இன்றைய ராசிபலன் -05.07.2024

இன்றைய ராசிபலன்

மேஷம்

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். லாபம் பெருகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

ரிஷபம்

உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவு அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.

இன்றைய ராசிபலன்

மிதுனம்

பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி கூடும்.

கடகம்

உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையால் மனநிம்மதி குறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்ய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

சிம்மம்

இன்றைய ராசிபலன்

உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்

துலாம்

வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

இன்றைய ராசிபலன்

தனுசு

நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மகரம்

உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

மீனம்

நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் கடன்கள் குறையும்.

கடன் பிரச்சினை தீர்க்கும் சக்தி வாய்ந்த பரிகாரம் !

கடன் பிரச்சினை

வரக்கூடிய வருமானத்தை வைத்து கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எப்படியாவது திருப்பி கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் கைநீட்டி கடன் வாங்குகின்றோம். கிரெடிட் கார்டில் தேவையேபடாத பொருட்களைகூட வாங்கி குவிக்கின்றோம். ஆனால் ஏதோ ஒரு கெட்ட நேரத்தால் மாதம் மாதம் வந்திருந்த வருமானம்கூட இல்லாமல் போகின்றது.

குடும்ப செலவுக்கு வருமானம் போதாத நிலைமை வந்துவிடும். பிறகு கடனை எப்படி திருப்பிதருவது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி குடும்ப பாரத்தை சுமந்து பண பிரச்சினையில் சிக்கிவிடுகின்றோம். வாங்கிய கடனுக்கு வட்டிக்குமேல் வட்டி குட்டி போட்டு வளர்ந்து நிற்கும். இந்த சுடன் பிரச்சினையில் இருந்து எல்லாம் தப்பிக்க வேண்டும் என்றால் வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்யவேண்டும்.

கடன் பிரச்சினை

பணத்தை சேமித்து வைத்துவிட்டு தேவையான பொருட்களை வாங்கவேண்டும் பேராசைப்படக்கூடாது. இதுதான் முதல் வழி சரி கைநீட்டி கடன் வாங்கியாச்சு. தலைக்குமேல் வெள்ளம் போகிறது வாங்கிய கடனை எல்லாம் திருப்பி தர முடியவில்லை என்பவர்கள் ஆன்மிகம் ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம்.

பொதுவாகவே கடன் பிரச்சினைக்கு காரணமாக இருப்பது செவ்வாய் பகவான்தான் ஆகவே இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையன்று செய்யவேண்டும். இந்த பரிகாரம் செய்ய கருஞ்சீரகம் நமக்குத் தேவை. மளிகை கடைகள், நாட்டு மருந்து கடைகளில் இது கிடைக்கும். வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.செவ்வாய்க்கிழமை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, உங்க வீட்டு

பக்கத்தில் இருக்கும் ஓடுகின்ற ஆறு நதி அல்லது சமுத்திரம் எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் இப்போது ஆங்காங்கே மழை பெய்து எல்லா இடத்திலும் தண்ணீர் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது ஆகவே இந்த நேரத்தில், இந்த பரிகாரத்தை செய்ய எந்த கஷ்டமும் இருக்காது

செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியிலிருந்து 700 மணிக்குள் அந்த ஓடுகின்ற நதிக்கரையில் நின்றுகொண்டு ஒரு கைப்பிடி அளவு கருஞ்சீரகத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு, உங்களுடைய தலையை வளம் இருந்து இடமாக ஆறு முறை சுற்றவேண்டும் கருஞ்சீரகத்தை கையில் வைத்துக்கொண்டு இன்றோடு என்னுடைய கடன் சுமை காணாமல் போகவேண்டும் என்று பிரார்த்தனை வைத்து முருகப்பெருமானை வேண்டி, குலதெய்வத்தை வேண்டி அந்த கருஞ்சீரகத்தை அப்படியே ஓடுகின்ற தண்ணீரில் போட்டுவிடுங்கள்.

கடன் பிரச்சினை

இவ்வளவுதான் பரிகாரம் ஆறு வாரம் செவ்வாய்க்கிழமை, தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்துவந்தால், உங்கள் கடன் சுமை படிப்படியாக குறை வதை உணருவீர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் வரக்கூடிய செவ்வாய் ஓரை நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிடுங்கள் மாலை வரக்கூடிய செவ்வாய் ஹோரை நேரத்தில் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று 2 மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு, கடன் இல்லாத வாழ்க்கையை கொடு முருகா என்று வேண்டுதல் வைக்கவேண்டும்.

செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியிலிருந்து 9.00 மணிக்குள் முருகனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்துவிட்டு இந்த விளக்கை முருகன் கோவிலில் ஏற்றி, முருகனை ஆறு முறை வலம் வரவேண்டும் இந்த இரண்டு பரிகாரத்தையும் சேர்த்தபடி தொடர்ந்து ஆறு வாரம் செய்துவந்தால் உங்கள் கடன் கஷ்டம் குறையும் என்பது நம்பிக்கை தேவைப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்:

இன்றைய ராசிபலன் -02.07.2024

இன்றைய ராசிபலன்

மேஷம்

வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரலாம். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும்.

ரிஷபம்

நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

இன்றைய ராசிபலன்

மிதுனம்

உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கடகம்

குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் புதிய நபர் அறிமுகத்தால் லாபகரமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

சிம்மம்

இன்றைய ராசிபலன்

நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளிவட்டார நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

கன்னி

உங்கள் ராசிக்கு பகல் 11.54 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு நல்ல காரியத்திலும் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்பட்டால் பிரச்சினைகள் குறையும்.

துலாம்

நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். பகல் 11.54 மணிக்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

இன்றைய ராசிபலன்

தனுசு

உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும்.

மகரம்

செய்யும் செயல்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.

கும்பம்

குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் வகையில் நிம்மதி குறைவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சலும் பணவிரையங்களும் உண்டாகும். விருப்பங்கள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.

மீனம்

உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

இன்றைய ராசிபலன் -01.07.2024

இன்றைய ராசிபலன்

மேஷம்

உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

ரிஷபம்

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

இன்றைய ராசிபலன்

மிதுனம்

குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

கடகம்

இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்றைய ராசிபலன்

நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.

கன்னி

நீங்கள் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

துலாம்

உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.

விருச்சிகம்

உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

இன்றைய ராசிபலன்

தனுசு

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகரம்

உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.

கும்பம்

நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மீனம்

பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள்.

குபேர வாழ்வு தரும் அரச இலை வழிபாடு !!

அரச இலை வழிபாடு

16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அத்தனை பெரிய புண்ணியம் செய்து பெறவேண்டிய இந்த பலனை இந்த ஒரு தீபம் ஏற்றும் போது நம்மால் பெற முடியும் என்று ஆன்மிகம் சொல்கிறது.

இந்த தீபத்தை நாம் சனிக்கிழமையில் தான் ஏற்ற வேண்டும். சனிக்கிழமை காலை முதல் மாலை வரை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இந்த விளக்கை அரச மரத்தின் இலை மீது வைத்து தான் ஏற்ற வேண்டும். அந்த இலையை நாம் சனிக்கிழமையில் தான் பறிக்க வேண்டும். முதல் நாளே பறித்து வைக்கக் கூடாது. அது மட்டுமின்றி மாலை 6 மணிக்கு மேல் மரத்திலிருந்து இலைகளை பறிக்கக் கூடாது.

 அரச இலை வழிபாடு

சனிக்கிழமை அன்று காலை எழுந்து குளித்து முடித்த பிறகு அரச மர இலை ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு சில்வர் தவிர வேறு எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தத் தட்டில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு இந்த இலைக்கும் மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து தட்டில் வைத்து விடுங்கள்.

இப்போது தட்டில் இருக்கும் இலையின் மீது ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள்.விளக்கிற்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து போட்டு இலுப்பை எண்ணெய் ஊற்றி வீட்டில் சிவன், விஷ்ணு, பிரம்மா, மகாலட்சுமி தாயார் இவர்களின் யாரேனும் ஒருவர் படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

இந்த தீபத்தை நீங்கள் அரச மரத்தின் அடியில் ஏற்று வைத்து ஏற்றினால் இன்னும் விசேஷம். முடியாதவர்கள் மட்டும் வீட்டில் பூஜை அறையில் இதை செய்யலாம். இந்த தீபத்தை சனிக்கிழமை அன்று ஏற்றத் தொடங்கிய தொடர்ச்சியாக 16 சனிக்கிழமை ஏற்ற வேண்டும்.

 அரச இலை வழிபாடு

இப்படி ஏற்றி வரும் நாளில் உங்கள் துன்பமெல்லாம் விலகி நீங்கள் எதிர்பாக்காத வகையில் உங்கள் வாழ்க்கைத் தர முயற்சி நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்வீர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த அரச மரமானது இருக்கும் விருட்சங்களின் எல்லா தலையாய விருச்சமாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்கள் குடி கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது.

உலகத்தில் அனைத்திற்கும் மூலகாரணம் இவர்கள் மூவரும் தான். இவர்கள் மூவரையும் ஒரே நேரத்தில் வணங்கும் பொழுது இவர்களின் ஆசி பெற்ற குபேரர், மகாலட்சுமி தாயார், சரஸ்வதி தேவி, தேவர்கள், கிரகங்கள் என அனைவருமே உங்களுக்கு அருள் புரிவார்கள் என்று சொல்லப்படுகிறது.

சனிக்கிழமைகளில் ஏற்றப்படும் இந்த ஒரு தீபம் உங்கள் வாழ்க்கையில் பதினாறு வகை செல்வங்களையும் பெற்று வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்த குபேரர் என்ற பெரும் வாழ்க்கையை வாழ துணை செய்யும். இந்த தீபத்தை நம்பிக்கையுடன் ஏற்றி வாழ்க்கையில் சகல சம்பத்துகளையும் பெற்று நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்ளலாம்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரம்(29.06.2024 முதல் 15.12.2024)

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரம் -2024

மேஷம்

சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யப்போகும் சனி பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த தனலாபத்தை கொடுப்பார். பங்குச்சந்தை முதலீடுகள் மிகுந்த லாபத்தை கொடுக்கும். தங்கம், வெள்ளி வாங்கும் முயற்சிகள் பலிதமாகும். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள் மற்றும் முதலீடுகளை செய்ய ஏற்ற காலம் இது.

பெண்களுக்கு இது மிகுந்த நல்ல காலமாகும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கூடிவரும். சனி தொடர்ந்து ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் சின்ன சின்ன ஆரோக்கிய குறைபாடுகள் வந்து விலகும். மற்றபடி பொருளாதாரம், சமூக அந்தஸ்து ஆகியவற்றில் நல்ல நிலையை காணப்படுகிறது.

குருபகவானும் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுப நிகழ்ச்சிகள் களைகட்டும்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் :சனிக்கிழமையில் பசும்பால் அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபட்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்

ரிஷபம்

ராசிக்கு 10ம் இடத்தில் நிகழும் இந்த சனிபகவானின் வக்ர கதி ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்பலனையே மிகுதியாக வழங்கும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். இதுவரை அலுவலக ரீதியாக இருந்து வந்த குழப்பங்கள் விலகும். தெளிவு பிறக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் நிகழ வாய்ப்புண்டு.

உங்களை மட்டம் தட்டிய அதிகாரி மாறி போவார். புதிய அதிகாரி உங்கள் திறமைக்கு ஏற்ப மரியாதை தருவார். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். வீட்டில் உள்ளவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். சிலர் வீடு, மனை வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனாவசிய செலவுகள் குறையும்.

ராசியிலேயே குருபகவான் சஞ்சரிப்பதால் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். புதிய நகைகள் வாங்கும் யோகம் வாய்க்கும். வண்டி, வாகனங்கள் மாற்றவும் ஏற்ற காலமாக திகழும். குறிப்பாக ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு மிகுந்த நற்பலன்கள் உண்டாகும்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : தட்சிணாமூர்த்திக்கு மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்ய உடல் நலம் மேம்படும்.

மிதுனம்

இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கடந்த 9 வருடங்களாக இழுபறியாக இருந்து வந்த சிக்கல் ஒன்றுக்கு தீர்வு கிடைக்கும். பொருளாதார அளவில் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள்.

வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரும் வாய்ப்பு உண்டு. புதிய மனிதர்களின் சந்திப்பால் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் இருக்கும் ராகு பகவான் உங்களை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அலுவலகம் ரீதியாகவும் நற்பலன்கள் அதிகரிக்கும் என்றாலும், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : அர்த்தநாரீஸ்வரருக்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய மனதில் இருக்கும் பயம் விலகி நிம்மதி பிறக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஓரளவு நல்ல பலன்களை தந்தாலும், தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். குறிப்பாக ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு வீண் மனக்கவலைகள் வந்து போகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது நல்லது. தேவையில்லாத பழைய விஷயங்களை பேசி பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்.

குடும்பம் தொடர்பான பிரச்சனைகளில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

பணவரவு போதுமான அளவு இருக்கும் என்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். எனவே செய்யும் செலவுகளை சுபச் செலவுகளாக மாற்றிக்கொள்ள பாருங்கள். குறுக்கு வழியில் செல்வதை விட்டுவிட்டு நேர்மையாக உழைக்க முயலுங்கள். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : சிதம்பரம் நடராஜருக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்ய உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் விலகி நன்மை நடக்கும்.

சிம்மம்

இந்த 140 நாட்களும் பல்வேறு மாற்றங்களை தரப்போகும் காலமாக அமையும். குடும்பத்தில் தேவையற்ற சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பொருளாதார நிலையில் மிகுந்த கவனம் தேவை. புதிய கடன்கள் வாங்கும் முன் நன்கு ஆலோசித்து செயல்படுவது அவசியம். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும் என்றாலும் பயணத்தின் போது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும் என்றாலும், போட்டிகளும் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : நரசிம்மரை நான்கு வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வழிபட்டு வர உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கும்.

கன்னி

சனிபகவானின் இந்த வக்கிர சஞ்சாரம் உங்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்க இருக்கிறது. இதுவரை இழுபறியாக இருந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். பணம் பல வழிகளிலும் வரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பழைய கடன் ஒன்றைப் பைசல் செய்வீர்கள்.

புதிய வேலை, வியாபாரம் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் அன்பும், அமைதியும் நிறைந்திருக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நிச்சயமாகும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். அலுவலக ரீதியாகவும் நல்ல பெயர், புகழ் உண்டாகும். வேலையில் இருந்த சிக்கல்கள் தீரும்.

குருபகவானின் பார்வை ராசிக்கு கிடைப்பதால், மலைபோல் வரும் பிரச்சினைகளும் பனி போல் விலகும். பெண்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் நற்பலன்களை கொடுக்கும்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வர சகல நன்மைகளும் உண்டாகும்.

துலாம்

பூர்வ புண்ணிய பலன்கள் அதிகரிக்கும் காலம் இது. பொருளாதாரம் சிறப்பாக காணப்படும். புதிய கடன் முயற்சிகள் வெற்றியாகும். பழைய கடன்களை அடைக்கவும் வாய்ப்பு பிறக்கும். அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குறிப்பாக சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு மிகுந்த நற்பலன்கள் உண்டாகும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இதுவரை ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து வெளிவரும் அளவுக்கு பணவரவு உண்டாகும்.

பிள்ளைகள் வகையில் அனுகூலம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் குழந்தைபேறு போன்ற சுப நிகழ்வுகள் உண்டாகும் என்றாலும், சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம். புதிய நண்பர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். சிலருக்கு அலர்ஜி தொடர்பான வியாதிகள் வந்து நீங்கும்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : காலபைரவரை வழிபட்டு வர தாய்க்கு ஏற்படும் கஷ்டங்கள் விலகும்.

விருச்சிகம்

கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீரும் காலமாக இந்த சனி வக்கிர சஞ்சார காலகட்டம் அமைகிறது. பொருளாதாரம் மேம்படும். இழுபறியாக இருந்து வீசா பிரச்சனை முடிவுக்கு வந்து வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும். தடைபட்டு வந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். மனதில் தைரியம் குடிகொள்ளும். குடும்பத்தில் அமைதி திரும்பும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து மோதல்கள் விலகிஅந்நியோன்யம் அதிகரிக்கும். இதுவரை கண்டு காணாமல் இருந்த உங்கள் உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். வீடு, மனை வாங்க வங்கி கடன் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி ஒத்துழைப்பு தருவார்கள். தொழிலை விரிவாக்கம் செய்யவும் வாய்ப்புகள் தேடி வரும்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : வெக்காளியம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை விளக்கெண்ணெய் தீபம் ஏற்ற உங்கள் வாழ்வு வெளிச்சமாகும்.

தனுசு

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து சதய நட்சத்திரம் வரை சஞ்சாரம் செய்யும் இந்த காலகட்டம் பல பிரச்சனைகளால் தடுமாறிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு ஆசுவாசம் தரும் காலகட்டமாக அமையும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்த மருத்துவ செலவுகள் குறையும்.

மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். என்றாலும் வீண் பிரச்சனையை பேசி விவாதம் செய்ய வேண்டாம். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும்.

வியாபாரத்திலும் போட்டிகள் குறைந்து ஓரளவு லாபம் கிடைக்கும். புதிய வியாபாரங்கள் தொடங்க இது ஏற்ற காலம் அல்ல. எனவே முதலீடுகளில் கவனம் தேவை.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : தனுசு ராசிக்காரர்கள் வில் அம்பு கொண்ட திருலோக்கிக்கு சென்று மன்மதன் ரதியை பார்க்க பிரிந்தவர்கள் கூடுவார்கள்

மகரம்

அலைச்சல்கள் அதிகரிக்கும் காலம் இது. சிலருக்கு நீண்ட தூர பயணங்களும் அதனால் செலவுகளும் அதிகரிக்கும். இருந்தாலும் போதுமான பண வரவு காணப்படுவதால் பிரச்சனை இல்லை. சேமிக்க தொடங்குவீர்கள். வேலையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு இப்போதைக்கு இல்லை என்றாலும் சின்ன சின்ன சலுகைகள் கிடைக்கும்.

வழக்குகள் சாதகமாகும். பல நாள் போராட்டங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். அவர்களின் கல்வியில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். கடையை விரிவு படுத்த திட்டமிடுவீர்கள்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : மதுரை சொக்கநாதருக்கு மாங்கல்ய தானம் செய்ய இழந்த செல்வங்கள் மீண்டு வரும்.

கும்பம்

கும்ப ராசிக்கு உள்ளே சனிபகவான் வக்கிரம் அடைவதால் எதிலும் நிதானம் தேவை.குறிப்பாக சதய நட்சத்திரக்காரர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பணவரவு தாமதமாகும். கேட்டிருந்த கடன் தொகையை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் இடுப்பறியே காணப்படும். எனவே வழக்கறிஞரை மாற்றும் முயற்சியை தவிர்ப்பது நல்லது.

முக்கிய பிரச்சனைகளை கையாளும்போது நிதானம் அவசியம். குடும்பத்தில் விவாதங்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வரும் பணத்தை சேமிக்க பாருங்கள். செலவுகளில் சிக்கனம் தேவை. பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை ஏற்படும். எனவே உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆலய வழிபாடு, யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். குறுக்கு வழிகளை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : திருநள்ளாறு சென்று தர்பனேஷ்வரரை வணங்கி விட்டு வர உங்கள் வாழ்க்கை வசந்தமாகும்.

மீனம்

சனி வக்ர சஞ்சார காலகட்டத்தில் மீன ராசிக்காரர்களுக்கு விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அவற்றை நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சுப விரய காலமாக மாற்றிக் கொள்ளலாம். வண்டி வாங்குவது மாற்றுவதற்கு உகந்த காலம் இது. பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். பிள்ளைகளால் நல்ல பலன்கள் உண்டாகும். மகனுக்கு நல்ல வேலை அமையும். மகளின் திருமண முயற்சிகள் வெற்றியாகும்.

வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களை விட்டு பிடித்து செல்வது நல்லது. புதிய வியாபாரம் முயற்சிகளை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம். அலுவலகத்தில் மரியாதை கூடும்.. எதிர்த்தவர்கள் அடங்கிப் போவார்கள் என்றாலும், அதிகாரிகளோடு மோதல் போக்கை கைவிடுவது நல்லது. வழக்குகளில் மிதமான போக்கை கடைபிடித்து வாருங்கள்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : காளகஸ்தி சென்றுவர கஷ்டம் எல்லாம் கலைந்து போகும்.

ஜூலை மாத ராசி பலன்கள் -2024

ஜூலை மாத ராசி பலன்கள் -2024

மேஷம்

உங்கள் ராசிக்கு 2ல் குரு, மாத முற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, எடுக்கும் முயற்சியில் வெற்றி ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வீடு தேடி வருவதற்கான யோகங்கள் உண்டு. உத்தியோசர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பயணங்களால் ஒரு சில அனுகூல பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம் : சரபேஸ்வரரையும் முருகரையும் வழிபாடு செய்யவும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 11ல் ராகு, மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடி இருந்தாலும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டால் லாபங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும்.

வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : முருக வழிபாடு மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது

மிதுனம்

உங்கள் ராசிக்கு 12ல் குரு ,ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும்.விட்டுக்கொடுத்து செல்வது,பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுக்கவேண்டியிருக்கும்.பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

தொழில்,வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்து கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : சிவ வழிபாடு,தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றுவது நல்லது.

கடகம்

லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும், சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதும், 10, 11ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : ஆஞ்சநேயர் வழிபாடு சிவ வழிபாடு நல்லது

சிம்மம்

குரு, ராகு சாதகமற்று சஞ்சரித்தாலும், மாத முற்பாதியில் சூரியன் 11ல் சஞ்சரிப்பதாலும், 12ம் தேதி முதல் செவ்வாய் 10ல் சஞ்சரிப்பதாலும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகளால் மன நிம்மதி குறையும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.

செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை அடையும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டு கொண்டிருந்த உயர்வுகள் கிடைக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : அம்மனையும்,விநாயகரையும் வழிபாடு செய்வது நல்லது.

கன்னி

உங்கள் ராசிக்கு 9ல் குரு, 10, 11ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். உற்றார்-உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கொடுக்கல்-வாங்கலில் இலாபகரமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினை அடைவார்கள்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : சரபேஸ்வரர் வழிபாடு செய்வது நல்லது.

துலாம்

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 9, 10-ல் சூரியன், சுக்கிரன், 10, 11-ல் புதன் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக அமையும். குரு 8-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்ப்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : முருகரை வழிபடுவது, தட்சிணாமூரத்திக்கு தீபமேற்றுவது நல்லது.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 11-ல் கேது சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகி நிம்மதி ஏற்படும். மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் :சிவனை வழிபடுவது உத்தமம்.

தனுசு

ஜென்ம ராசிக்கு 6-ல் குரு. 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு இருப்பது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது உத்தமம். வரும் 12-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.

பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் உதவியால் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : விநாயகர் வழிபாடு செய்யவும்.

மகரம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் குரு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடனில்லாத கன்னிய வாழ்க்கை அமையும்.

கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : அஷ்டலட்சுமி வழிபாடு, சனிபகவானுக்கு விரதம் இருப்பது உத்தமம்.

கும்பம்

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 3-ல் செவ்வாய் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலை இருக்கும்.

கொடுக்கல் வாங்களில் கவனமாக செயல்படுவது உத்தமம். தொழில்ரீதியாக போட்டிகள் இருந்தாலும் அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். வெளியூர், வெளிநாடுகள்மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : துர்க்கை, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.

மீனம்

உங்கள் ராசிக்கு 4, 5-ல் சுக்கிரன், 12-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலங்கள் உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.

சனி 12-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்பு, அசையும் அசையா சொத்துகள்ரீதியாக எதிர்பாராத வீண்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகரிக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள்

பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

இன்றைய ராசி பலன் – 27.6.2024

இன்றைய ராசி பலன் – 27.6.2024

மேஷம்

நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

ரிஷபம்

உங்களுக்கு புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.

இன்றைய ராசி பலன்

மிதுனம்

உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுத்துவது நல்லது. பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கடகம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சிம்மம்

இன்றைய ராசி பலன்

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

கன்னி

உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்

உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது மூலம் லாபம் அடையலாம். வேலையில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

இன்றைய ராசி பலன்

தனுசு

உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்

உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

கும்பம்

உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும்.

மீனம்

உறவினர் வருகையால் குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். தூர பயணங்களில் சற்று கவனம் தேவை.

இன்றைய ராசி பலன் – 25.6.2024

இன்றைய ராசி பலன் – 25.6.2024

மேஷம்

உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

இன்றைய ராசி பலன்

மிதுனம்

உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

கடகம்

உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான செய்தி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் புதிய நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும்.

சிம்மம்

இன்றைய ராசி பலன்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களால் அனுகூலங்கள் கிட்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

துலாம்

தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினரால் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். கடன் பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம்

நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

இன்றைய ராசி பலன்

தனுசு

பிள்ளைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். வண்டி, வாகனங்கள் மூலம் வீண்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மகரம்

பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

கும்பம்

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீண் பேச்சால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மீனம்

குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

இன்றைய ராசி பலன் – 24.6.2024

இன்றைய ராசி பலன் – 24.6.2024

மேஷம்

வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

ரிஷபம்

உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன்

மிதுனம்

உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும்.

கடகம்

எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம்

இன்றைய ராசி பலன்

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கன்னி

உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் தோன்றும். பிள்ளைகள் வகையில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினை குறையும்.

துலாம்

உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்

உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரியம் கைகூடும்.

இன்றைய ராசி பலன்

தனுசு

குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்

உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபார முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.

கும்பம்

நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைய சற்று நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும்.

மீனம்

உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.