம் கிடைக்கும்.
தொகையை செலுத்திய அன்பர்கள் அதற்கான ஆவணத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிய படுத்தவும்
வாட்ஸ்ஆப் எண் /Whatsapp Number : 09362555266
பணம் செலுத்தும் விவரம்
Google Pay -9789364952
Phone Pe -9789364952
UPI ID : singurajasiva@oksbi
வங்கி கணக்கு விவரம்
Account Number: 31592965214
Name : S.SIVA
BANK:STATE BANK OF INDIA
IFSC CODE : SBIN0007583
கேள்வி : விவாகரத்து கிடைக்குமா? மறுமணம் எப்போது நடக்கும்? ,Ramanathan,Tirunelveli
பதில் : மகர லக்கினம் மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 31.08.2023 வரை சனி தசை உள்ளது,தற்போது சனி தசையில் குரு புத்தி நடந்து வ்ருகிறது 7ம் அதிபதி சந்திரன் உடன் சூரியன் கேது சம்மந்த பட்டு இருப்பதுடன் ,8ல் சுக்ரன் செவ்வாய் இருப்பதும் ஒரு மோசமான கிரக அமைப்பு ,31.08.2023 க்கு பிறகு ஒரு நல்ல வழி பிறக்கும்,ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதன் கிழமையில் புதன் ஓரையில் சென்று வாருங்கள். மாற்றம் நிகழும்.
கேள்வி : திருமணம் எப்போது நடக்கும்..திருமணம் பின் வாழ்க்கை எப்படி இருக்கும்.கடக லக்னம்… 6ல் சந்திரன் செவ்வாய் கேது சேர்க்கை….ராகு 12ல் …..now ராகு திசை நடக்குது.விஜி ,பட்டுக்கோட்டை
பதில் : கடக லக்கினம் ,தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ராகு தசா ராகு புத்தி நடந்து வருகிறது. லக்கினாதிபதி சந்திரனுடன் செவ்வாய் கேது சம்மந்தபட்டு 6இல் இருப்பது ஒரு மோசமான அமைப்பு. தசாநாதன் 12-ல் வலுவாக இருப்பதால் 18.09.2025 க்குள் திருமணம் நிகழும்.வெளிநாட்டில் வசிக்கும் மாப்பிளை வ்ருவதற்கு வாய்ப்பு உண்டு அல்லது திருமணத்திற்கு பின் வெளிநாடு செல்லலாம்.பொதுவாக கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை மிக யோக பலன்களையே வழங்கும்.ஒருமுறை ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள்.
கேள்வி : எப்போது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லலாம்?,மோகன் ராஜ் ,தூத்துக்குடி
பதில் : 28.01.2024 க்கு பிறகு சொந்த நாட்டுக்கு விடுப்பில் சென்று வரலாம்.
கேள்வி : வெளிநாடு வந்து விட்டேன் 5 மாதமாக வேலை இல்லை குடும்பமும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர் இந்த நிலை எப்போது மாறும்,விஜயகுமார்,கோயம்புத்தூர்
பதில் : கன்னி லக்னம் மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது கோச்சார கிரக நிலைகள் சரியாக இருந்தாலும்,12 ராகு சனி இருப்பது வெளிநாட்டு வேலையில் ஒரு தொல்லை தரும் அமைப்பு.மேலும் உங்களுக்கு நடப்பு தசா கேது தசாவாக இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இந்த காலகட்டம் உள்ளது. வாழ்க்கையில் வெறுமை, சோகம், கவலை, ஏமாற்றம் இது போன்று பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நீங்கள் உள்ளீர்கள். முடிந்த வரையில் எந்த ஒரு காரியத்திலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்படுங்கள். சங்கடகர சதுர்த்தி தோறும் விநாயகரை வழிபட்டு வாருங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல மாற்றம் வரும்.
கேள்வி : கடந்த மூன்று மாத காலமாக காவல்துறையில் பணியிடை நீக்கத்தில் உள்ளேன் தற்பொழுது உள்ள இந்த பிரச்சனை எப்பொழுது எனக்கு முடிவுக்கு வரும்அவ்வாறு முடிவுக்கு வந்த பின்பு எத்திசையில் பணியிட மாற்றம் நிகழும்.Shanmugavel.r,Anuppapatty
பதில் : விருச்சிக லக்கனம் துலாம் ராசியில் பிறந்துள்ள நீங்கள் பிறக்கும் பொழுதே உங்கள் லக்னம் புதாத்திய யோகத்தில் அமைந்துள்ளது. மேலும் உங்கள் லக்னத்திற்கு 2-ல் சனிபகவானும் சுக்கிரனும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும். தற்போது நடப்பு தசாவான புதன் தசா உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை தராது. ஏனென்றால் புதன் விருச்சிக லக்னத்திற்கு பாபர் என்ற முறையில் சில தொல்லைகளை தருவார். மேலும் இந்த காலகட்டத்தில் அளவுக்கதிகமான கோபங்கள் தலை தூக்கும். முடிந்த அளவு கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லா வகையிலும் பொறுமையுடன் செயல்பட்டால் உங்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தற்போது நடைபெற்று இருக்கின்ற குரு பெயர்ச்சியும், வருகின்ற ராகு கேது பெயர்ச்சியும் உங்கள் ராசிக்கு மிகப்பெரிய யோகத்தை வழங்கும். உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று விநாயகருக்கும், செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கும் நெய் விளக்கு வைத்து வர சகல துறைகளிலும் தடைகள் விலகி மேலும் நன்மை நடக்கும்.
கேள்வி : திருமணம் எப்போது கை கூடும். மணிகண்டன் ,பெரம்பலூர்
பதில் : 03.11.2023 க்கு பிறகு திருமண முயற்சிகள் கைகொடுக்கும்.கடினமான தேடலுக்கு பின் தான் மண வாழ்க்கை அமையும்.மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
கேள்வி : 1தொழில் தொடங்கலாமா 2.வயது ஆகிவிட்டது திருமணம் எப்போது 3.பணம் பிரச்சனை இருக்கின்றது எப்போது சரி ஆகும்.4.நல்ல காலம் வருமா,கணேசன் ,புதுக்கோட்டை
பதில் : விருச்சிக லக்னம் கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு மாரகாதிபதியான சுக்கிரனின் திசை முடிந்து தற்போது சூரிய திசை ஆரம்பித்துள்ளது. கடந்த காலங்களில் அதிகப்படியான மன உளைச்சல், வேதனை, ஏன் வாழ்கிறோம் என்கின்ற குழப்பம் என அதிகப்படியான இன்னல்களை சந்தித்து வந்திருப்பீர்கள். தற்போது கூட அந்த இன்னல்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது நடைபெறும் சூரிய தசா ராகு புத்தி 29.07.2023 வரை உள்ளது. நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இந்த காலகட்டம் உள்ளது. புதிய தொழில் தொடங்குவது இப்போது வேண்டாம். மேலும் உங்களது கோச்சார கிரக நிலைகளும் சரி இல்லாமல் இருப்பதால் புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. 29. 7. 2023 க்கு பிறகு திருமணம் முயற்சிகள் கைகூடிவரும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்து இருப்பதாலும் கேதுவின் சாரம் பெற்று சூரியன் தசையை நடத்துவதாலும் திருமண முயற்சிகள் சற்று தடைக்குப் பின் தான் நடைபெறும். ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வேளையில் கும்பகோணம் அருகில் இருக்கும் சூரியனார் கோவிலுக்கு சென்று நவகிரகங்களுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள் மாற்றம் கிட்டும்
கேள்வி : அரசு வேலை எப்போது கிடைக்கும் ,சிவநந்தினி ,கடலூர்
பதில் : மேஷ லக்னம் மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது மாரகாதிபதியான சுக்கிரனின் தசை நடைபெற்ற வருகிறது. சுக்கிரன் 12ல் உச்சம் பெற்ற தசையை நடத்துவதால் உங்களுக்கு பாதிப்புகள் சற்று குறைவாக தான் இருக்கும். ஏனென்றால் உங்கள் ஜாதகத்துக்கு சுக்கிரன் மறைவது நல்லது. மேலும் 26.5.2023 வரை சுக்கிர திசை இருப்பில் உள்ளது. அதுவரை மிக கவனமுடன் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள தேதிக்குப் பிறகு வருகின்ற சூரிய தசையில் அரசு சார்ந்த முயற்சிகள் கைகொடுக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்து வாருங்கள் நிச்சயம் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
கேள்வி : என் ஜாதகம் இந்த பையன் ஜாதகம் பொருத்தம் இருக்கா வீட்டில் ஜாதகம் பார்த்து எங்களை சேர்க்க வாய்ப்பு உண்டா…..நாங்க திருமணம் பன்னலாமா….சேர்ந்தால் after mrg பிரிவினை வருமா
பதில் : உங்கள் இருவர் ஜாதகதத்திலும் நட்சத்திர பொருத்தம் நன்றாக உள்ளது.திருமணம் செய்யலாம்.
கேள்வி : திருமணம் எப்போது நடக்கும் ? திருமண தடை பரிகாரம் ,ஜெயலட்சுமி,விருதுநகர்.
பதில் : மேஷ லக்கினம் ,தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 28.02.2024க்கு பிறகு திருமண வாய்ப்புகள் கூடிவரும்.செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் மலைமேல் இருக்கும் முருகனை வழிபட்டுவாருங்கள்.நல்லது நடக்கும்.
கேள்வி : நல்லா வேலை எப்போ கிடைக்கும்? அரசு வேலை வாய்ப்பு உள்ளதா?,செல்லபாண்டியன்,விருதுநகர்.
பதில் : 13.01.2025 க்குள் ஒரு நல்ல வேலை அமையும்.அரசு வேலை மிக கடின முயற்சிக்கு பின் தான் கிடைக்கும்.தனியார் துறையில் மிக பெரிய பொறுப்புடன் கூடிய வேலை கிடைக்கும்.
கேள்வி : திருமணம் எப்போது நடக்கும் ? தர்மலிங்கம் ,திருப்பூர்

பதில் : கடக லக்கினம் ,மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது ராகு தசாவில் குரு புத்தி நடைபெற்று வருகிறது.29.09.2023 க்குள் ஒரு நல்ல வரன் வருவதற்காண வாய்ப்புகள் அதிகம்.மேலும் 7ம் அதிபதி சனி பகவான் அவரின் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருப்பதால்.29.09.2023 க்கு பிறகு வரும் சனி புத்தியில் நிச்சயம் திருமணம் நடைபெறும்.ஒருமுறை திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள்.நல்ல வரன் நீங்கள் நினைத்தபடி அமையும்.மேலும் நவாம்ச லக்கினத்தில் ராகு இருப்பதால் நிச்சயம் திருநாகேஸ்வரம் சென்று வரவேண்டும்.மிக பெரிய வாய்ப்பு வரும் காலகட்டம் பயன் படுத்தி கொள்ளவும்.
கேள்வி : காதல் திருமணம் அமையுமா? கலப்பு திருமணமா?,குருமூர்த்தி ,திருப்பூர்

பதில் : மேஷ லக்கினம் கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சூரிய தசாவில் செவ்வாய் புத்தி நடைபெற்று வருகிறது.லக்கினாதிபதி செவ்வாய் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் அமர்ந்து புத்தியை நடத்துகிறார்.31.08.2024 க்கு பிறகு காதல் திருமணம் அமைய வாய்ப்புகள் அதிகம்.திருமணத்தை செயல் படுத்தும் போது மிகுந்த கவனம் தேவை.மிக அற்புதமான ஜாதக அமைப்பு உங்களுக்கு..தவறான செயல்பாடுகள் மூலமாக உங்கள் வாழக்கையை கெடுத்து கொள்ள வேண்டாம்.சிந்தித்து செயல்படுங்கள்.
கேள்வி : நான் ஒருவரை விரும்புகின்றேன் திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன். திருமணம் செய்து கொள்ள ஏதாச்சும் வழி உள்ளதா ? அதற்க்கு பரிகாரம் எதாவது இருந்தால் சொல்லுங்கள்

பதில் : துலாம் லக்கினம் மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபரை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.அதற்க்கு ஜாதக ரீதியாக எவ்வித தடையும் கிடையாது.ஆனால் உங்கள் ஜாதகத்தில் 4ல் இருக்கும் சந்திரன் கேது இணைவு/7இல் இருக்கும் செவ்வாய் குரு சனி இணைவு காதலுக்கு இடையூறாக இருக்கலாம்.மனக்குழப்பம் ,சந்தேகம்,பயம் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து தொல்லை தரும்.காதல் விஷயத்தில் மிக கவனமுடன் செயல் பட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதே எனது கருத்து.இதற்க்கு எவ்வித பரிகாரமும் இல்லை.
கேள்வி : நான் விவாகரத்து பெற்றவள். எனக்கு இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா, அந்த திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.

பதில் : கடவுளே துணை ! மகர லக்கினம் சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசையில் கேது புத்தி நடைபெற்று வருகிறது.உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு நன்மை செய்யும் அத்துணை கிரகங்களும் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளது.நீங்கள் கும்பகோணம் அருகில் இருக்கும் அனைத்து நவக்கிர தலங்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வரவும்.பின்பு அந்த இறைவன் உங்களுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்தி தருவார்.
கேள்வி : வேலை எப்படி இருக்கும் ? நாகர்ஜுன் ,பரமகுடி

பதில் : கும்ப லக்கினம் விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசா குரு புத்தி நடை பெற்று வருகிறது (31.10.2025) வரை.உங்களுக்கு இந்த சுக்கிர தசா ராஜ யோக பலன்களை அளிக்கும் .அரசு வேலை தவிர்த்து,தனியார் துறை ,வெளிநாடு வேலை போன்றவைகளுக்கு முயற்சி செய்யுங்கள் 30.12.2032 வரை மிக யோக மான காலக்கட்டம் .இந்த நேரத்தை பயன்படுத்தி வாழக்கையில் முன்னேறிவிடுங்கள்.ஒரு முறை திருக்கஞ்சனூர் சென்று அங்குள்ள சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வரவும் .பிறகு என்ன யோகம்தான்.பரிகாரத்தை தவறாமல் செய்யவும்.வாழ்க வளமுடன் !
கேள்வி : எனக்கு கணவர் எப்படிப்பட்டவராக அமைவார் .திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,பெயர் வெளியிட விரும்பாத வாசகி ,மதுரை

பதில் : விருச்சிக லக்கினம் மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசாவில் புதன் புத்தி(25.05.2025)வரை நடைபெற்று வருகிறது.இந்த புதன் புத்தி முடிவதற்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நன்று.மேலும் உங்கள் ஜாதகத்தில் 2ம் பாவத்தில் செவ்வாய் கேது சேர்க்கை இருப்பதாலும் 7ம் இடத்தில் சூரியன் ,சனி ,குரு ,புதன் ஆகிய கிரகங்கள் இருப்பதாலும் உங்கள் வருங்கால கணவரின் ஜாதகத்தை ஆராய்ந்து அதன் பின்னரே முடிவு எடுக்க வேண்டும்.25.07.2026 வரை சற்று கடினமான காலகட்டம்.எடுக்கும் முடிவுகளில் மிகுந்த எச்சரிக்கை தேவை.சற்று சறுக்கினாலும் பாதாளம்தான் …மிக கவனம்.வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள நவகிரகங்களை வழிபாட்டு வாருங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும்.
கேள்வி : Eppoluthu financial problems solve agum. Foreign chance iruka Eppo & Enga settle aven?,Saravanan ,Karaikkudi

பதில் : கும்ப லக்கினம் ,மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசா வில் ராகு புத்தி நடைபெற்று வ்ருகிறது.இந்த காலகட்டத்தில் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்யலாம்.மேலும் கோச்சார ரீதியில் உங்களுக்கு 71/2 சனி தொடங்கி உள்ளதால் அதுவும் விரய சனி என்பதால் அதிக பணம் செலுத்தி வெளி நாடு செல்ல வேண்டாம்.மேலும் ஆடம்பர தேவைக்கு பணம் வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும்.மேலும் வரும் ராகு கேது பெயர்ச்சியில் உங்கள் ராசியிலேயே ராகு பகவான் ஜென்ம ராகுவாக சஞ்சரிக்க இருப்பதால் மிகுந்த கவனத்துடன் செயல் படுவது நல்லது.தற்போது கடன் தொல்லைகள் குறையாது.சிந்தித்து செயல்படுங்கள்.
கேள்வி : வருங்கால மனைவி பற்றி ?

பதில் :
வரும் மனைவி இளமையான தோற்றம் உடையவள்.சுறுசுறுப்பானவர்,சொந்தக்காரியாகவோ அல்லது சொந்த ஊர்காரியாகவோ அல்லது சொந்த பந்தங்கள் வசிக்கும் ஊர்க்காரியாகவோ இருப்பாள்.சரியான உடல் பொருத்தமுள்ள மனைவியாக இருப்பாள்.உஷ்ண தேகம் உடையவளாகவும் இருப்பாள் மனைவி பிறந்த ஊர் நீங்கள் பிறந்த ஊருக்கு கிழக்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும். திருமணத்திற்கு பின் மனைவி எப்பொழுதும் தன் கணவர் வீட்டில் இருப்பதையே விரும்புவர். தன் பிறந்த வீட்டிற்கு செல்வதை விரும்ப மாட்டார்.மனைவி ஒருபோதும் உங்களை விட்டு பிரிய மாட்டாள். மனைவி இருக்கும் வீடு அதிக வெளிச்சம் உள்ள வீடாக இருக்கும்.
கேள்வி : நான் 12 படிப்பு முடித்துள்ளேன் எனக்கு படிப்பை தொடர வாய்ப்பு உள்ளதா இந்த வருடம் . அப்படி படித்தால் நான் என்ன படிக்கலாம் எனக்கு வருங்காலத்தில் பிசினஸா இல்லை வேலையா? V. Arunjunai,மதுரை

பதில்: கும்ப லக்கினம் தனுசு ராசியில் பிறந்துள்ளீர்கள்.மறைந்த புதன் நிறைந்த கல்வியை தரும் என்பது ஜோதிட விதி.மேலும் லக்கினாதிபதியுடன் சேர்ந்து மறைத்திருப்பதுதான் சற்று கவனத்தில் கொள்ள வேண்டும்.சூரியன் மற்றும் செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருப்பதால் அரசு வலு சேர்க்கும் கல்வியை பயிலலாம்.காவல் துறை ,பாதுகாப்பு துறை,அஞ்சல் துறை,மேலும் உங்கள் ஜாதகத்தில் சந்திரன் வர்கோத்தமம் அடைந்துள்ளதால் நிச்சயம் அரசு உயர் பதவி கிடைக்கும்.கடின முயற்சி தேவை .சொந்த தொழில் அவ்வளவு சிறப்பாக இருக்காது.