திவ்ய தேசம் 51: திருவெட்கா (காஞ்சிபுரம்) வேண்டிய வரத்தை தரும் அற்புத தலம்

திருவெட்கா

திருமாலுக்கு காஞ்சிபுர ஸ்தலம் மிகவும் பிடித்தமான ஸ்தலம் என்று சொன்னால் அது மிகையில்லை. பக்தர்களின் குறைகளை, பிரார்த்தனை மூலம் அறிந்து உதவும் பரோபகாரியான திருமால். காஞ்சிபுரத்திலுள்ள இன்னொரு திவ்ய தேசமான திருவெட்காவில் அமர்ந்து சில அரிய நற்காரியங்களைச் செய்து எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறார். இங்கு நடந்த பல சம்பவங்கள், பகவான் பக்தர்மேல் எவ்வளவு கருணை கொண்டு குழந்தையாய் ஓடி வந்திருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்திற்கு வடக்கே நான்கு ஏக்கர் நிலப் பரப்பளவில் ஐந்து நிலை ராஜா கோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் உள்ள கோவில்தான் திருவெட்கா.

மூலவர் ஸ்ரீ சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள் ,புஜங்க சயனத்தில் திருக்கோலம் ,பாதத்தின் அருகில் சரஸ்வதி தேவி
தாயார் கோமளவல்லித் தாயார்
விமானம் வேதஸார விமானம்
தீர்த்தம் பொய்கைப் புஷ்கரணி

பிரம்மதேவன் செய்யும் யாகத்தை அழிக்க சரஸ்வதிதேவி வேசுவதியாக மாறி படு பயங்கரமாக வரும் பொழுது பிரம்மா திருமாலை வேண்டினார். திருமாலும் உதவி செய்ய ஆசைப்பட்டு வேகவதியின் வெள்ளத்தைத் தடுக்க, வேகவதியாற்றின் குறுக்கே அணை போல் சயனித்தார். இதனால் சரஸ்வதி தேவி தான் செய்த செயலுக்காக வெட்கமுற்று தலை குனிந்தாள் அதனால் இந்த ஸ்தலத்திற்கு ‘திருவெட்கா’ என்று பெயர் வழங்கலாயிற்று.

திருவெட்கா

தன்னுடைய சீடன் கணிகண்ணன் என்பவனுக்காக திருமழிசை ஆழ்வார் இந்த ஊரை விட்டே புறப்பட நேர்ந்தது. அப்பொழுது இந்த தலத்தில் பள்ளி கொண்டிருந்த பெருமாளையும் தன்னுடன் அழைக்க, பெருமாளும் பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு கிளம்பினார். இதனால் இந்நகரம் பின்னர் பல்வேறு இயற்கைச் சோதனைகளுக்கு உள்ளாயிற்று. யாரும் முன்வந்து காப்பாற்றவில்லை. இதையறிந்த காஞ்சி மன்னன், திருமழிசை ஆழ்வாரையும் கணிக்கண்ணனையும் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் காஞ்சிபுரத்திற்கே வரும்படி வேண்ட மன்னனின் கோரிக்கையை ஏற்று அவர்களும் காஞ்சிபுரத்திற்குத் திரும்பினர்.

பக்தனே மீண்டும் காஞ்சிபுரத்திற்கு திரும்பும் பொழுது பகவான் திருமாலும் அவர்களுடன் மீண்டும் திரும்பினார். சொன்னதை செய்ததால் இந்த ஊர் பெருமாளுக்கு ‘சொன்னவண்ணம் செய்த பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.

திருவெட்கா

பொய்கை, பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார். திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் இந்தப் பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

பரிகாரம்:

பெருமாள் ஒரு குழந்தையைப் போல் பழகும் உள்ளம் கொண்டவர். தனது அடியாட்கள் பக்தியின் பரவசத்தால் என்ன கட்டளை இட்டாலும் அதை மறுவிநாடியே செய்து காட்டுபவர். எனவே பகவானிடம் உரிமையாக நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். சண்டை போடலாம். கோபித்துக் கொள்ளலாம். ஆனால் பகவான் ஒருபோதும் பக்தன் மீது கோபித்துக் கொள்ளவே மாட்டார் என்பதால் – நமக்கு வேண்டியவற்றை உரிமையோடு கேட்கின்ற ஸ்தலம் கஷ்டப்படும் பொழுது மனமுருகிக் கூப்பிட்டால் மங்களமாக வந்து அருள் தருவார். வேண்டிய வரன்களை கேட்டு வாங்கக்கூடிய ஒப்பற்ற புனிதத்தலம் இது.

கோவில் இருப்பிடம் :

இன்றைய ராசி பலன் – 18.2.2024

இன்றைய ராசி பலன் – 18.2.2024

மேஷம்
தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
ரிஷபம்
வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மன அமைதி இருக்கும்.
மிதுனம்
எளிதில் முடியும் செயல்களை கூட தாமதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும்.
கடகம்
உறவினர்கள் மூலமாக குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.
சிம்மம்
பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.
கன்னி
எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் வகையில் உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களது பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
துலாம்
மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை
விருச்சிகம்
தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.
தனுசு
பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
மகரம்
குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.
கும்பம்
குடும்பத்தில் பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். கொடுத்த கடன் வசூலாகும்.
மீனம்
உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

இன்றைய பஞ்சாங்கம்– 18.2.2024

தமிழ் தேதி மாசி-6,ஞாயிறு
ஆங்கில தேதி பிப்ரவரி -18
திதி நவமி காலை 8.16 மணி வரை பின் தசமி
யோகம் சித்த யோகம்
கரணம் கெளலவம்
நட்சத்திரம் ரோகிணி காலை9.22 மணி வரை பின்மிருகசீரிடம்
வார சூலை மேற்கு
சந்திராஷ்டம ராசி துலாம்
ராகு காலம் 4.57PM -6.26PM
எமகண்டம் 12.30PM -1.59PM
நல்ல நேரம் -காலை 8.06AM -10.36AM
நல்ல நேரம் -பிற்பகல் 2.36PM -4.56PM
நல்ல நேரம் -இரவு 9.36PM -12.36PM
இன்றைய சிறப்புகள்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் -17.2.2024

இன்றைய ராசி பலன் – 17.2.2024

மேஷம்
செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.
மிதுனம்
வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
கடகம்
குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்
சிம்மம்
எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.
கன்னி
நீங்கள் திட்டமிட்ட காரியத்தை செய்து முடிக்க சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
துலாம்
சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.
விருச்சிகம்
குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு
வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மகரம்
வரவேண்டிய பணவரவில் தடை தாமதங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.
கும்பம்
எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இன்றைய பஞ்சாங்கம்– 17.2.2024

தமிழ் தேதி மாசி-5, சனி
ஆங்கில தேதி பிப்ரவரி -17
திதி அஷ்டமி காலை 8.16 மணி வரை பின் நவமி
யோகம் சித்த/அமிர்த யோகம்
கரணம் பவ
நட்சத்திரம் கிருத்திகை காலை 8.46 மணி வரை பின் ரோகிணி
வார சூலை கிழக்கு
சந்திராஷ்டம ராசி துலாம்
ராகு காலம் 9.33AM -11.01AM
எமகண்டம் 1.59PM -3.28PM
நல்ல நேரம் -காலை
நல்ல நேரம் -பிற்பகல் 11.06AM -1.36PM ,5.36PM -8.06PM
நல்ல நேரம் -இரவு 9.36PM -10.36PM
இன்றைய சிறப்புகள்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் -16.2.2024

இன்றைய ராசி பலன் – 16.2.2024

மேஷம்
எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிகாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்
பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.
மிதுனம்
இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
கடகம்
எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழச்சி ஏற்படும்.
சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். திருமண பேச்சுவார்த்தைகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்துடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கன்னி
எடுக்கும் காரியத்தை முடிப்பதற்கு தடை தாமதங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பொருளாதார பிரச்சினைகள் மதியத்திற்கு பின் சற்று குறையும்.
துலாம்
தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 02.43 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
விருச்சிகம்
உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.
கும்பம்
வீட்டில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வகையில் சிறு சிறு மனகவலைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.
மீனம்
குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் நல்ல தொடர்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

இன்றைய பஞ்சாங்கம்– 16.2.2024

தமிழ் தேதி மாசி-4, வெள்ளி
ஆங்கில தேதி பிப்ரவரி -16
திதி சப்தமி காலை 8.55 மணி வரை
யோகம் சித்த யோகம்
கரணம் வணிசை
நட்சத்திரம் பரணி காலை 8.46 மணி வரை
வார சூலை தெற்கு
சந்திராஷ்டம ராசி கன்னி
ராகு காலம் 11.02AM -12.31PM
எமகண்டம் 3.28PM -4.57PM
நல்ல நேரம் -காலை 6.37AM -9.37AM
நல்ல நேரம் -பிற்பகல் 1.37PM -2.07PM ,5.37PM 6.37PM
நல்ல நேரம் -இரவு 8.37PM -9.37PM
இன்றைய சிறப்புகள் ரத சப்தமி ,விசோக சப்தமி விரதம் ,சூரிய ஜெயந்தி ,துர்காஷ்டமி ,பீஷ்மாஷ்டமி,கிருத்திகை விரதம்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் -15.2.2024

இன்றைய ராசி பலன் – 15.2.2024

மேஷம்
பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்
நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
கடகம்
திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.
சிம்மம்
உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். செலவுகளும் வரவுக்கு மீறி அதிகரிக்கும். ஆடம்பரத்தை குறைப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி
சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.
துலாம்
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார பிரச்சினைகள் தீரும். வருமானம் இரட்டிப்பாகும்.
விருச்சிகம்
உற்றார் உறவினர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.
மகரம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.
கும்பம்
வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
மீனம்
தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தில் பெண்கள் வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.

இன்றைய பஞ்சாங்கம்– 15.2.2024

தமிழ் தேதி மாசி-3, வியாழன்
ஆங்கில தேதி பிப்ரவரி -15
திதி சஷ்டி பகல் 10.13 மணி வரை
யோகம் அமிர்த /சித்த யோகம்
கரணம் தைதுளை
நட்சத்திரம் அசுவினி காலை 9.26 மணி வரை
வார சூலை தெற்கு
சந்திராஷ்டம ராசி கன்னி
ராகு காலம் 1.59PM -3.28PM
எமகண்டம் 06.36AM -08.4AM
நல்ல நேரம் -காலை 9.38AM -11.08AM
நல்ல நேரம் -பிற்பகல் 5.08PM -7.38PM
நல்ல நேரம் -இரவு 8.38PM -9.38PM
இன்றைய சிறப்புகள்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் -14.2.2024

இன்றைய ராசி பலன் – 14.2.2024

மேஷம்
பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த நெருக்கடிகள் குறையும்.
ரிஷபம்
தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். வேலை விஷயமாக செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம்
மிதுனம்
குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
கடகம்
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும்.
சிம்மம்
குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். உங்களுக்கு காலை 10.43 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் நிதானம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். உங்கள் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். மதியத்திற்கு பிறகு மன நிம்மதி ஏற்படும்.
கன்னி
உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு காலை 10.43 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
துலாம்
எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.
விருச்சிகம்
குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்
தனுசு
குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். மாணவர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது நல்லது.
மகரம்
பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிட்டும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.
மீனம்
குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

இன்றைய பஞ்சாங்கம்– 13.2.2024

தமிழ் தேதி மாசி-2, புதன்
ஆங்கில தேதி பிப்ரவரி -14
திதி பஞ்சமி பகல் 12.10 மணி வரை
யோகம் மரண யோகம்
கரணம் பாலவம்
நட்சத்திரம் ரேவதி பகல் 10.43 மணி வரை
வார சூலை வடக்கு
சந்திராஷ்டம ராசி சிம்மம்
ராகு காலம் 12.31PM -1.59PM
எமகண்டம் 8.05AM -9.33AM
நல்ல நேரம் -காலை
நல்ல நேரம் -பிற்பகல் 2.08PM -3.38PM ,4.38PM -5.38PM
நல்ல நேரம் -இரவு 8.38PM -9.38PM
இன்றைய சிறப்புகள் வசந்த பஞ்சமி

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

மாசி மாத முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் -2024

மாசி மாதம் -2024

மாசி -2 -புதன்
14.2.2024
வசந்த பஞ்சமி: இன்று வீட்டில் லக்ஷ்மி பூஜை செய்ய வருடம் முழுவதும் வாழ்க்கை வசந்தமாகும்
மாசி -4 -வெள்ளி
16.2.2024
ரத சப்தமி : இன்று பெருமாள் கோவில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரத சப்தமி உற்சவம் தரிசித்தால் முன்னோர்கள் திருப்தியடைவர். திருப்பதி திருமலையில் நடக்கும் ரத சப்தமி உற்சவம் மிக விசேஷம் .இன்று சூரியனுக்கு சிவப்பு துணி அணிவித்து அர்ச்சனை செய்து ஒரு நெய் விளக்கு வைத்து வர சூரிய தோஷம் விலகும்
மாசி -12 – சனி
24.2.2024
மாசி மகம் : இன்று புனித நீராடி தோஷ பரிகாரங்கள் செய்யவும்.அம்பாளை தரிசிக்கவும் ஏற்ற நாளாகும்.
மாசி -25 -வெள்ளி
8.3.2024
மகா சிவராத்திரி : இன்று இரவு முழுவதும் கண் விழித்து 4 ஜாமங்களிலும் சிவ பூஜை செய்ய சகல பாவங்களும் விலகி கைலாச பிராப்தி கிடைக்கும்
மாசி -2 -சனி
9.3.2024
சிறிய திருவடி : இன்று ஸ்ரீராமரையும் ,ஆஞ்சநேயரையும் தரிசிக்க பிரிந்த நண்பர்கள் கூடுவர்
மாசி -27-ஞாயிறு
10.3.2024
மெளனி அமாவாசை: இன்று நாள் முழுவதும் மெளன விரதம் இருக்க வாய் வார்த்தைகள் மூலம் செய்த பாவங்கள் விலகும்
வாஸ்து நாள்
மாசி -22(5.3.2024)- செவ்வாய்
வாஸ்து நேரம் : 10.39AM -11.15AM
திருமணம் ,சீமந்தம் ,உபநயனம்,வாசல்கால் வைக்க ,மாங்கல்யம் செய்ய ,புது வண்டி வாங்க ,தொழில் தொடங்க உகந்த நாட்கள் -மாசி -2024
தமிழ் தேதி : மாசி -7
ஆங்கில தேதி : 19.2.2024
கிழமை : திங்கள்
திதி : தசமி
நட்சத்திரம் : மிருகசீரிடம்
யோகம் :சித்த
நல்ல நேரம் : 6.30AM -7.30AM
தாலி கட்ட நேரம் : 7.19AM -7.29AM
லக்னம் : கும்பம் (வளர்பிறை )
தமிழ் தேதி : மாசி -9
ஆங்கில தேதி : 21.2.2024
கிழமை : புதன்
திதி : துவாதசி
நட்சத்திரம் : புனர்பூசம்
யோகம் :சித்த
நல்ல நேரம் : 10.00AM -11.00AM
தாலி கட்ட நேரம் : 10:50AM -11:00AM
லக்னம் : மேஷம் (வளர்பிறை )
தமிழ் தேதி : மாசி -10
ஆங்கில தேதி : 22.2.2024
கிழமை : வியாழன்
திதி : திரயோதசி
நட்சத்திரம் : பூசம்
யோகம் :சித்த
நல்ல நேரம் : 9.30AM -11.00AM
தாலி கட்ட நேரம் : 10.47AM 10.56AM
லக்னம் : மேஷம் (வளர்பிறை )
தமிழ் தேதி : மாசி -14
ஆங்கில தேதி : 26.2.2024
கிழமை : திங்கள்
திதி : துவிதியை
நட்சத்திரம் : உத்திரம்
யோகம் :சித்த
நல்ல நேரம் : 9.30AM -10.30AM
தாலி கட்ட நேரம் : 10.17AM -10.27AM
லக்னம் : மேஷம் (தேய்பிறை )
தமிழ் தேதி : மாசி -18
ஆங்கில தேதி :01.03.2024
கிழமை : வெள்ளி
திதி : சஷ்டி
நட்சத்திரம் : சுவாதி
யோகம் :சித்த
நல்ல நேரம் : 9.00AM -10.30AM
தாலி கட்ட நேரம் : 10.16AM -10.25AM
லக்னம் : மேஷம் (தேய்பிறை )

இன்றைய ராசி பலன் -13.02.2023

இன்றைய ராசி பலன் – 13.2.2024

மேஷம்
பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
ரிஷபம்
உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

இன்றைய ராசி கட்டம்

இன்றைய ராசி பலன்
கடகம்
சற்று சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.
சிம்மம்
செய்யும் செயல்களில் தாமதப்பலனே ஏற்படும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.
கன்னி
எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.
துலாம்
வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்
விருச்சிகம்
குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.
தனுசு
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர் அறிமுகம் கிட்டும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
கும்பம்
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
மீனம்
உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

இன்றைய பஞ்சாங்கம்– 13.2.2024

தமிழ் தேதி மாசி-1, செவ்வாய்
ஆங்கில தேதி பிப்ரவரி -13
திதி சதுர்த்தி பகல் 2.42 மணி வரை
யோகம் அமிர்த /சித்த
கரணம் பத்திரை
நட்சத்திரம் உத்திரட்டாதி பகல் 12.35 மணி வரை
வார சூலை வடக்கு
சந்திராஷ்டம ராசி சிம்மம்
ராகு காலம் 3.28PM -4.57PM
எமகண்டம் 9.34AM -11.02AM
நல்ல நேரம் -காலை 11.09AM -11.39AM
நல்ல நேரம் -பிற்பகல் 12.39PM -1.39PM ,5.09PM -6.39PM
நல்ல நேரம் -இரவு 7.39PM -8.39PM
இன்றைய சிறப்புகள் சூரிய பெயர்ச்சி பகல் 3.44 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இந்த ராசிகளில் இருந்தால் உங்கள் மனைவியால் உங்களுக்கு யோகம்தான் !!!

சுக்கிரன்

மேஷம்
பாசமுள்ள தீவிரமான காதலன், பல பெண்களுடன் தொடர்பு.
ரிஷபம்
அழகிய, கடமை உணர்வுள்ள மனைவி, சந்தோஷமான திருமணம், பேரின்ப மணவாழ்க்கையில் உறுதியான அசைக்க முடியாத காதல்.
மிதுனம்
அதிக காமம், படித்த மனைவி, பாதிக்கப்பட்ட சுக்கிரன் எனில் 2-வது திருமணம்.
கடகம்
கூடுதல் காமம், காமத்தில் அதிக ஈடுபாடு, பாதிக்கப்பட்ட சுக்கிரன் எனில் இரு மனைவிகள், உணர்ச்சிகரமான மனைவி.
சிம்மம்
மிக உயர்ந்த பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வரும் அழகிய மனைவி, ஆழமான, உண்மையான அன்பு. வீரிய குறைவு.
கன்னி
காமத்தை விட காதலால் அதிகமான திருப்தி, கீழ் ஜாதி பெண்ணின் மேல் விருப்பம், இழிவான அற்ப குணமுடைய மனைவி.
 சுக்கிரன்
துலாம்
 காதலில் வெற்றி அடைந்து, வெற்றிகரமான திருமண வாழ்வும், முன்னேற்றமும் இரக்க குணம் உள்ள, அதிர்ஷ்டம் உள்ள அழகிய மனைவி.
விருச்சிகம்
பலதார மணவாழ்வு , சுய கட்டுப்பாடற்ற காரணத்தால், ஆலோசனை இன்றி, அவசரப்பட்டு கூடுதல், இணைதல், சண்டைக்கோழி மனைவி.
தனுசு
மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, வெற்றிகரமான திருமணம்.
மகரம்
 தாமதத் திருமணம், பாராட்டத்தக்க மனைவி, நிலையற்ற காதல் விவகாரங்கள்,காதலை மதியாமை.
கும்பம்
மோகதாகம், காதலில் ஏமாற்றம், தாமத திருமணம், நகைச்சுவை மிக்க மனிதாபிமானம் உள்ள மனைவி.
மீனம்
பல தொடர்புகள் இருந்தாலும் முடிவில் ஒரு சந்தோஷமான திருமணம். நாகரிகமான அடக்கமான மனைவி. 

மாசி மாத ராசிபலன் -2024

மாசி மாத ராசிபலன்

மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)’

கிரக நிலைகளின்படி, வருமானம் ஒரே சீராக இருப்பது மிகவும் கடினம்! திட்டமிட்டு செலவு செய்தால், கடன் வாங்க வேண்டிய அவசியம் இராது. இதற்குக் காரணம், மாதம் முழுவதும் குருபகவான் உங்களுக்குச் சாதகமாக இல்லை !! சுக்கிரனும் 12ம் தேதி வரைதான் சாதகமாக சஞ்சரிக்கின்றார்.

13ம் தேதியிலிருந்து, 24ம் தேதி வரை அனுகூலமற்ற நிலைக்கு மாறி, மீண்டும் 25ம் தேதி வரை சுப பலம் பெறுகிறார்.ஆதலால்தான், நிதிநிலைமையில் அடிக்கடிவீண் செலவுகளும், நிச்சயமற்ற நிலையும் மாறி, மாறி ஏற்பட்டு, கவலையை அளிக்கும். குருவினாலும், நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. விவாக முயற்சிகளில், குழப்பமே மேலிடும்.

நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோரின் உதவி கிடைக்கச் செய்வார், கேது சனி பகவான்,லாப ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க தருணத்தில் உதவி கிட்டும். விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. தேவையில்லாமல், வெளியே அலைவதைத் தவிர்ப்பது அவசியம். கூடியவரையில், வெளியூர்ப் பயணங்களை இம்மாதம் தவிர்த்தல் நல்லது.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

வியாழக்கிழமைகளில் நெய்யும், சனிக்கிழமைகளில்,எள் எண்ணெயும் சேர்த்து வருவது, மிகவும் சக்திவாய்ந்த பரிகாரங்களாகும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1-3, 6-9, 13-17, 22-24, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 19, 20, 21 முற்பகல் வரை.

ரிஷபம்

(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

மாசி 24-ம் தேதி வரை, சுக்கிரன் அனுகூலமான நிலையில் சஞ்சரிக்கின்றார். மாதம் முழுவதும் குரு பகவானால் நன்மை எதையும் எதிர்பார்க்க இயலாது! லாப ஸ்தானத்தில் ராகு நிலைகொண்டிருப்பது, மிகவும் சாதகமான கிரக நிலையாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஜென்ம ராசியில் உதவும் குருவினால், செலவுகள் அதிகமாக இருக்கும். மாதம் முழுவதும் சூரியன் சுப பலம் பெற்றிருப்பதால், ஆரோக்கியத்தை அவர் பாதுகாத்தருளுகிறார் !!

உத்தியோகம் காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ, கணவர் -மனைவி பிரிந்திருக்க நேரிடும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது இருப்பதால், திருத்தல தரிசனம், மகான்களின் ஆசி கிட்டும். தசா,
புக்திகள் சாதகமாக இருப்பின், அயோத்தியா சென்று வரும் மகத்தான பாக்கியமும் கிட்டும்.

லாபஸ்தானத்தில் நிலைகொண்டுள்ளராகுவின் பலத்தினால், எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. மாசிமாதம் 25-ம் தேதி, சுக்கிரன் ராசி மாறுவதால், எதிர்பாராத செலவு ஒன்றை நீங்கள் சமாளிக்க வேண்டி
வரும். திருமண முயற்சிகள் தாமதப்படும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 4-9, 13-16, 20, 24-26, 30

சந்திராஷ்டம தினங்கள்

மாசி:21 முற்பகல் முதல், 22, 23 மாலை வரை.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குரு பகவான் லாப ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், பணப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு சாத்திக்கூறு கிடையாது. இருப்பினும், பாக்கிய ஸ்தானத்தில் சனிபகவானும், சுக ஸ்தானத்தில்கேதுவும் இருப்பதால், செலவுகளும் அதிகமாகவே இருக்கும்.

இதையும் கொஞ்சம் படிங்க : சனி பெயர்ச்சி 2023 to 2026-மீனம் பலன்கள் மற்றும் பரிகாரம்

அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயும், பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் – சனி இணைந்திருப்பதால், மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. மனதில் நிம்மதி குறையும். விவாக முயற்சிகளுக்கு, ஏற்ற மாதம் இது. மாசி 12-ம் தேதி வரை சுக்கிரன் சுப பலம் பெற்றிருக்கவில்லை! நெருங்கிய உறவினர்களிடையே சிறு, சிறு வாக்குவாதமும் அதனால், ஒற்றுமைக்குறைவும் நிலவும்.

வெளிநாட்டில் பணியாற்றிவரும் பிள்ளை அல்லது பெண் ஆகியோரின் பிரச்னை, கவலையை அளிக்கும். அதிக அலைச்சல், வெளியூர்ப் பயணங்கள் ஆகியவற்றினால், ஆரோக்கியம் பாதிக்கப்படும். சரும உபாதைகளினால், மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

வைதீஸ்வரர் கோயில் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1, 2, 6-10, 14-16, 20-22, 26, 27, 30.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 23 மாலை முதல், 24, 25 இரவு வரை.

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

இம்மாதமும் குரு பகவானும், சுக்கிரனும் உங்களுக்கு அனுகூலமாக
சஞ்சரிக்கவில்லை! பாக்கிய ஸ்தானத்தில்ராகுவும், ஜீவன ஸ்தானத்தில் குருவும் இணைந்திருப்பது, மிகக் கடுமையான பணப்பற்றாக்குறையை
இம்மாதம் நீங்கள் சமாளிக்கவேண்டி வரும்.

அஷ்டமத்தில் (8-ம் இடம்) சூரியனும், சனி பகவானும் இணைந்திருப்பது ஆரோக்கியத்தில் இருக்கவேண்டியதன் கவனமாக அவசியத்தை வலியுறுத்துகிறது. களத்திர ஸ்தானமாகிய மகரத்தில் அக்னி கிரகமாகிய செவ்வாய் அமர்ந்திருப்பது மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. குடும்பப் பிரச்னைகளும் கவலையை அளிக்கும். கேது ஒருவரே!

உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால், முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத இடங்களிலிருந்து, உதவிகள் கிட்டும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கக்கூடும். குடும்ப நலன் சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திப்போடுவது நல்லது. திருமண முயற்சிகளில் தவறான வரனை நிச்சயித்துவிடக்கூடும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

பிரதோஷகாலத்தில் (மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள்ளாக) தீபம் ஒன்றை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ ஏற்றி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 3-5, 10-13, 17-19, 23, 24, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 25 இரவு முதல் 26, 27 இரவு வரை.

சிம்மம்

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் வரை)

குரு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று முக்கிய கிரகங்களும், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு உதவிகரமாக நிலைகொண்டுள்ளனர். பணவசதி போதிய அளவிற்கு இருக்கும். நினைத்தவை நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெறலாம், விவாக முயற்சிகளில் நல்ல வரன் அமையும்.

புத்திர பாக்கியம் கிடைத்தல், நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப
நிகழ்ச்சிகள் நிகழும். அவற்றின் காரணமாக, சுபச் செலவுகள் அதிகமாக இருப்பினும், வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். ராகு, அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால், ஏதாவதொரு உடல் உபாதை ஏற்பட்டு, பின்பு குணமாகும். களத்திர ஸ்தானமாகிய கும்பத்தில், சனி பகவான் ஆட்சி புரிவதால், மனைவியின் உடல் நலனிலும் கவனமாக இருத்தல் வேண்டும்.

இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டும்போது, மிக மிக கவனமாக இருத்தல்
அவசியம். விபத்துகள் ஏற்படுவதற்கு, கிரக ரீதியில் சாத்தியக்கூறு உள்ளது.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

மாலை நேரத்தில், பிரதோஷ காலத்தில் ஐந்து அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வாருங்கள்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 3-5, 10-13, 17- 19, 24-26, 30.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 1, 2 மாலை வரை. மீண்டும் 27 இரவு முதல், 28, 29 பின்னிரவு வரை.

கன்னி

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

ஜென்ம ராசியில், மோட்ச காரகரான கேது நிலைகொண்டிருப்பதால்,
மனதில் ஆன்மிகச் சிந்தனைகள், தெய்வபக்தி, பெரியோர்களின், ஆசியும் நட்பும் மேலிடும். சுக்கிரன் அனுகூலமாக இருப்பதால், வருமானம்
போதிய அளவிற்கு இருக்கும். இருப்பினும், அஷ்டமஸானத்தில் குருபகவான் நிற்பதால், வருமானத்தின் பெரும்பகுதி வைத்தியச் செலவுகளிலும், வீண் செலவுகளிலும் பணம் விரயமாகும். களத்திர ஸ்தானமாகிய மீனராசியில், ராகு நிலைகொண்டிருப்பதால், கணவர்-மனைவியரிடையே ஒற்றுமை பாதிக்கும்.

ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய கும்பத்தில் சூரியன் – சனி
இணைந்திருப்பதால், ஒரு சிலர் புதிய கடன்களை ஏற்கக்கூடும். கூடிய
வரையில், தவிர்ப்பது நல்லது. அஷ்டம ஸ்தானத்தில், குரு நிலை கொண்டிருப்பதால், வீண்செலவுகளில் பணம் விரயமாகும். சில தருணங்களில் தேவையில்லாமல் கடன் வாங்கும் மனப்பான்மை உருவாகும். களத்திர ஸ்தானத்தில் ராகு நிற்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மண் அகலில் பசு நெய் தீபம் ஏற்றி வந்தால் போதும். அதிசயத்தக்க பலன் கிடைக்கும்

பலன் தரும் தினங்கள்

மாசி: 1, 5-10, 14-16, 20, 24-27.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 2 மாலை முதல், 3, 4 இரவு வரை. மீண்டும் 29 பின்னிரவு முதல் 30.

துலாம்

சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

வீரியம் நிறைந்த பல முக்கிய கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக நிலை
கொண்டுள்ளனர், இம்மாதம் முழுவதும்!சுக்கிரன், குரு, ராகு மற்றும் புதன் ஆகியவற்றைத்தான் குறிப்பிடுகிறோம். மாதம் முழுவதும் பணப் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை. சற்று திட்டமிட்டு செலவு செய்தால், பழைய கடன்களைக் கூட அடைத்து, உங்கள் பொருளாதாரத்தை சீர்படுத்திக்கொள்ளலாம்.

ஸப்தம ஸ்தானத்தில் (7) குரு அமர்ந்திருப்பதால், பெண் அல்லது பிள்ளைக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். மணமான மங்கையருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். நிச்சயதார்த்தம், திருமணம், மகப்பேறு போன்ற சுப நிகழ்ச்சிகள் நிகழ்வதால், குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும்,

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

செவ்வாய்மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டின் பூஜையறையிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயிலிலோ மாலையில் இரண்டு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1-3, 7-9, 13-16, 20-23, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 4 இரவு முதல், 5, 6 பின்னிரவு வரை.

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம்,கேட்டை வரை)

சுக்கிரன், செவ்வாய், கேது ஆகிய மூவரும் உங்களுக்குச் சாதகமாக உள்ளனர், இம்மாதம் முழுவதும்! மற்ற கிரகங்களினால் எவ்வித நன்மைகளையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. வருமானத்தை விட செலவுகளே அதிகமாக இருக்கும். “6-ல் குரு, ஜீவநதியும் வற்றும் …! ” என விவரித்துள்ளன மிகப் புராதனமான ஜோதிட கிரந்தங்கள். திட்டமிட்டு செய்யாவிட்டால், புதிய கடன்களை ஏற்க நேரிடும்.

அன்புடன் பழகிய நண்பர்களும் விலகிச் செல்வர். குடும்பத்திலும், ஒற்றுமை குறையும். ராகுவின் அர்த்தாஷ்டக நிலையினால், ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படும். எளிய மருத்துவச் சிகிச்சையினால் குணம் கிடைக்கும். சிறு விஷயங்களுக்குக்கூட, அதிக முயற்சி தேவைப்படும்.

பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில் நிலைகொண்டிருக்கும்
ராகுவினால், குழந்தைகளின் உடல்நலன், மற்றும் கல்வி பாதிக்கப்படக்கூடும். அர்த்தாஷ்டக ராசியில் சனி நிலைகொண்டிருப்பதால், உங்கள் உடல் நலனில் கவனம் அவசியம்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

இம்மாதம் முழுவதும், தினமும் மாலையில் உங்கள் வீட்டுப் பூஜையறையில் ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி வரவும். சனிக்கிழமைகளில் மட்டும், எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 4, 5, 10-13, 17-20, 24-26, 30.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 6 பின்னிரவு முதல், 7, 8, 9 காலை வரை.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

இம்மாதம் முழுவதும் வீரியம் நிறைந்த ஐந்து கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக வலம் வருகின்றன. குரு, சுக்கிரன், சூரியன், சனி, புதன் ஆகிய கிரகங்களைத் தான் குறிப்பிட்டுள்ளோம். தேவையான அளவிற்கு பண வசதி உள்ளது. வீண் செலவுகள் குறையும். புதனின் நிலை உங்கள் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் திருப்திகரமாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். அர்த்தாஷ்டகத்தில் நிலைகொண்டுள்ள ராகுவினாலும், செவ்வாயின் நிலையினாலும், உஷ்ண சம்பந்தமான சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, சருமம் சம்பந்தமான பாதிப்புகள் எளிய மருத்துவ சிகிச்சையினால் நீங்கும். திருமண முயற்சிகள் வெற்றியடையும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

திரு நாகேஸ்வரம், நாகமங்களா(கர்நாடகா), காளஹஸ்தி ஆகிய திருத்தலங்களில் ஏதாவது ஒன்றிற்குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வைத்து தரிசித்துவிட்டு வந்தால், போதும். இயலாதவர்கள், தங்கள் வீட்டுப் பூஜையறையில், சனிமற்றும் செவ்வாய்க் கிழமைகளில், மாலையில் மூன்று அகல் விளக்குகளில் தீபம் ஏற்றிவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1, 2, 6-8, 12-16, 20-23, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 9 காலை 10, 11 இரவு வரை.

மகரம்

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

சுக்கிரன், ராகு மற்றும் சனி பகவான் ஆகியோர் இம்மாதம் முழுவதும்
உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். ஏழரைச் சனியின் காலம் முடியும் தருணத்தில் உங்களுக்கு, அவரால் பல நன்மைகள் காத்துள்ளன. சுக்கிரனும் இம்மாதம் முழுவதும் சுப பலம் பெற்றுச் சஞ்சரிப்பதால், பணப் பற்றாக்குறை இராது.

குரு சாதகமாக இல்லாததால், வரவிற்கேற்ற செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் ஒற்றமை நிலவும். எதிர்பாராத செலவினங்கள் கடைசி வாரத்தில் ஏற்படக்கூடும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிட்டும்.

விவாக சம்பந்தமான முயற்சிகளில் வரன் அமைவது தாமதப்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணம் கிட்டும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

தினமும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ மாலையில், பிரதோஷ காலத்தில், ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி வரவும். அதியற்புத பலன்கள் கிட்டும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1-4, 7-10, 15-17, 23-25, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 11 இரவு முதல், 12, 13, 14 காலை வரை.

கும்பம்

(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

ஜென்மச் சனியின் ஆரம்பப் பகுதியில் நீங்கள் இருக்கின்றீர்கள்! ஏழரைச்
சனி என்றாலே, அனைவருக்கும் அச்சம்தான் !! இருப்பினும், கும்பம், சனி பகவான் உகந்த ஆட்சிவீடாகும். ஆதலால், பிரச்னைகள் அளவோடு இருக்கும்.

ஜென்ம ராசியில் சனியுடன் சூரியனும் சேர்ந்திருப்பது, உஷ்ண சம்பந்தமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். நரம்புகள், ரத்தம், இதயம் ஆகியவை சூரிய பகவானின் ஆதிக்கத்தில் உள்ளதால், அதிக உழைப்பையும், தேவையற்ற கவலைகளையும், உணர்ச்சி வசப்படுவதையும் குறைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

திருமண முயற்சிகளில் தவறான வரனை நிச்சயித்துவிடக்கூடும்.
குழந்தைகளின் எதிர்கால நலனைச் சற்று சிந்தித்து வரனை முடிவு செய்வது நல்லது. ஜென்மச் சனியினால் ஏற்படும் தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரங்களை ஜோதிட சாஸ்திரம் கூறியுள்ளது நமது நன்மைக்காகவே! அவற்றுள் சிலவற்றை எமது வாசக அன்பர்களுக்காக, கீழே தந்திருக்கின்றோம்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

சனி பகவானுக்கு, பரிகாரம் மிகவும் அவசியம். 12 சனிக்கிழமைகள், மண் அகலில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ பிரதோஷ காலமாகிய மாலையில், 5 எள் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வந்தால் போதும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1-3, 7-10, 17-19, 24-26, 30.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 14 காலை முதல், 15, 16 இரவு வரை.

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

உங்கள் ராசி நாதனாகிய குரு பகவான், வாக்கு, தனம், குடும்பம் ஆகிய
இடத்தில் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், வருமானத்திற்குக் குறைவிராது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். ஜென்ம ராசியில் ராகு அமர்ந்திருக்கும் நிலையில், ஏழரைச் சனிக் காலம் ஆரம்பித்துவிட்டதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வீண் கவலைகளையும் தேவையற்ற அலைச்சல்களையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

வெளியே செல்லும்போது, எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.
ஏனெனில், சிறு விபத்து ஏற்படக்கூடும். களத்திர ஸ்தானத்தில் கேது நிலைகொண்டிருப்பதால், மனைவியின் உடல் நலனில் கவனம் வேண்டும்.
லாப ஸ்தானத்தில், செவ்வாய் இருப்பதால், பூமி சம்பந்தமான சொத்துக்களால் லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும்.

மாசி மாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

சனிக்கிழமைகளில், உபவாசமிருப்பது, மிகச் சிறந்த பரிகாரமாகும்.
இயலாதவர்கள், 12 சனிக்கிழமைகள் திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ 5அல்லது 12 நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வந்தால் போதும்.

பலன் தரும் தினங்கள்

மாசி: 1-4, 10-12, 14, 15, 20-23, 27, 28.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி: 16 இரவு முதல், 17, 18 வரை.